தினமும் பச்சை திராட்சை சாப்பிட்டால் ஏற்படும் மாற்றங்கள் என்ன?

341
பழவகைகளில் ஒன்றான திராட்சை உடல் நலனுக்கு தேவையான ஆரோக்கியத்தை வழங்குகிறது.இதில், பச்சை திராட்சை அன்றாடம் எடுத்துக்கொண்டால் உங்கள் உடலில் ஏற்படும் மாற்றங்களை உணர்வீர்கள்.

ஒரு கப் பச்சை திராட்சையில் உள்ள சத்துக்கள்

கலோரி – 104, நார்ச்சத்து – 1.4 கிராம், விட்டமின், மினரல்ஸ், ஆன்டி ஆக்ஸிடண்ட் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

மருத்துவ பயன்கள்

கொலஸ்ட்ரால் அதிகம் இருந்தால், தினமும் ஒரு கையளவு பச்சை திராட்சை சாப்பிடுங்கள். இதனால் அதில் உள்ள pterostilbene என்னும் உட்பொருள் கெட்ட கொலஸ்ட்ராலைக் கரைத்து, உடலில் கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்துக் கொள்ளும்.

திராட்சையில் காப்பர், இரும்புச்சத்து மற்றும் மாங்கனீசு போன்ற எலும்புகளின் வலிமைக்கும், உருவாக்கத்திற்கும் தேவையான நுண் ஊட்டச்சத்துக்கள் வளமாக நிறைந்துள்ளது.

திராட்சையில் விட்டமின் ஏ மற்றும் சி வளமாக நிறைந்துள்ளது. இதில் விட்டமின் ஏ நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமையாக்கி, உடலைத் தாக்கும் கிருமிகளை எதிர்த்துப் போராட உதவும்.

அதேப் போல் விட்டமின் சி ஈறுகள் மற்றும் தசைகளின் ஆரோக்கியத்திற்கு இன்றியமையாத ஒன்று.

பச்சை திராட்சை ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து விடுதலை தரும். மேலும் திராட்சை நுரையீரலில் ஈரப்பசையின் அளவை அதிகரித்து, வறட்டு இருமல் வருவதைத் தடுக்கும்.

மொத்தத்தில் சுவாச பிரச்சனை இருப்பவர்கள், பச்சை திராட்சையை தினமும் சிறிது உட்கொண்டு வருவது நல்லது.

பச்சை திராட்சையில் மிகவும் முக்கியமான கனிமச்சத்தான எலக்ட்ரோலைட்டுகள் உள்ளன. இந்த கனிமச்சத்தானது உடலில் நீர்ச்சத்து மற்றும் இரத்தத்தில் அமிலத்தின் அளவை சீராக பராமரிக்க இன்றியமையாத ஒன்று. முக்கியமாக தசைகளின் செயல்பாட்டிற்கு எலக்ட்ரோலைட்டுக்கள் மிகவும் முக்கியம்.

தினமும் சிறிது பச்சை திராட்சை உட்கொண்டு வருவதன் மூலம் செரிமான பிரச்சனை மற்றும் வயிற்று எரிச்சல் போன்றவற்றில் இருந்து தீர்வு கிடைக்கும்.

SHARE