தானியங்கி கார்களை அறிமுகம் செய்யவுள்ளது BMW

281

உலகத் தரம் வாய்ந்த கார்களை உற்பத்தி செய்வதற்கு பெயர் போன நிறுவனம்BMW ஆகும்.

இந் நிறுவனம் தானியங்கி கார்களையும் உற்பத்தி செய்து அறிமுகம் செய்யவுள்ளதாக அந் நிறுவனத்தின் தலைமை நிறைவேற்று அதிகாரி தெரிவித்துள்ளார்.

இப் புதிய காருக்கு i NEXT எனும்பெயர் சூட்டப்பட்ட நிலையில் 2021ம் ஆண்டில் வீதிகளில் பயணிக்கும் என அவர் உறுதிபடக்கூறியுள்ளார்.

இதேவேளை கூகுள், Tesla மற்றும் Volvo உட்பட சில நிறுவனங்கள் ஏற்கனவே தானியங்கி கார்களை வடிவமைத்து பரிசோதனைக்கு உட்படுத்தி வருகின்றன.

Volvo நிறுவனம் சீனா மற்றும் ஐக்கி இராச்சியத்தில் தானியங்கி கார்களுக்கான ஆராய்ச்சிகளை விரிவுபடுத்தியுள்ளது.

இப்படியானது நிலையில் BMW நிறுவனத்தின் இந்த அறிவிப்பானது தானியங்கி கார் வடிவமைப்பில் மேலும் பல முன்னேற்றங்களை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

SHARE