ஜப்பான் நாட்டின் ஆல் நிப்பான் விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கியதும் இறக்கை பகுதியில் இருந்து புகை வெளியேறிய சம்பவம் பயணிகளிடையே பீதியை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த விமானம் இன்று சுமார் 200 பயணிகளுடன் ஷின் சித்தோஷ் விமான நிலையத்தில் தரையிறங்கிய போது இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தையடுத்து விமானத்தில் இருந்து பயணிகள் அவசரம் அவசரமாக வெளியேறினர். ஆனால் பயணிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக ஜப்பான் பொது ஒளிபரப்பு நிறுவனமான என்.எச்.கே. செய்தி வெளியிட்டுள்ளது.
அதில், விமானம் பாதுகாப்பாக தரையிறங்கியபின், இறக்கை பகுதியில் இருந்து புகை வந்ததாகவும், என்ஜினை ஆப் செய்ததும் புகை வந்தது நின்றுவிட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஆயில் கசிவு காரணமாக புகை வந்திருக்கலாம், காக்பிட்டில் உள்ள கட்டுப்பாட்டு அமைப்பில், ஆயில் அழுத்தம் குறைந்ததை காட்டியதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.