துமுக இயக்குனர் ஹலிதா ஷமீன் இயக்கி இருக்கும் படம் பூவரசம் பி பி,மே 30ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்

641

புதுமுக இயக்குனர் ஹலிதா ஷமீன் இயக்கி இருக்கும் படம் பூவரசம் பி பி. விண்ணைத்தாண்டி வருவாயா, நண்பன் போன்ற படங்களை ஒளிப்பதிவு செய்த மனோஜ் பரமஹம்சா இந்த படத்தை தயாரிக்கிறார்.

இந்த படத்தை பற்றி இயக்குனர் ஹலிதா கூறுகையில், கோடை விடுமுறையை கொண்டாடிக் கொண்டிருக்கும் பிள்ளைகள், திடீரென்று ஒரு வன்முறை சம்பவத்தை நேரில் காண்கின்றனர்.

அந்த வன்முறை சம்பவத்தை நேரில் பார்த்ததால் ஏற்படும் பிரச்னைகளை எப்படி கையாள்கிறார்கள் என்பது தான் கதை என்று கூறினார்.

இந்த படத்தின் டிரைலர் ஏற்கெனவே வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றது. இப்போது இந்த படத்தின் வேலைகள் முடிவடைந்து விட்டதால் படத்தினை மே 30ம் தேதி வெளியிட முடிவு செய்துள்ளனர்

SHARE