தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக போன்ற கட்சிகள் நாங்கள் ஆட்சி அமைக்க ஆதரவு தர தயார் என்றால் அந்த ஆதரவை ஏற்போம். தாமாக முன்வந்து எங்களை ஆதரிப்பவர்கள் யாராக இருந்தாலும் அதை நாங்கள் தடுக்கமாட்டோம். அதேசமயம் நாங்களாக சென்று யாரிடமும் ஆதரவு கேட்கமாட்டோம். ஏனெனில் அந்த நிலை எங்களுக்கு ஏற்படாது என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.பாஜக 300-க்கும் அதிகமான தொகுதிகளில் வென்று தனிப் பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைக்கும் என அக்கட்சியின் மூத்த தலைவர் வெங்கய்யா நாயுடு நம்பிக்கை தெரிவித்தார்.
நல்ல வெற்றி வாய்ப்பு உள்ளது:
இது குறித்து அவர் மேலும் கூறுகையி்ல்,சீமாந்திரம் மற்றும் தெலுங்கானாவில் பா.ஜ.க.,-தெலுங்குதேசம் கூட்டணிக்கு நல்ல வெற்றி வாய்ப்பு உள்ளது. எனவே மத்தியிலும் மாநிலங்களிலும் இந்த கூட்டணி ஆட்சியை பிடிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது.எங்களுக்கு 300-க்கும் அதிகமான மக்களவை தொகுதிகளில் வெற்றி கிடைக்கும் என்பதால் நாங்கள் வேறு கட்சிகளின் உதவியை பெற்றுத்தான் மத்தியில் ஆட்சி அமைக்கவேண்டும் என்ற நிலை வராது.
உலக நாடுகள் ஆவல்:
வாராணசி தொகுதியில் என்ன நடக்கிற்து என்பதை அறிய உலக நாடுகள் பலவற்றில் உள்ளவர்கள் ஆவலாக இருக்கின்றனர். அப்படியிருக்கும்போது மோடி பிரசார பேரணி நடத்த தேர்தல் ஆணையம் அனுமதி மறுத்தது பாரபட்சமான செயல்.என்கிறார் வெங்கய்ய நாயுடு.