நாட்டையே உலுக்கிய தியத்தலாவ பொக்ஸ் ஹில் மோட்டார் பந்தயத்தின் போது நேற்று (21) இடம்பெற்ற விபத்தில் சிறுமி உட்பட 7 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த விபத்து தொடர்பில் இரு கார் சாரதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதேவேளை, விபத்து தொடர்பில் கைது செய்யப்பட்ட இரு வாகன சாரதிகளையும் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.