தினமும் காலை எழுந்தவுடன் தான் செய்யும் விஷயங்கள்- முதன்முறையாக கூறிய நடிகை சமந்தா

105

 

நடிகை சமந்தா 10 ஆண்டுகளாக தொடர்ந்து தமிழ், தெலுங்கு மொழிகளில் நடித்து வந்தவர் இப்போது ஹிந்தியிலும் கால் பதித்துள்ளார்.

படங்களில் மட்டும் இல்லாமல் வெப் தொடர்களிலும் இவர் நடிக்க தொடங்கி இருக்கிறார். படு பிஸியாக தொடர்ந்து நடித்து வந்தவர் வாழ்க்கையில் கடந்த சில வருடங்களாக மோசமான விஷயங்கள் நடந்துவிட்டது.

முதலில் தான் காதலித்து திருமணம் செய்த நாக சைத்தன்யாவை விவாகரத்து பெற்றார், பின் மயோசிடிஸ் என்ற கொடிய நோயால் பாதிக்கப்பட்டு வீட்டிலேயே முடங்கினார்.

பல சிகிச்சைக்கு பிறகு கொஞ்சம் நோயில் இருந்து வெளியே வந்துள்ள சமந்தா மீண்டும் ஆக்டீவாக சினிமா பயணிக்க தொடங்கியுள்ளார்.

நடிகையின் பேட்டி
இந்த நிலையில் நடிகை சமந்தா ஒரு பேட்டியில் காலை எழுந்தவுடன் என்னவெல்லாம் செய்கிறேன் என பேட்டி கொடுத்துள்ளார்.

அதில் அவர், தினந்தோறும் காலை 5.30 மணிக்கு எழுந்து விடுவேன், எழுந்ததும் நன்றி தெரிவிக்கும் ஜெர்னலை தான் எழுதுவேன்.

சூரிய உதயத்தில் சில நிமிடங்கள் இருப்பேன், பிரீத்திங் எக்சர்சைஸ் செய்துவிட்டு, 25 நிமிடங்கள் மெடிடேஷன் மட்டுமே செய்வேன்.

மேலும் சமீப காலங்களில் தான் டேப்பிங் தெரபியையும் செய்து வருவதாகவும், அதனால் மிகப்பெரிய அளவில் எனர்ஜி கிடைப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

SHARE