தாய் சங்கீதாவுடன் இயக்குனர் ஷங்கர் வீட்டு திருமண விழாவில் கலந்துகொண்ட சஞ்சய்.. விஜய் மட்டும் வரவில்லை

115

 

சமீபத்தில் மிகவும் பிரம்மாண்டமான முறையில் நடந்து முடிந்த திருமணம் என்றால் அது ஷங்கர் மகளின் திருமணம் தான். இந்திய திரையுலக நட்சத்திரங்கள் பலரும் இந்த திருமணத்தில் பங்கேற்றனர்.

ரஜினிகாந்த், கமல் ஹாசன், சிரஞ்சீவி, ரன்வீர் சிங், நயன்தாரா, மோகன்லால் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். மேலும் தமிழக முதலவர் ஸ்டாலினும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்.

சங்கீதாவுடன் வந்த விஜய் மகன்
இந்த திருமணத்திற்கு தளபதி விஜய்யின் மனைவி சங்கீதா வருகை தந்திருந்தார். பல வருடங்கள் கழித்து அவரை திருமண விழாவில் பார்க்க முடிந்தது. விஜய்க்கும் சங்கீதாவிற்கும் இடையே சில பிரச்சனைகள் என கிசுகிசுக்கப்பட்டது.

இந்த நிலையில், சங்கீதா மட்டுமே ஷங்கர் மகள் திருமணத்தில் கலந்துகொள்ளவில்லை. அவருடைய மகன் சஞ்சய்யும் தனது தாய் சங்கீதாவுடன் இணைந்து வந்துள்ளார்.

ஆனால், விஜய் மட்டும் கலந்துகொள்ளவில்லை. ஏனென்றால் அவர் Goat படத்தின் படப்பிடிப்பிற்காக ரஷ்யாவில் இருக்கிறார் என கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE