தாய்லாந்தில் இந்த ஆண்டு அதிக வெப்பமான காலநிலை காரணமாக 30 பேர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. தெற்கு மற்றும் தென்கிழக்காசியா முழுவதும் மில்லியன் கணக்கான மக்கள் கடுமையான வெப்பம் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்தின் பாங்கொக்கில் வெப்பநிலை 52 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.ஷ
நிலவும் காலநிலையை கருத்திற் கொண்டு குறித்த பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதேவேளை பிலிப்பைன்சில் அதிக வெப்ப தாக்கம் காரணமாக இந்தாண்டு இதுவரை 6 பேர் உயிரிழந்ததாக அந்த நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.