இலங்கையின் வட கிழக்கில் மற்றும் பல பாகங்களில் வதை முகாம்களா….? இவைகள் ஆதாரப்படுத்தப்படவில்லை. ஆனால் இன்று வதைமுகாம் தடுப்பிலிருந்து தப்பியவரின் திடுக்கிடும் தகவல்களடங்கிய ஒரு அதிர்ச்சி ரிப்போர்ட்.
கடந்தகால, நிகழ்கால இலங்கை அரசுகள் வதைமுகாம் தொடர்பில் மறுத்துவரும் இந்நிலையில் வடக்கு கிழக்கு உட்பட்ட கொழும்பின் பல பாகங்களிலும் வதைமுகாம்கள் இருந்தமை நிரூபணமாகியுள்ளது.
வதைமுகம் எங்கு உள்ளது?
நடத்தியவர்கள், நடத்திவருபவர்கள் யார்?
விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தவர்களின் மனைவிகளும் வதைமுகாமிலா?
கொழும்பு கொட்டாஞ்சேனையில் கடத்தப்பட்ட 5 அப்பாவி மாணவர்களும் உயிருடன் உள்ளார்களா இல்லையா?
என பல்வேறுபட்ட கடத்தல்கள், வதைமுகாம்கள் தொடர்பில் லங்காசிறி 24 செய்திச் சேவைக்காக திடுக்கிடும் தகவல்களை அம்பலப்படுத்தினார் வதைமுகாமில் சித்திரவதைக்குட்பட்டு பின்னர் வெளிவந்த அப்பாவி தமிழன் திலீபன்.