இரண்டு வருடங்களுக்கு முன் எங்கள் காதல் முடிந்தது, நாங்கள் பிரிந்து விட்டோம் என்று கூறியவர்கள் சிம்பு மற்றும் நயன்தாரா.
இவர்களின் பிரிவுக்கு பிறகு சிம்பு ஹன்சிகாவை காதலிக்க, பின் அந்த காதலும் முறிந்து விட்டது.
நயன்தாராவோ பிரபு தேவாவுடன் காதல் வயப்பட்டு பின் அவர்களும் பிரிந்தனர்.
சமீபத்தில் தான் முன்னாள் காதலர்கள் சிம்பு மற்றும் நயன்தாரா இது நம்ம ஆளு படத்தில் நடிக்க கமிட்டாகியிருந்தனர்.
இவர்கள் இருவரும் சேர்ந்து படத்தில் நடிக்க எப்படி ஒப்புக் கொண்டனர் என்ற கேள்வி எல்லோர் மனதிலும் இருந்து வந்தது.
இப்போது பெரிய சந்தேகம் எழும் படி, திரிஷா பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிம்பு மற்றும் நயன்தாரா இணைந்தார் போல் ஒரு போட்டோவை வெளியிட்டுள்ளனர்.
இந்த போட்டோவை பார்க்கும் போது மறுபடியும் இருவரும் காதலிக்கிறார்களா என்ற கேள்வி எழும்பியுள்ளது.