இஸ்ரேல் – ஹமாஸ் பயங்கரவாத அமைப்பினருக்கு இடையே கடந்த 6 மாதங்களுக்கும் மேலாக போர் நீடித்து வருகிறது.
காசாவில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் கடந்த ஒக்டோபர் 7-ம் திகதி இஸ்ரேலுக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். அப்போது ஒரே நாளில் 1,200-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மேலும் 250 பேரை பணய கைதிகளாக அவர்கள் கடத்திச் சென்றனர். இவ்வாறான நிலையிலேயே காசா மீது இஸ்ரேல் போர் தொடுத்துவருகின்றது.
கடந்த சில நாட்களாக இஸ்ரேல், காசா மீதான தாக்குதலை தீவிரப்படுத்தி வரும் நிலையில், இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் அஹ்ரோன் ஹலிவா திடீரெனெ இராஜினாமா செய்துள்ளார்.
கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஹமாஸ் இயக்கத்தினர் நடத்திய தாக்குதலை தடுக்க தவறியதாக அஹ்ரோன் ஹலிவா மீது விமர்சனங்கள் எழுந்த நிலையில், தனது பதவியிலிருந்து அவர் விலகியிருக்கிறார்.