தவறிக்கூட இந்த வார்த்தைகளை கூகுளில் தேடிவிடாதீர்கள்! தண்டனை கிடைக்கும் அபாயம்

148

 

கூகுளில் சில வார்த்தைகளை தேடினால் தண்டனை கிடைக்கும் அபாயம் உள்ளது.

தகவல்களை அள்ளிக்கொடுக்கும் கூகுளை நாம் அன்றாட வாழ்வில் பல விடயங்களுக்கு பயன்படுத்தி வருகிறோம்.

எதைப் பற்றி தகவல் வேண்டும் என்றாலும், கூகுளில் வார்த்தையை இட்டு தேடினால் எண்ணற்ற தகவல்களை நாம் பெறலாம்.

ஆனாலும் ஒரு சில வார்த்தைகளை மறந்தும் கூட கூகுளில் தேட கூடாது என்பதை தெரிந்துகொள்ளுங்கள். சில விடயங்களை நீங்கள் கூகுளில் தேடினால் சிறை தண்டனை விதிக்கப்படும் அபாயம் உள்ளது.

உதாரணமாக, வெடிகுண்டு தயாரிப்பது என்று கூகுள் தேடுவது சட்டவிரோதம் ஆகும். மறந்தும் கூட இதுபோன்ற கேள்விகளை தேடிவிடாதீர்கள்.
இந்தியாவில் சிறுவர் ஆபாசப் படங்களுக்கு கடுமையான சட்டங்கள் உள்ளன. எனவே இதுபோன்ற விடயங்களை தேடினால் தண்டிக்கப்படுவீர்கள். அத்துடன் இதுபோன்ற ஆபாச தளங்களில் உங்கள் கைபேசி அல்லது மொபைல் கணக்கை ஹேக் செய்யக்கூடிய பல்வேறு விடயங்களும் உலா வரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தியாவில் பிறக்கும் முன் குழந்தையின் பாலினத்தை அறிய முயல்வது சட்ட விரோதம். எனவே இதுதொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டாலோ அல்லது இதனுடன் தொடர்புடையதாக கண்டறியப்பட்டாலோ சிறை தண்டனை விதிக்கப்படலாம்.
இணையத்தில் SEO உதவியுடன் ஒரு போலி தளத்தை உருவாக்குவதன் மூலம் மோசடி செய்பவர்கள் இதனைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். இந்த எண்ணை தவறாக அழைப்பதன் மூலம், மோசடி செய்பவர்கள் உங்கள் வங்கிக் கணக்குத் தகவல் திருடப்படக்கூடும்.
மருத்துவரின் ஆலோசனையைப் பெறாமல் அல்லது கலந்து ஆலோசிக்காமல் கூகுளில் மருந்துகளை தேடி, அதனை வாங்கி உட்கொள்ளாதீர்கள். அவ்வாறு செய்தலை சிறைவாசம் இல்லை என்றாலும், மருத்துவமனையை நாட வேண்டிய நிலை ஏற்படும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

SHARE