நடிகர் ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் ஜீனத் பிரியா இரண்டு வருடங்களுக்கு முன்பு சீரியல் நடிகர் முனிஸ் ராஜா என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். ராஜ்கிரண் எதிர்ப்பை மீறி அவர் இந்த திருமணத்தை செய்ததால் தனது பெயரை எங்கேயும் பயன்படுத்த கூடாது என ராஜ்கிரண் தெரிவித்து இருந்தார்.
இந்நிலையில் சமீபத்தில் ஜீனத் பிரியா தான் முனிஸ் ராஜாவை பிரிந்துவிட்டதாக வீடியோ வெளியிட்டு அப்பா ராஜ்கிரனிடம் மன்னிப்பு கேட்டிருந்தார்.
குடித்துவிட்டு அடிப்பார்
இந்நிலையில் தற்போது ராஜ்கிரணின் வளர்ப்பு மகள் அளித்திருக்கும் பேட்டியில் தன்னை முனிஸ் ராஜா தினமும் குடித்துவிட்டு வந்து அடிப்பார், மோசமாக பேசுவார் என தெரிவித்து இருக்கிறார்.
திருமணமான முதல் மாதத்தில் இருந்தே இது தொடங்கிவிட்டது, அவரது குடிப்பழக்கத்தை மாற்ற முடியும் என நினைத்தேன் ஆனால் முடியவில்லை.
தினமும் அடிப்பார், குடித்துவிட்டால் மனிதனாகவே இருக்க மாட்டார். மேலும் குடிப்பதற்கு பணம் கேட்டு தினமும் தொல்லை செய்வார். பிரிந்து செல்லலாம் என நினைத்தால் எனது மொத்த குடும்பத்தையும் அசிங்கப்படுத்துவேன் என மிரட்டிவந்தார்.
இந்த சூழ்நிலையில் இருந்து என்னை அப்பா தான் காப்பாற்றினார் என ராஜ்கிரணுக்கு வளர்ப்புமகள் நன்றி கூறி இருக்கிறார்.