தமிழ் தேசியம் பேசியவர்களுக்கு நடந்தது என்ன?

364

 

தமிழ் தேசியம் பேசியவர்களுக்கு நடந்தது என்ன?

தமிழ் தேசியம் பேசியவர்கள் உயிருடன் இல்லை. 

இன்று பலராலும் தமிழ் தேசியம் என்று பேச்சளவில் பேசப்படுகின்றதே தவிர, செயலளவில் இல்லை. என்று தான் கூறவேண்டும் காரணம் இன்றைக்கு 6 வருடங்கள் பின்நோக்கி பார்க்கின்ற போது விடுதலைப் புலிகளின் ஏக பிரதி நிதிகளாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு செயற்பட்டு வந்தது. இதன் போது தமிழ்தேசியத்திற்காக குரல் கொடுத்தவர்கள் குரல் வளை நசுக்கப்பட்டு சுட்டுக்கொல்லப்பட்டனர். கேட்டால் இனம் தெரியாதோர் தான் இதை செய்தார்கள் என்றும் கூறப்பட்டது. அது அல்ல உண்மை இக்கொலைகள் அனைத்தும் யாரால் செய்யப்பட்டன என்று தமிழ் மக்களுக்கும் தெரியும்.

DSC03580

அரசாங்கத்திற்கும் தெரியும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அன்றைய மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் அமரர் யோசப்பராசிங்கம், 25.12.2005 அன்று புனித மேரி தேவாலயத்தில் பிரார்த்தனைக்காக சென்ற போது இனம் தெரியாதோரினால் தேவாலயத்திலேயே வைத்து சுட்டுக்கொள்ளப்பட்டார். இவர் கிழக்கு பகுதியில் மட்டும் அல்ல இலங்கை தமிழ் மக்கள் அனைவருக்குமே ஒரு தூணாக விளங்கினார். விடுதலை போராட்டத்தையும் ஆதரித்து பேசிய இவருக்கு நடந்தது என்ன?

Mamanithar-raviraj

அந்த வரிசையில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் இவர் ஒரு சட்டத்தரணி அத்தோடு தென் இலங்கை மக்களையும் வடபுல மக்களையும் ஒன்றினைக்கும் செயற்பாடுகளை காய்நகர்த்தி வந்தார். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவோரை தனது வாதாட்ட திறமையால் வாதாடி விடுதலையும் பெற்றுக் கொடுத்தார். இவருக்கும் விடுதலைப்புலிகளுக்கும் நெருங்கிய தொடர்புகள் இருந்து வந்தன. தமிழ் தேசியம் பற்றி இவர் பேசாத மேடைகள் இல்லை.

ரவிராஜ் அவர்கள் தனது கொழும்பு அலுவலகத்தில் இருந்து வேலை செய்து விட்டு வீட்டுக்கு திரும்பிய போது இவரது மெய்ப்பாதுகாவலரும் இவரும் 10.11.2006 அன்று சுட்டுக் கொல்லப்பட்டனர். தமிழ் தேசியம் பேசிய ரவிராஜ்க்கு நடந்தது என்ன?

ஊடகவியலாளர் நடேசன் 2004ம் ஆண்டு 31ம் திகதி மட்டக்களப்பில் தனது வீட்டிலிருந்து வேலைக்குச் சென்று கொண்டிருந்த போது சுட்டுக்கொல்லப்பட்டார்.

nadesan_a

நீண்ட காலமா கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு மேல் ஊடகத்துறையில் கடமையாற்றி வந்தார். இவருடைய பணிக்கு சாஹித்திய விருது, ஊடகவியலாளர் விருது, ஆளுநர் விருது போன்ற பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டமை சிறப்பம்சமாகும்.

20 வருடங்களுக்கு மேல் வீரசேகரி பத்திரிகையில் செய்தியாசிரியராக நெல்லை நடேசன்’ என்ற பெயரில் எழுதி வந்தார். அது மட்டுமின்றி B.B.C வானொலி, சக்தி வானொலிக்கும் பல ஊடகங்களுக்கும் தனது இறுதி மூச்சுவரை செய்திகளை வழங்கியிருந்தார். என்பது குறிப்பிடத்தக்கதாகும். மட்டக்களப்பு மட்டுமன்றி இன அழிப்பை அதிகம் கொண்ட தென் தமிழீழ இனப்படுகொலை பற்றிய விபரங்களையும் துல்லியமான முறையில் கரிசனை கொண்ட வழங்கியிருந்தார். இவரின் மறைவிக்குப் பின் நாட்டுப்பற்றாளர் என்ற விருது விடுதலைப்புலிகளால் வழங்கப்பட்டது. இவரும் தமிழ்தேசியம் பற்றி எழுதுவதில் சிறந்த வல்லுநராக காணப்பட்டார். கடைசியில் இவருக்கு நடந்தது என்ன?

ஏப்ரல் 28.2005 ஆம் ஆண்டு ஊடகவியலாளர் சிவராம் கடத்திச்செல்லப்பட்டு பாராளுமன்றத்திற்கு அருகில் உயர்பாதுகாப்பு வலயப் பிரதேசத்தில் சுட்டுக்கொல்லப்பட்டு இவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது.

Sivaram_003-720x480

கொழும்பு உயர் நீதிமன்றம் 5 ஆண்டுகளுக்குப் பின்னர் வழக்கு ஜுன் 28 அன்று விசாரணைக்கு எடுக்கப்பட்டது. சந்தேகநபர் என்று கருதப்படும் பீற்றர் என்று அழைக்கப்படும் ஆறுமுகம் சங்கரராஜா என்று அடையாளம் காணப்பட்டார். இவர் ஒரு தமிழ்போராளி குழுவின் உறுப்பினர் என பொலிசார் அடையாளம் கண்டனர். கொல்லப்பட்ட சிவராம் உள்ளுர், வெளியூர் ஊடகங்களிலும் தமிழ் நெற் இணையத்தள ஆசிரியராகவும் கடமையாற்றினார். இவர் ஆய்வுக்கட்டுரைகள் எழுதுவதில் தலைசிறந்த வல்லுநராக காணப்பட்டார். இவரது புணைப்பெயர் தராக்கி என்றும் அழைப்பர். பேச்சில் ஆளுமை ஆற்றல் கொண்டவர். சண்டை உத்திகளை முற்கூட்டியே நன்கு விளங்கி எழுதக்கூடியவர். தமிழ் தேசியத்திற்காக இவரும் அரும்பெரும் பாடுபட்டார். கடைசியில் இவருக்கு நடந்தது என்ன?

மயில்வாகனம் நிமல்ராஜன் இவர் யாழ்ப்பாணத்தில் வசித்து வந்தார். லண்டன் B.B.C யின் சிறந்த செய்தியாளருமாவார். இலங்கையில் நடைபெற்ற யுத்த செய்திகளை துல்லியமான முறையில் உலக நாடுகளுக்கு எடுத்துரைத்தார்.

nimalarajan1_CI

தமிழ் தேசியம் பேசுவதில் இவரும் ஒரு வல்லுநர். இவருக்கும் நடந்தது என்ன?

எமது சகோதர இனத்தைச் சேர்ந்த வசந்தவிக்கிரமசிங்க. இவர் ஒரு சிறந்த ஊடகவியலாhளர். சமாதான பேச்சுவார்த்தைகளிலும் கலந்து கொண்டவர். தமிழ் தேசியம் பற்றி வானொலி தொலைக்காட்சி மூலமாக எடுத்துரைத்தார். பல அரசியல் வாதிகளை தமிழ் ஈழம் தொடர்பாகவும் தமிழ் தேசியம் தொடர்பாகவும் நேர்காணல் கண்டவர்;. இவரின் ஊடகத்திறமையினால் இவருக்கு பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன.

lasanthanewsfirst

2009 ஆம் ஆண்டு ஆரம்பக்கட்டத்தில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவர் ஒரு அனுபவம் மிக்க ஊடகவியலாளராவார். கடைசியில் நடந்தது என்ன?

அது மட்டுமன்றி இருவரையிலும் 30ற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர். இவர்களை படுகொலை செய்தவர்கள் யாரென்று தெரிந்தும் தண்டனைகள் வழங்கப்படவுமில்லை. இழக்கப்பட்ட உயிர்களுக்காக நீதி கிடைக்கவுமில்லை. இதுவே இன்று நிலவுகின்ற உண்மைத்தன்மையாகும்.

தமிழ்த் தேசியத்திற்காக உழைத்தவர்கள் தமிழத் தேசியக்கூட்டமைப்பிலும் இல்லை.

kisoor1 (1)

தமிழ் தேசியக்கூட்டமைப்பு என்பது தமிழீழ விடுதலைப்புலிகளின் 2004அம் ஆண்டு அதன் அங்கத்தவர்கள் நியமிக்கப்பட்டு அதன் வேட்பாளர்கள் நியமிக்கப்பட்டு தமிழ் தேசியம் என தமிழ் தேசியம் பேசி வடகிழக்கில் பொதுத் தேர்தலில் அமோக வெற்றியீட்டினர். அப்பொழுது விடுதலைப்புலிகளினால் நியமிக்கப்பட்ட கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தங்கேஸ்வரி, பத்மினி சிதம்பரநாதன், கஜேந்திரன், செல்வராஜா கனகரட்ணம், சிவநாதன் கிஷோர் இவர்கள் அத்தனை பேரும் தற்போது தமிழ் தேசியக்கூட்டமைப்பிலிருந்து விலக்கப்பட்ட நிலையில் தமது அரசியல் இருப்பை பாதுகாத்துக்கொள்ள வேறு கட்சிகளில் போட்டியிடுகின்றனர்.

kajenthiran

சிலர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர். இதற்கான காரணம் என்ன? இவர்கள் தமிழ்தேசியக்

thankeswari

கூட்டமைப்பில் இருந்த காலகட்டத்தில் தமிழ் மக்களின் உரிமைக்காக பல்வேறு சந்தர்ப்பங்களில் குரல் கொடுத்து வந்தனர். தமிழ் தேசியம் தொடர்பிலும் இவர்களின் பேச்சிலும் ஆளுமை காணப்பட்டது.

download

2007 – 2008 காலப்பகுதிகளில் இந்தியாவின் பிரதமர் மன்மோகன்சிங்கினை சந்திக்க சென்ற தமிழ்தேசியக் கூட்டமைப்பினர் பத்மினி, கஜேந்திரன் இருவரையும் விடுதலைப்புலிகள் எனக் காரணங்காட்டி அந்தச் சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டது. வவுனியா பிரதேசத்தைப் பொறுத்தவரையில் சிவநாதன் கிஷோர் கூட்டமைப்பில் இருந்த காலப்பகுதியில் பல அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டார் என்பதும் விசேட அம்சமாகும்.

b81e007a7152e0f0

அதே போல் கட்சியிலிருந்த ஏனைய உறுப்பினர்களும் தமிழ்த்தேசியத்திற்காக பல்வேறு கோணங்களில் குரல் எழுப்பினர்.

ஆனால் கடையில் இவர்களின் நிலைமை கவலைக்கிடமாகவே மாறியது. அதனால் தான் அவர்கள் இன்று தங்களுடைய இருப்பை தக்க வைத்துக்கொள்வதற்காக தமிழ் தேசியம் பேசுவதிலிருந்து

G.Ponambalam_0

சற்று ஒதுங்கி வாழ்கின்றனர். ஆனால் இவர்கள் உள்மனதில் என்ன இருக்குமோ என்பது கேள்விக்குறிதான்.

இன்னும் தமிழ்தேசியம் பற்றியும் தமிழ் விடுதலை பற்றியும் பேசுகிறவர்கள் ஒன்றை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். முப்பது வருடகால போராட்டத்தில் தமிழ் தேசியம் பேசி வென்ற வரலாறுகள் இல்லை. முற்றுமுழுதாக தமிழ்தேசியத்திற்காகவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காகவும் தம்மை அர்ப்பணித்துக்கொண்ட பிரபாகரன் உட்பட ஏனைய போராளிகளின் நிலைமைகளையும் நாம் சற்று நிதானமாக சிந்தித்து செயற்படுவதன் கட்டாய தேவைக்குள் எம் தமிழினம் தள்ளப்பட்டுள்ளது.

இன்று தமிழ் மக்களின் வாக்கினைப் பெற்றுக்கொள்ள பல்வேறு கட்சிகள் தமிழ் தேசியம் பேசுவதென்பது இக்காலகட்டத்தில் வேடிக்கைக்குரிய விடயமாகும். எமக்குரிய உரிமைகளை நாம் பாராளுமன்றத்தில் கேட்டுப்பெற்றுக்கொள்வதைத் தவிர தமிழ் தேசியம் தமிழீழ விடுதலைப்போராட்டம் என்று மீண்டும் வீர வசனங்களைப் பேசிக் கொண்டு உள்நுழையும் கட்டங்கள் ஏற்பட்டால் ஆரம்பக்கட்டத்தில் தமிழ் தேசியம் பற்றி பேசியவர்களுக்கு நடந்ததென்னவோ எம் தமிழ் இனத்திற்கு வாழையடி வாழையாக தொடரும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

– இரணியன் –

Edit

SHARE