வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்தில் லஞ்ச ஊழல் நடைபெறுவதாக சுட்டிக் காட்டியுள்ள அதிரடி இணையத்தளம் ஆகிய நீங்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் . ஒரு பாடசாலையின் மீது தனி நபர் பிரச்சனைக்காய் ஒட்டு மொத்த மாணவ சமுதாயத்தையும் ஆசிரியர்களையும் இழிவு படுத்தும் செயலானது அநாகரிகமற்றது
உயர் மட்ட கல்வி அமைச்சில் உள்ளவர்கள் எத்தனை எத்தனை விதமாக இலஞ்ச ஊழல்கள் செய்கின்றனர் . காரணம் இவர்கள் அனைவரும் பெரும் புள்ளி உடையோர் .சிங்கள பேரினவாதிகளாக அங்கம் வகிப்பவர்கள் . இவர்களை தட்டிக்கேட்க துப்பில்லாத நீங்கள் ஒரு பாடசாலை அதிபரின் பெயரை அபகீர்த்தி செய்வதினுடாக உங்கள் இணையத்தள மூலம் எதை சாதித்து விட்டீர்கள் உங்களுக்கு எதிராக பாடசாலை நிர்வாகம் மாணவ சமுதாயம் ஆர்ப்பாட்டங்களை மேற்கொண்டால் என்ன செய்யப்போகிறீர்கள் .
தமிழனை தமிழனே காட்டிக் கொடுத்து சிங்கள பேரினவாத கட்சிகளுக்கு ஒத்துக்கொடுத்த வரலாற்றையே நீங்களும் செய்கின்றீர்கள்.
தனிநபர் பிரச்சனை என்பது வேறு ,பாடசாலை பெயருக்கு கலங்கம் விளைவிப்பது வேறு ,அரசியல்வாதிகளுடன் மோதுவது வேறு பாடசாலை மட்டங்களை அரசியல் மயம் ஆக்காதீர்கள்
தமிழ் ஊடகம் என்பது நடுநிலை வகிப்பதோடு கல்வி சமுகத்தில் கை வைக்கக் கூடாது . இன்று பாடசாலைகளை கொச்சைப்படுத்தி , மாணவர்களை கிண்டல் செய்து ஆசிரியர்களை பழிவாங்கி எந்த நாட்டிலும் என்ன சாதித்தார்கள் என்பதை அதிரடி இணையத்தளம் புரிந்து கொள்ள வேண்டும்.
ராக்கிங் செய்யக் கூடாது என்பது அரசாங்கத்தில் உத்தரவு உண்டு . எந்த பல்கலைக்கழகத்தில் ராக்கிங் செய்யாது இருக்கிறார்கள். ஏன் அரசாங்கத்தால் கூட கட்டுபடுத்த முடியாத நிலை உள்ளது . நீங்கள் தனி ஒருவராய் நின்று எதை சாதிக்கப் போகிறீர்கள்.
அமைச்சர்கள் பிரதி அமைச்சர்கள் என்று எப்படி எப்படி எல்லாம் ஊழல் செய்கின்றார்கள் இவற்றை எல்லாம் தட்டிக் கேட்க துப்பில்லாத நீங்கள் புள்ளப்பூச்சிகளை அடிக்கும் விளையாட்டை நிறுத்துவது நல்லது.
உங்களை போன்றவர்கள் எம் தமிழ் இனத்தையும் அதன் இரகசியங்களையும் தலைவர் பிரபாகரன் சொன்னது போன்று காட்டிக் கொடுத்து பிழைப்பு நடத்துகிறீர்கள்.
ஊடகத்தில் முன் உதாரண புருசர்களை பாருங்கள் டி.சிவராம் ,பா.நடேசன் ,நிமலாராஐன் ,சசிதரன்,அற்புதன், லசந்தவிக்கிரமசிங்க , ரா.துரைரட்ணம், வீ.சு.கதிர்காமத்தம்பி இவர்கள் பேனாமுனை எதற்கும் அஞ்சாதது. பாடசாலையைப்பற்றியும் கோவில் திருவிழா பற்றியும் காதல் தொடர்பாக எழுதினார்களா? . பிரபல்யமான ஊடகவியளார்களாக இன்றும் திகழ்கிறார்கள் . அவர்கள் அரசியலில் ஆழ ஊன்றி கால் பதித்தவர்கள். எத்தகைய சவால்களுக்கும் முகம் கொடுத்தவர்கள்
தமிழ் இலத்திரனியல் ஊடகம் முதல் முதலில் இலங்கையில் அறிமுகப்படுத்தியவர்கள் என்ற பெருமை டி.சிவராமையே சாரும் ஆகவே இலத்திரனிய ஊடகங்கள் என்பது தமது அரசியல் பிழைப்புக்காக தமிழ் மக்களின் மானத்தை விற்று பிழைப்பு நடத்தக் கூடாது . அதை விட பிச்சை எடுப்பது மேல்
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு மேம்பாலம் அமைப்பதற்கு அரசில் இருந்து நிதி ஒதுக்கப்பட்டது. ஆனால் அப்பிரதேசத்தில் மேம் பாலம் கட்டப்படவில்லை குறிப்பாக முஸ்ஸிம் அமைச்சர் ஒருவர் தனது பிரதேசத்திற்கு அந்த மேம்பாலம் அமைத்துள்ளார் . இதன் பிண்ணனி என்ன என்பதை ஆராய்ந்து எழுதுவது சிறந்தது .
உங்கள் வருங்கால சந்ததியினர் கல்வி கற்று வெளியேறும் பாடசாலை என்பதை மறந்து விடக் கூடாது .
இது தொடர்பில் இவ் இணையத்தளம் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என பழைய மாணவர்கள் சங்கம் ஆகிய நாங்கள் கேட்டு கொள்வதோடு அவ்வாறு மன்னிப்பு கேட்க தவறும் பட்சத்தில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு உயர் மட்ட குழுவில் தீர்மானித்து உள்ளோம் என்றும் குறிப்பிட்டு உள்ளனர்.