துணிச்சல்காரி வேடத்தில் நடிக்க நடிகைகள் போட்டா போட்டி 

502
கங்கனா ரனவத் நடித்த இந்தி படம் தமிழில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தியில் கங்கனா ரனவத் நடித்த படம் குயின். இதில் வைதீகமான பெண்ணாக இருந்து துணிச்சல்காரியாக மாறும் கேரக்டரில் கங்கனா ரனவத் நடித்திருந்தார். இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமை வாங்குவதில் போட்டி நிலவியது. தற்போது நடிகரும் தயாரிப்பாளருமான தியாகராஜன் இதன் உரிமையை பெற்றிருக்கிறார். இதுபற்றி அவர் கூறும்போது,கங்கனா நடித்த கதாபாத்திரத்தில் நடிக்க அவரைப்போன்ற தோற்றமும், பாவமும் கொண்ட நடிகை அவசியம். சில பெரிய ஹீரோயின் இந்த வேடத்தில் நடிக்க ஆர்வம் காட்டுகிறார்கள்.
இந்தியில் நடித்த கங்கனா தோழியாக நடித்த லிசா ஹேடனுடனை அதே வேடத்தில் தமிழ் உள்ளிட்ட மொழிகளில் நடிக்க கேட்டிருக்கிறேன். 2 அல்லது 3 படங்களை மட்டுமே இயக்கியுள்ள இளம் இயக்குனர் இப்படத்தை இயக்குகிறார். பிரான்ஸ், நெதர்லாந்து, ஸ்பெயின் போன்ற நாடுகளில் ஷூட்டிங் நடக்கிறது என்றார். இப்படத்தில் நடிக்க நயன்தாரா, டாப்ஸி போன்றவர்கள் பெயர்கள் பரிசீலிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது

SHARE