திருமணம் ஆகாத 53 வயது நடிகையுடன் கைகோர்க்கும் அஜித்.. பிளான் போட்ட இயக்குனர்

77

 

துணிவு படத்தின் வெற்றிக்கு பின் அஜித் தற்போது விடாமுயற்சி படத்தில் நடித்து வருகிறார். மகிழ் திருமேனி இயக்கி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு அசர்பைஜானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் அஜித்துடன் இணைந்து திரிஷா, அர்ஜுன் உள்ளிட்டோர் நடிக்கிறார்கள். இப்படத்தை முடித்துவிட்டு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகும் ஏகே 63 படத்தில் அஜித் நடிக்கவுள்ளார். இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல் தெரிவிக்கின்றனர்.

ஏகே 63
மேலும் இப்படத்தில் அஜித்துடன் இணைந்து யார்யாரெல்லாம் நடிக்கப்போகிறார்கள் என்பது குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நடிகை தபு நடிக்கப்போகிறார் என கூறப்படுகிறது.

பிரபல நடிகையுடன் இணையும் அஜித்
53 வயதாகும் நடிகை தபு இதுவரை திருமணம் செய்துகொள்ளவில்லை. மேலும் இவர் அஜித்துடன் இணைந்து ஏற்கனவே கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன் எனும் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதன்பின் 24 ஆண்டுகள் கழித்து மீண்டும் இந்த ஜோடி இணையவுள்ளதாக கூறப்படுகிறது.

வில்லன்கள்
அதே போல் இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடிக்கவிருக்கிறாராம். மார்க் ஆண்டனி படத்தை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் எஸ்.ஜே. சூர்யா நடிக்கவுள்ளார் என செல்லப்படுகிறது.

மேலும் அரவிந்த் சாமியும் இப்படத்தில் வில்லனாக நடிக்கவுள்ளாராம். அதற்கான பேச்சு வார்த்தையும் நடந்து வருகிறது என்று தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் அதற்கான அதிகாரப்பூர்வமான அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE