திடீரென விலை குறைந்த Samsung Galaxy Tab S8: அதிரடி ஆப்பரில் வாங்கலாம்

134

 

Samsung நிறுவனம் கடந்த ஜூலை மாதத்தில் புதிய Samsung S9 series Tablet-களை அறிமுகம் செய்தது.

இதன் தொடர்ச்சியாக தங்களின் பழைய Samsung S8 series Tablet-களின் விலையை குறைத்தது.

2024-ல் Samsung நிறுவனம் புதிய Tablet series-ஐ அறிமுகம் செய்யும் என்பதால், S8 series மாடல்களின் விலை மேலும் குறைக்கப்பட்டுள்ளது.

Samsung Galaxy Tab S8 இரண்டு பிரிவின் கீழ் விற்கப்படுகின்றன. ஒன்று Wi-Fi support கொண்டது, மற்றொன்று 5G support கொண்டதும் ஆகும்.

புதிய விலை
Samsung Galaxy Tab S8 Tablet-ன் 128GB 5G Variant இந்தியாவில் ரூ.70,999 என்ற விலையில் அறிமுகம் செய்யப்பட்டது.

ரூ.4,000 விலைக்குறைப்பை அடுத்து இந்த Tablet-ஐ ரூ.66,999 என்ற விலை கொடுத்து வாங்கலாம். இதுமட்டுமில்லாமல் மேலும் பல சலுகைகளையும் பெறலாம்.

HDFC Bank Credit அல்லது Debit card பயன்படுத்தி வாங்கினால், கூடுதலாக ரூ.7,000 தள்ளுபடியை பெறலாம். இதன் மூலம் வெறும் ரூ.60,000-க்கு இந்த Tablet-ஐ வாங்கலாம்.

Samsung Axis Bank Credit Card வைத்திருப்பவர்களுக்கும் 10% தள்ளுபடி வழங்கப்படுகிறது. மேலும், கட்டணமில்லா சுலப மாதத் தவணைத் திட்டத்தினையும் Samsung தங்களின் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது. அதன்படி, ரூ.5,552 செலுத்தி இந்த Tablet-ஐ சொந்தமாக்கிக் கொள்ளலாம்.

இதன் சிறப்பம்சங்கள்
Samsung Galaxy Tab S8 11 inch WQXGA Display உள்ளது. இதன் Resolution 2560×1600 pixels உள்ளன.

Android 12 இயங்குதளத்தை அடிப்படையாகக் கொண்ட OneUI Skin மூலம் இந்த Samsung Galaxy Tab S8 இயங்குகிறது.

இந்த Tab-ன் சிறந்த செயல்திறனுக்காக இதில் Qualcomm Snapdragon chipset பயன்படுத்தப்பட்டுள்ளது.

பின்பக்க Camera-வை பொருத்தவரை 13 Megapixel Primary sensor, 6 megapixel ultra wide angle lens ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளன.

Selfie மற்றும் Video அழைப்புகளுக்காக 12 Megapixel Front camera வழங்கப்பட்டுள்ளது. அதிக நேர பயன்பாட்டுக்காக பெரிய 8000 mAh Battery pack கொடுக்கப்பட்டுள்ளது.

SHARE