உத்தரபிரதேச மாநிலத்தில் ஒரே வீட்டில் இருந்து 150க்கும் அதிகமான பாம்புகள் பிடிபட்டுள்ளன. KHERI மாவட்டத்தின் ஓவல் கிராமத்தில் பிரமிளா என்பவரின் வீட்டில் இருந்து திடீரென பாம்புகள் வெளி வர தொடங்கியுள்ளன.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பிரமிளா வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.அங்கு வந்த வனத்துறையினர் அந்த வீட்டில் இருந்து மட்டும் 150 பாம்புகளை பிடித்தனர்.
பின்னர் பாம்புகள் அனைத்தும் வனத்தில் விடப்பட்டன. திடீரென 100க்கும் அதிகமான பாம்புகளை கண்டதால் அப்பகுதி மக்கள் அச்சத்தில் ஆழ்ந்துள்ளனர்.