தளபதி 69! விஜய்க்கு 250 கோடி சம்பளம்.. 100% சதவீதம் உறுதி செய்யப்பட்ட இயக்குனர், படப்பிடிப்பு எப்போது தெரியுமா

102

 

நடிகர் விஜய் தற்போது அரசியலுக்கு செல்லவிருக்கும் காரணத்தினால் திரையுலகில் இருந்து விலக முடிவு செய்துள்ளார். தளபதி 69 தான் தன்னுடைய கடைசி படம் என்றும் அவர் அறிவித்துள்ளார்.

ஆனால், இதுவரை அப்படத்தின் இயக்குனர் யார் என தகவல் வெளியாகவில்லை. திரை வட்டாரத்தில் ஹெச். வினோத் தான் விஜய்யின் கடைசி படத்தின் இயக்குனர், 100% சதவீதம் உறுதியான தகவல் என பேசப்பட்டு வருகிறது.

சம்பளம் – படப்பிடிப்பு
விரைவில் இதற்கான அறிவிப்பு விஜய் தரப்பில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் இதற்கான அறிவிப்பு விஜய் தரப்பில் இருந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இப்படத்திற்காக நடிகர் விஜய் ரூ. 250 கோடி சம்பளம் வாங்கவுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்கும் என கூறப்படுகிறது. அன்று துவங்கி, இந்த வருடத்தின் இறுதிக்குள் படப்பிடிப்பு முடிவுக்கு வரும் என்கின்றனர்.

மேலும் 2025ஆம் ஆண்டு இடையில் தளபதி 69 திரைப்படம் வெளிவரும் என சொல்லப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பை முடித்த கையோடு, தளபதி விஜய் முழுமையாக அரசியலில் ஈடுபடப்போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE