மணி ரத்னம் இயக்கத்தில் ரஜினிகாந்த் மற்றும் மம்மூட்டி இணைந்து நடித்து கடந்த 1991ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் தளபதி. இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்திருந்தார்.
மக்கள் மத்தியில் மாபெரும் அளவில் வெற்றியடைந்த இப்படம் இன்று வரை தமிழ் சினிமாவின் கல்ட் திரைப்படமாக பார்க்கப்படுகிறது. குறிப்பாக இப்படத்தில் வரும் சூர்யா – தேவா நண்பர்கள் காட்சி 90ஸ் கிட்ஸ் துவங்கிய 2K வரை இடம்பிடித்துள்ளது.
இப்படத்தில் தனது நண்பன் தேவா கூறிய ஒரே காரணத்திற்காக பானுப்ரியா மற்றும் அவருடைய மகளை தனது மனைவி மற்றும் மகளாக ரஜினிகாந்த் ஏற்றுக்கொள்வார். அந்த குழந்தைக்கும், ரஜினிக்கும் இடையிலான காட்சிகள் மிகவும் எமோஷனலாக இருக்கும்.
ரஜினியின் மகளா இது
தளபதி படத்தில் நடித்த அந்த குழந்தை பிரபல நடிகை பேபி விசித்ரா ஆவார். இவர் ரஜினியின் தளபதி மட்டுமின்றி அஜித்தின் ஆசை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், ரஜினிகாந்தின் மகளாக தளபதி படத்தில் நடித்திருந்த பேபி விசித்ராவின் லேட்டஸ்ட் புகைப்படம் வெளியாகியுள்ளது. அவருடைய லேட்டஸ்ட் போட்டோவை பார்த்த ரசிகர்கள் பலரும், அந்த குழந்தை நட்சத்திரமாக நடித்தவரா இவர் என கேட்டு வருகிறார்கள்