திரைப்பட பாணியில் யாழ்ப்பாணம் தெல்லிப்பழைப் பகுதியில் திருட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
பெண்ணொருவர் தனிமையில் வாழ்ந்து வந்த வீட்டை நோட்டம்விட்ட திருடர்கள் அங்கு தமது கைவரிசையைக் காட்டியுள்ளனர்.
வீடு பிரித்து இறங்கிய திருடர்கள் சமையல் அறையில் உள்ள பொருள்கள், பாத்திரங்கள் என அனைத்தையும் திருடியுள்ளனர். எண்ணெய்யைக் கூட விட்டுவைக்காமல் திருடிச் சென்றுள்ளனர்.
அலுமாரியில் வைக்கப்பட்டிருந்த புடவைகள் அனைத்தும் திருடப்பட்டுள்ளன. படுக்கையறையில் இருந்த கட்டில், மெத்தையை அப்படியே தூக்கிச் சென்றுள்ளனர்.
போகும் போது திருடியது யார் என்று பொலிஸார் கண்டுபிடிக்காதவாறு தமது கையடையாளங்கள், கால் பட்ட இடங்களுக்கு மிளகாய்த் தூள் தூவிவிட்டுத் தப்பித்துள்ளனர்.