திரைப்பட தயாரிப்பாளர் மீது புகார்.. காரணம் என்ன தெரியுமா?

70

 

பெங்களூரை சேர்ந்த மனிஷா யாதவ், கடந்த 2012 -ம் ஆண்டு வெளியான வழக்கு எண் 18/9 திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து ஆதலால் காதல் செய்வீர், திரிஷா இல்லனா நயன்தாரா, சென்னை 28, ஒரு குப்பை கதை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இதன் பின்னர் சரியான பட வாய்ப்பு இல்லாத காரணத்தால் பெங்களூர் திரும்பிய மனிஷா, சில ஆண்டுகளுக்கு திருமணம் செய்துகொண்டார்.

தற்போது மனிஷா நடித்துள்ள நினைவெல்லாம் நீயடா என்ற திரைப்படம் வருகின்ற 23-ம் தேதி வெளியாக இருக்கிறது. ஆதிராஜன் இயக்கியுள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் இளையராஜா இசையமைத்துள்ளார்.

புகார்
இந்நிலையில் மனிஷா தனக்கு இன்னும் சம்பளம் பாக்கி தரவில்லை என்று நினைவெல்லாம் நீயடா திரைப்படத்தின் தயாரிப்பாளர் மெது புகார் அளித்துள்ளார்.

அந்த புகாரில், நினைவெல்லாம் நீயடா படத்தில் நடிக்க ரூபாய் 3 லட்சம் சம்பளமாக பேசப்பட்டது. இன்னும் அந்த பாக்கியை தரவில்லை. படம் வெளியாகும் சூழலில் அதை வசூலித்து தர வேண்டும் என்று மனிஷா குறிப்பிட்டு உள்ளார்.

SHARE