தலையணையை கட்டிப்பிடித்து கொண்டு தூங்குவது என்பது மனநிலைக்கு மிகவும் நல்லது என்பது யாருக்கு தெரியுமோ தெரியாதோ கட்டிப்பிடித்து தூங்குபவர்க்கு நிச்சயம் தெரியும்; புரியும்.
அதே சமயம், தலையணையைப் போல உங்கள் மொபைல் போனை கட்டிப்பிடித்துக் கொண்டும், நெஞ்சில் வைத்துக்கொண்டும், தலையனைக்கு அடியில் வைத்துக் கொண்டும் தூங்குவது என்பது எவ்வளவு மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று உங்களுக்கு தெரியுமா ? தெரிந்து கொள்வோம் வாருங்கள்..!
புற்றுநோய்:
மொபைல் போனை அருலேயே வைத்துக் கொண்டு உறக்கம் கொள்ளும் பழக்கம் கொதிறுந்தால் புற்றுநோய் வருவதற்க்கான வாய்ப்பும் உண்டு.
ரேடியேஷன்:
மொபைல்போன்களில் இருந்து வெளியேறும் ரேடியேஷன் ஆனது மூளை மற்றும் பிற உடல் பாகங்களில் புற்றுநோய் வருவதற்க்கான வாய்ப்புகளை உண்டாக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதய பாதிப்புகள்:
மொபைல் போனிலிருந்து வெளியேறும் ரேடியேஷன் ஆனது புற்றுநோய் பாதிப்புகளை மட்டுமின்றி இதயத்தையும் பாதிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
மார்பக புற்றுநோய்:
குறிப்பாக மார்போடும், மார்பின் அருகிலேயும் மொபைல் போன்களை வைத்துக்கொண்டு தூங்கும் பெண்களுக்கு மார்பக புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகம்.
தீ:
மொபைல் போன்களால், உங்கள் தலையணை தீப்பற்றிக்கொள்ளும் வாய்ப்பு இருக்கிறது.
ஓய்வில் பாதிப்பு:
இரவு என்பது ஓய்வு கொள்ளும் நேரம், உறக்கம் கொள்ளாமல் ஃபேஸ்புக், வாட்ஸ்ஆப் நோட்டிபிக்கேஷன்களை பார்த்துக்கொண்டே இருந்தால் உடலுக்கு தேவையான ஓய்வில் குறையும் பாதிப்பும் ஏற்படும்.
அலாரக்கடிகாரம்:
அலாராத்திற்காக மட்டும் தான் மொபைல்போனை தலையணை அருகே வைக்கிறீர்கள் என்றால், அதற்கு பதிலாக நீங்கள் ஒரு அலாரக்கடிகாரம் வாங்கி விடுவதே நல்லது.