தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் விஜய் தற்போது Greatest of all time எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், தனது அரசியல் பயணம் குறித்து அறிவிப்பை வெளியிட்டார் விஜய்.
Goat மற்றும் தளபதி 69 படங்களை முடித்துவிட்டு, முழு நேரம் அரசியலில் களமிறங்கப்போவதாக விஜய் கூறியுள்ளனர். சினிமாவில் இருந்து விஜய் விலகுவது, அவருடைய ரசிகர்களுக்கு பெரும் வருத்தத்தை கொடுத்துள்ளது.
விஜய்யின் திரை வாழ்க்கை இந்த அளவிற்கு உயர முக்கிய காரணம் அவர் நடித்த காதல் திரைப்படங்கள் தான். 90ஸ் காலகட்டத்திலும், அதற்குப்பின்பும் விஜய் நடிப்பில் வெளிவந்த காதல் கதைக்களம் கொண்ட திரைப்படங்கள் தான் அவருக்கு மிகப்பெரிய வெற்றியை பெற்று தந்துள்ளது.
சினிமாவில் இது போய்விடுமா
பூவே உனக்காக, காதலுக்கு மரியாதை, ஷாஜகான், குஷி போன்ற பல திரைப்படங்களை இதற்கு உதாரணமாக கூறலாம். நடிகர் விஜய், 1999ஆம் ஆண்டு சங்கீதா என்பவரை திருமணம் செய்தார். இந்த சமயத்தில் நடிகர் காதல் நாயகனாக வலம் வந்துகொண்டிருந்த விஜய்யிடம் ‘திருமணம் செய்த பிறகு மார்க்கெட் குறையுமா’ என பேட்டி ஒன்றில் கேள்வி கேட்கப்பட்டது.
இதற்கு பதிலளித்த விஜய் ‘திருமணம் செய்துகொண்டால் மார்க்கெட் போய்விடும் என சிலர் கூறுகின்றனர். அதற்கும் படங்களில் நடிப்பதற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை. ஒரு படத்தின் கதை நன்றாக இருந்தால், கண்டிப்பாக அப்படம் வெற்றியடையும். திருமணம் செய்துகொண்டால் மார்க்கெட் போய்விடுமா என என்னிடம் கேட்டால் கண்டிப்பாக இல்லை என்று தான் சொல்வேன்’ என கூறினார் விஜய்.