நாட்டின் தற்போதைய அரசியல் குழப்பம் காரணமாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரன் அவர்களை பலரும் பலவாறு திட்டுகின்றார்கள். அதேபோன்று நாமும் திட்டவில்லை. அவரை புறம்போக்கு என்று திட்டுவது போன்று தலைப்பிடுவதனூடாக இதனைப் பலரும் ஆவலுடன் வாசிப்பார்கள் என்பதால் தான் அவரை அவ்வாறு புறம்போக்கு என்று எழுதுகிறோமே தவிர அவர் புறம்போக்கு அல்ல. இவரை குட்டி லக்ஸ்மன் கதிர்காமர் என்றும் அழைப்பர்.
தேசிய தலைவர் பிரபாகரனால் உருவாக்கப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு 2004 ஆம் ஆண்டு 22 ஆசனங்களை தக்கவைத்துக்கொண்டிருந்தது. தமிழினத்துக்கு எந்தவித தீர்வுத்திட்டங்களையும் தந்திடாத சிங்கள பேரினவாத அரசுகள் இடைக்கால நிர்வாகம் ஒன்றை தமிழீழ விடுதலைப்புலிகளிடம் கையளித்து திம்பு முதல் டோக்கியோ வரையான பேச்சுவார்த்தைகள் ஊடாக மேற்கொள்ளப்பட்ட அனைத்து பேச்சுவார்த்தைகளும் அனைத்து ஒப்பந்தங்களும் கிழித்து எறியப்பட்டது. இதனூடாக சிங்கள தலைமைகள் ஒருபோதும் தழிழினத்துக்கு தீர்வினை பெற்றுத்தரப் போவதில்லையென கடந்த 70 வருட காலங்களாக சிங்கள பேரினவாத அரசு இதனையே மேற்கொண்டது. தற்பொழுதும் அவ்வழியையே மேற்கொள்கிறது.
இவ்வாறான சந்தர்ப்பத்தில்தான் தழிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசாங்கத்திற்கு எதிராக தமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருகிறபோதிலும் அவர்கள் மீது ஏனைய தமிழ் கட்சி அரசியல்வாதிகள் குறை கூறும் நிலை மாற்றப்பட வேண்டும்.
கடந்த காலத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்த ஊடக பேச்சாளர் சுரேஸ் பிரேமசந்திரன் அவர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பிலிருந்து எதை சாதித்தார். அது போன்று 5 வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலம் என்ன சாதித்தார். எல்லோரும் பதவி அந்தஸ்தில் இருக்கும் வரை தமிழ் மக்களை பற்றி சிந்திக்கவில்லை. பதவி அவர்களை விட்டு சென்றவுடன் தமிழ் மக்களின் காவல் தெய்வம் தாம் தான் என பிதட்டுகிறார்கள்.
தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் போராடித்தான் பெற்றுக்கொள்ள வேண்டும், வேறு வழியில்லை, தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைமையை மாற்ற வேண்டுமென்று பிதட்டுகின்றார்கள். போரின் இறுதிக்கட்டத்தில் தமிழ் மக்களுக்கான இனப்படுகொலை இலங்கை அரசினால் மேற்கொள்ளப்பட்ட போது ஓடி ஒழிந்த இவர்கள் அந்த போராட்டத்தை நிறுத்துவதற்காக சத்தியாகிரக போராட்டங்களை கூட நடத்தவில்லை. சுமந்திரன்(MP) அவர்களுக்கு தூபம் காட்டுவதற்காக இந்த கட்டுரையை எழுதவில்லை. முன்பிருந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தமிழ்தேசிய கூட்டமைப்பிற்கு என்ன செய்தார்கள் என்றே நாம் குறிப்பிடுகின்றோம். உரிமை போராட்டமும் அபிவிருத்தியும் எந்தவொரு நாட்டிலும் சமமாக சென்ற வரலாறு இல்லை.
இப்படி இருக்க ஒருசாரார் உரிமை போராட்டத்தை செய்திருக்க வேண்டும். அந்த உரிமை போராட்டத்தை செய்த தமிழீழத்தை காட்டிக்கொடுத்த பலர் இன்று தேசியம் பேசுகிறார்கள். E.P.R.L.F கட்சியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழர் விடுதலைக் கூட்டத் தலைவர் ஆனந்த சங்கரி போன்றவர்களையும் ஒன்றாக இணைத்து செயற்படுவதன் ஊடாக பாரிய சக்தியாக தமிழ் தரப்பு மாற்றம் பெறும்.
வடக்கிலும், கிழக்கிலும் தமிழ் மக்களின் பெரும்பான்மை நிரூபிக்கப்படுகின்ற அரிய சந்தர்ப்பங்களை நழுவவிட்டுவிட்டு தற்பொழுது தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராகவும், உறுப்பினர்களுக்கு எதிராகவும் துரோகிகள் என்றும், அரசாங்கத்தின் கைக்கூலிகள் என்றும் கூறுவது என்பது ஏற்றுக்கொள்ளப்படமுடியாத ஒன்று. சுமந்திரனை(MP) பொறுத்தவரையில் ஒரு சட்டத்தரணி.வாதிடும் திறமையை கொண்டவர். அனைத்து தரப்பினரையும் சமாளிக்கும் ஒரு ஆற்றல் அவருக்கு இருக்கிறது. தற்பொழுது இருக்கின்ற தமிழ் தேசிய பாராளுன்ற உறுப்பினர்களுள் எவருக்கு அவ்வாறான தகுதி இருக்கிறது. ஏனைய பாராளுமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் கொழும்பிலிருந்து தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினரும் பாராளுமன்ற உறுப்பினருமான சம்பந்தன் உடன் இருந்து ஆலோசனைகள் வழங்குமான தைரியமும் அவர்களுக்கு இல்லை. நிலைமை இவ்வாறு இருக்கும் பொழுது எப்படி இவர்கள் இராஜதந்திரிகளுடன் பேசி தமிழ் மக்களுக்கான தீர்வுகளைப் பெற்றுத்தாப் போகிறார்கள். பகைமைகள் கலைந்து தமிழ்தேசிய கூட்டமைப்புடன் ஒன்றிணைந்து செயற்படுவதே சிறந்த வழியாகும். இதனை விடுத்து தமிழ் தேசிய கூட்டமைப்பை தொடர்ந்தும் விமர்சித்துக்கொண்டிருப்பவர்கள் புறம்போக்குகளாக இருக்கிறார்கள் என்பதே திட்டவட்டமான உண்மை.