ஒரு தாய் தனது 8 மாதக் குழந்தையை தாறுமாறாக அடிப்பது போன்ற வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், இருக்கும் பெண் கஜகஸ்தான் நாட்டில் அலமாதி என்ற பகுதியைச் சேர்ந்தவர். இவர் தந்து 8 மாத குழந்தையை கொடூரமான முறையில் தாக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
அந்த வீடியோவில், உள்ள குழந்தையானது, தொடர்ந்து அழுது கொண்டே இருக்கிறது. அதன் அழுகைக்கான காரணம் அறியாது அந்த பெண்ணானவர் அந்த குழந்தையை கொடூரமாக தாக்குகிறார்.
இந்த வீடியோ குறித்து அறிந்த அப்பகுதி பொலிசார், அந்த வீடியோவில் இருப்பது பொம்மையா, அல்லது உண்மையில் குழந்தை தானா என விசாரணை நடத்தியதில் குழந்தை தான் என உறுதிப் பட தெரிய வந்துள்ளது. இதனால், அப்பெண்னை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தகவலகள் வெளியாகியுள்ளன.
சமீபத்தில் இது போலவே, சென்னையில் ஒரு குழந்தைகள் காப்பகத்தில் காப்பாளினி ஒருவர் தொடர்ந்து அழுதுக் கொண்டே இருந்த குழந்தையை பயங்கரமான முறையில் தாக்கியது குறிப்பிடத்தக்கது.