தாகத்தை மட்டுமல்ல பசியையும் போக்கக்கூடிய போத்தல் உருவாக்கம்

269
ஆண்டு தோறும் பல மில்லியன் தொன் பிளாஸ்டிக் பொருட்கள் உலகெங்கிலும் உற்பத்தி செய்யப்படுகின்றன.இவை பாவனைக்கு உதவாததாக மாறும்போது இயற்கைக்கு பெரிதும் சவாலாக விளங்குவதனால் பிளாஸ்டிக்குக்கு பதிலாக மாற்று திரவியத்தினை கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் ஈடுபட்டுவருகின்றனர்.

இதேவேளை சில பொருட்கள் மாற்று திரவியங்களால் உருவாக்கப்பட்டும் உள்ளன.

இவற்றின் தொடர்ச்சியாக பாசியினை அடிப்படையாகக் கொண்டு நீர் போத்தல் (Water Bottle) ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

மக்கக்கூடிய தன்மையை உடைய இப் போத்திலானது நீர் உள்ள சமயம் பெரிதாகவும், நீர் அற்ற சமயங்களில் சுருங்கியதாகவும் மாறக்கூடியது.

தவிர இப் போத்தலை பாவித்து முடித்ததும் உணவாக உட்கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE