தமிழ் சினிமா வரலாற்றில் முதல் முறை 6 மாதங்களில் 100 படங்கள் ரிலீஸ் 

523

 இந்த ஆண்டில் ஜூன் மாதம் முடியும்போது 100 படங்கள் தமிழில் ரிலீஸ் ஆகிவிடும். தமிழ் சினிமா வரலாற்றில் இது புது சாதனையாகும். கடந்த சில வருடங்களை மிஞ்சும் அளவுக்கு இந்த ஆண்டு தமிழ் படங்களின் வரத்து மின்னல் வேகத்தில் இருக்கிறது. கோச்சடையான், ஜில்லா, வீரம் போன்ற பெரிய பட்ஜெட் படங்கள் தவிர சிறு மற்றும் நடுத்தர பட்ஜெட் படங்கள் என 85 படங்கள் ரிலீஸ் ஆகி இருக்கிறது. இம்மாதம் மஞ்சப்பை, முண்டாசுப்பட்டி, மெல்லிசை, நான்தான் பாலா, அரிமா நம்பி, பூலோகம், ஜிகர்தண்டா, சைவம், திருமணம் எனும் நிக்காஹ், அரண்மனை உள்ளிட்ட மேலும் 15 படங்கள் வெளியாக உள்ளதாக தெரியவருகிறது. தியேட்டர்கள் பற்றாக்குறை மேலும் சில காரணங்களால் கடந்த மாதங்களில் சில படங்கள் வெளிவராமல் தள்ளிப்போனது. அதுபோல் பிரச்னை எதுவும் இல்லாவிட்டால் இம்மாதத்தில் 15 படங்கள் வெளியாக வாய்ப்புள்ளது.

இது ஜூன் மாதம் முடிவில் 100 படங்கள் ரிலீஸ் என்ற எண்ணிக்கையை பூர்த்தி செய்யும் என்று ஒரு திரைப்பட வினியோகஸ்தர் தெரிவித்தார். இதுவரை தமிழ் சினிமா வரலாற்றில் ஆறே மாதங்களில் 100 படங்கள் ரிலீஸ் என்ற சூழல் ஏற்பட்டதில்லை. வழக்கமாக ஒரு ஆண்டுக்கு 120 முதல் 140 படங்கள் வரை ரிலீசாகும். கடந்த ஆண்டு அதிகபட்சமாக 170க்கு அதிகமான படங்கள் வெளிவந்தன. அதையெல்லாம் மிஞ்சும் வகையில் இப்போது ஆறு மாதங்களிலே தமிழ் சின¤மா செஞ்சுரி அடிக்க உள்ளது.

SHARE