அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் நியூசிலாந்து அணி 279 ஓட்டங்கள் வெற்றி இலக்காக நிர்ணயித்தது.
கேன் வில்லியம்சன் 51
கிறிஸ்ட்சர்ச்சின் ஹக்லே ஓவல் மைதானத்தில் அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் நடந்து வருகிறது.
நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 162 ஓட்டங்களுக்கு சுருண்டது. பின்னர் முதல் அவுஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் 256 ஓட்டங்கள் எடுத்தது.
அதன் பின்னர் 94 ஓட்டங்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து அணி இரண்டாது இன்னிங்சை தொடங்கியது.
வில் யங் 1 ரன்னில் ஸ்டார்க் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்து கேன் வில்லியம்சன் 51 ஓட்டங்களும், லாதம் 73 ஓட்டங்களும் விளாசினர்.
அதனைத் தொடர்ந்து களமிறங்கிய ரச்சின் ரவீந்திரா, டேர்ல் மிட்செல் அவுஸ்திரேலிய பந்துவீச்சை சிதறடித்தனர். அரைசதம் விளாசிய டேர்ல் மிட்செல் 58 ஓட்டங்கள் எடுத்து அவுட் ஆனார்.
பின்னர் கம்மின்ஸ் பந்துவீச்சில் 82 ஓட்டங்கள் குவித்த நிலையில் ரச்சின் ரவீந்திரா ஆட்டமிழந்தார். அடுத்து அதிரடியில் மிரட்டிய குஃகெலேஜின், 2 சிக்ஸர் மற்றும் 5 பவுண்டரிகளுடன் 44 (49) எடுத்து வெளியேறினார்.
இறுதியில் நியூசிலாந்து அணி 372 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆனது. கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளும், லயன் 3 விக்கெட்டுகளும் வீழ்த்தினர்.
279 ஓட்டங்கள் இலக்கு
279 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் அவுஸ்திரேலியா களமிறங்கியது. மேட் ஹென்றி, பென் சியர்ஸ் பந்துவீச்சில் மிரட்டினர்.
ஸ்டீவன் ஸ்மித் 9 ஓட்டங்களில் மேட் ஹென்றி பந்துவீச்சில் lbw முறையில் அவுட் ஆனார். மார்னஸ் லபுசாக்னே 6 ஓட்டங்களில் சியர்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். கவாஜா 11 ஓட்டங்களிலும், கிரீன் 5 ஓட்டங்களிலும் வெளியேறினர்.
மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் அவுஸ்திரேலியா 4 விக்கெட் இழப்பிற்கு 77 ஓட்டங்கள் எடுத்துள்ளது. டிராவிஸ் ஹெட் 17 ஓட்டங்களுடனும், மிட்செல் மார்ஷ் 27 ஓட்டங்களுடனும் களத்தில் உள்ளனர்.