தலவாக்கலையில் விபத்து – நான்கு பேர் பலத்த காயம்

442
அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் தலவாக்கலை சென்கிளயார் விகாரைக்கு அண்மித்த பகுதியில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் படகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேற்படி விபத்து இன்று காலை இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கார் ஒன்றும் முச்சக்கரவண்டி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதினாலேயே மேற்படி விபத்து இடம்பெற்றுள்ளதுடன் காயமடைந்த நான்கு பேர் பலத்த காயங்களுடன் கொட்டகலை வைத்தியசாலைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.லிந்துலை பாமஸ்டன் பகுதியிலிருந்து கொட்டகலை நோக்கி பயணித்த முச்சக்கரவண்டி ஒன்றும் கொழும்பிலிருந்து நுவரெலியா பகுதியை நோக்கி பயணித்த கார் ஒன்றுமே இவ்வாறு மோதியுள்ளதாகவும் பொலிஸாரின் முதற்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

கார் சாரதியின் கவனயீனம் காரணமாகவே இவ்விபத்து நேர்ந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

SHARE