தமிழ் இனப்படுகொலையின் பிரதான அத்தியாயம் கறுப்பு ஜூலை: 33 ஆண்டுகள் போனாலும் ஆறாத வடுக்கள்!

675

 

இலங்கையில் கறுப்பு ஜுலை கலவரமாகிய 1983 ம் ஆண்டு இனக்கலவரங்கள் இடம்பெற்று இன்றுடன் 33 வருடங்களாகின்றன. ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் இதில் கொல்லப்பட்டனர். பெரும் எண்ணிக்கையானவர்கள் காயமடைந்தார்கள்.

images-1கொழும்பு நகரில் மற்றும் இலங்கை நாட்டின் தென்பகுதி நகரங்களில் தமிழர்களின் வர்த்தக நிலையங்கள் அடித்து நொறுக்கப்பட்டன.தமிழர்களுக்குச் சொந்தமான ஏராளமான வீடுகள், கட்டிடங்களுக்கு தீ வைக்கப்பட்டன. வீதிகளில் வாகனங்கள் மறிக்கப்பட்டு தமிழர்கள் இருக்கின்றார்களா என்று தேடித் தேடி கலகக்கரார்கள் தமிழர்கள் மீது தாக்குதல் நடத்தினார்கள்.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி தபால் பெட்டிச் சந்தியில் 1983ம் ஆண்டு ஜுலை மாதம் 23ம் திகதி நள்ளிரவுக்குச் சற்று முன்னதாக இராணுவத்தினர் பயணம் செய்த வாகனங்களின் மீது விடுதலைப் புலிகள் நடத்திய வழிமடக்குத் தாக்குதலில் 13 இராணுவத்தினர் அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார்கள்.

ஆயுத மோதல்கள் சிறிய அளவில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெற்றுக் கொண்டிருந்த அந்தக் காலப்பகுதியில் ஒரே தாக்குதல் சம்பவத்தில் 13 இராணுவத்தினர் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சம்பவத்தில் படுகாயமடைந்திருந்த மேலும் இரண்டு படைச்சிப்பாய்கள் பின்னர் மரணமடைந்ததையடுத்து, இந்தத் தாக்குதலில் இறந்த இராணுவத்தினரின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்திருந்தது. ஆயினும் இந்தச் சம்பவத்தில் உடனடியாகக் கொல்லப்பட்ட 13 இராணுவத்தினரே பொதுவாக இதில் உயிரிழந்ததாகக் குறிப்பிடப்படுகின்றது. இறந்த இராணுவத்தினருடைய சடலங்களுக்கு கொழும்பு பொரளையில் உள்ள கனத்தையில் இறுதிக் கிரியைகள் செய்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. இதனை உறவினர்களும், அவர்களைச் சேர்ந்தவர்களும் விரும்பவில்லை. இதனால் அங்கு பதட்டம் ஏற்பட்டது. இது பின்னர் கலவரமாக வெடித்தது.

imagesஎரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றியதைப்போன்று யாழ்ப்பாணத்தில் பௌத்த பிக்கு ஒருவரை உயிரோடு எரித்து விட்டார்கள் என்றும், கொழும்பில் தாக்குதல் நடத்துவதற்காக விடுதலைப்புலிகள் வந்து விட்டார்கள் என்றும் காட்டுத் தீ போன்று பரப்பப்பட்ட வதந்தியையடுத்து, கொழும்பு நகரின் பல இடங்களிலும் ஏனைய பல நகரங்களுக்கும் கலவரங்கள் பரவின.

இந்தக் கலவரங்களில் பலர் வெட்டிக் கொல்லப்பட்டார்கள். சில இடங்களில் குடும்பமாகத் தமிழர்கள் கொல்லப்பட்டதாகவும் செய்திகள் வெளியாயின. 3000 ஆயிரம் பேர் வரையில் கொல்லப்பட்டிருக்கலாம் என்று கணிப்பீடுகள் தெரிவிக்கின்றன. ஆயினும் கொல்லப்பட்ட தமிழர்களின் எண்ணிக்கை அதைவிட அதிகம் என்றே கூறப்படுகின்றது.

நகரப்பகுதிகளில் மட்டுமல்லாமல் கொழும்பு வெலிக்கடைச் சிறைச்சாலையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருந்த தமிழ்kuddymani அரசியல் கைதிகளான குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உள்ளிட்ட 53 பேர் படுகொலை செய்யப்பட்டார்கள்.

இலங்கையின் வரலாற்றில் மிகமோசமான சிறைக்கலவரமாக சிறைச்சாலைப் படுகொலையாக இது பார்க்கப்படுகின்றது. பின்னாளில் பல அரசியல் திருப்பங்களுக்கு வித்திட்டிருந்த இந்த வன்முறைகளில் சம்பந்தப்பட்டவர்கள் எவரும் இதுவரையில் கைது செய்யப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான நிவாரணமும் வழங்கப்படவில்லை என்றே பாதிக்கப்பட்ட பலரும் கூறுகின்றார்கள்.

இந்த வன்செயல்கள் காரணமாக சிங்களவர்கள் மற்றும் தமிழர்களுக்கிடையில் இனரீதியாக ஏற்பட்டிருந்த பிளவை சீர்செய்வதற்குரிய ஆக்கபூர்வமான நடவடிக்கைககளும் பின்னர் வந்த அரசாங்கங்களினால் மேற்கொள்ளப்படவில்லை என்கிற விமர்சனங்கள் இன்றளவும் இருக்கின்றன.

31 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற இந்த வன்முறைகள் குறிப்பிட்ட ஓர் இனத்திற்கு எதிரான அழிப்பு நடவடிக்கையாகவே ஈழத் தமிழ் மக்களால் கருதப்படுகிறது.

ஆதிக்க நெருப்பு தின்ற
அன்றாட ஏழைகளின் இறப்பிற்கு சாட்சி நின்ற
நாள்காட்டியின் சாபமிந்த 
மறக்கமுடியா – கருப்பு ஜூலை!

மனிதக் – கருப்பு மனத்தின் 
கொலைவெறி முற்றி 
முற்றும்; முடியாதோரையே அழித்த 
வரலாற்றுக் கொடுமை – கருப்பு ஜூலை!

சுயநல வெறி சிகப்பாய் ஓடி

தாமிரபரணியின் உடம்பெல்லாம்
பிணங்களாய் மிதந்து –
மனிதமின்மையை மனிதனே நிரூபித்த; 
கறுத்த பேரவலம் – கருப்பு ஜூலை!

காக்கிச் சட்டையில் போதையுற்று 
கொலைகளில் மெடல் அணியத் துடித்து 
கொண்று குவித்த உடல்களின் மீதேறி 
வெற்றி கூப்பாடு போட்ட பாதக வீரர்களின் 
நினைவொழியா –  சோகப் பதிவு; கருப்பு ஜூலை!

மாஞ்சோலைக்கு நீதி கேட்டு போய் 
மரணத்தை மீதப் படுத்திக் கொண்ட 
பாட்டாளிகளின் கதறல்களையும்
நிர்வாணமாய் சரிந்த உடற்கட்டைகளையும்
ஊரெல்லாம் செய்தியாக்கிய – அசிங்கமிந்த – கருப்பு ஜூலை!

பாட்டன் முப்பாட்டன் காலத்திலிருந்தே
அடக்கிக் கொண்டிருந்த வன்மம் வெடித்து, 
உலகின் காதுகளில் –  
அதர்மத்தின் கொடையாளர்களாய்
தமிழனை; தமிழனே பதிந்துக் கொண்ட 
சீர்கேடிந்த; கருப்பு ஜூலை!

தமிழன் தன் வரலாற்றில் 
செம்மொழியை கொண்டதாகவும் 
அந்நியரை வென்றதாகவும் 
எண்ணியதை எல்லாம் பெற்றதாகவும்
உலகத்தை தன் உள்ளங்கையில் அடக்கிக் கொண்டதாகவும் 
எதை வேண்டுமோ எழுதிக் கொள்ளளாம்;
எதை சாதிப்பினும் –
இரக்கம் ஒழித்த இந்த கருப்பு ஜூலை மட்டும் 
கருப்பாகவே பதிவு செய்யப் பட்டிருக்கும்
தமிழனின் கால ஏட்டில்!!

communal_riots

1983.h5

10-burnt-bldgs-1983-reduced

9

544626_481490591878556_1733616607_n

1787_453661928062709_589591259_n

14748_453661791396056_1208848019_n

66707_453662244729344_1991983189_n

69501_453662461395989_1201125484_n

484721_453662451395990_1429170219_n

484724_453662168062685_2001159383_n

530273_453661491396086_1335410650_n

533573_453661381396097_1994066876_n

600538_453661431396092_238223647_n

943559_453662581395977_518205190_n

943566_453661341396101_205319854_n

944515_453662511395984_479742936_n

946245_453662131396022_2074576979_n

969510_453661901396045_1838318721_n

970072_453662331396002_1375049651_n

970072_453662564729312_1191028611_n

970254_453662034729365_65662227_n

971354_453661521396083_1426181835_n

971507_453662301396005_2101982241_n

971512_453662551395980_1180165619_n

971665_453661884729380_346259945_n

988651_453661991396036_839580986_n

993322_453662314729337_1820536869_n

993620_453662138062688_2031231620_n

995127_453661841396051_987155518_n

995414_453661848062717_1031960842_n

996806_453662384729330_221465217_n

998160_453661804729388_813297647_n

998328_453662068062695_1623987226_n

999048_453661348062767_119280121_n

1000380_453662098062692_2085159871_n

1000488_453662011396034_1744324695_n

1001301_453662254729343_327265867_n

1001506_453661878062714_1673842346_n

1002282_453661378062764_1774441415_n

1002390_453661678062734_2099781348_n

1003274_453662024729366_1939655927_n

1003447_453662201396015_2131948831_n

1004059_453661778062724_1949637242_n

1005619_453661724729396_962338949_n

1005990_453661621396073_413851635_n

1005995_453661974729371_136386461_n

1006244_453662144729354_683621051_n

1009767_453662074729361_1742670597_n

1010061_453661924729376_1109362802_n

1011514_453662561395979_1907811141_n

1012868_453661468062755_741804143_n

1013115_453662211396014_1772428606_n

1013977_453661471396088_823468255_n

1014146_453661694729399_504154084_n

1014146_453662248062677_2044304281_n

1016168_453661721396063_502357848_n

1016329_453661434729425_997462540_n

1017340_453661828062719_1205801587_n

1044592_453661561396079_2087274870_n

1044733_453662468062655_350637001_n

1044762_453661744729394_1043444603_n

1044820_453661444729424_849246485_n

1044902_453661611396074_303487864_n

1044941_453661504729418_1934652992_n

1045058_453661581396077_1011825476_n

1045247_453662188062683_186724783_n

1045247_453662344729334_1029396198_n

1069143_453662501395985_642071015_n

1069289_453661594729409_1207601313_n

1069301_453661668062735_1980268754_n

1069302_453661344729434_1727191389_n

1069363_453661501396085_688274516_n

1069413_453661944729374_1300777138_n

SHARE