துலாம் – ஆங்கில புத்தாண்டு ராசிப்பலன் 2023

257

கலையார்வம் நிறைந்த துலாம் ராசியினருக்கு இந்த ஆங்கிலப் புத்தாண்டு நன்மைகளே மிகுதியாக நடக்க நல் வாழ்த்துக்கள்.

செல்வாக்கு, திறமை, பெருமை, கவுரவத்தோடு செயல்பட்டு சிறப்பும் பெருமையும் அடைய முடியும். மனக்கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். பல்வேறு சுப பலன்கள் உண்டாகும். சனி பகவானின் சஞ்சாரம் மிகச் சாதகமாக உள்ளது.குரு மற்றும் ராகு, கேதுவின் சஞ்சாரம் சுமாராக உள்ளது. இனி இந்த ஆண்டிற்கான விரிவான பலன்களைக் காணலாம்.

குருவின் சஞ்சார பலன்கள்: துலாம் ராசிக்கு 3,6ம் அதிபதியான குருபகவான் ஏப்ரல் 22, 2023 வரை 6ம் இடத்தில் ஆட்சி பலம் பெறுகிறார். அதன் பிறகு ஏழாமிடம் சென்று ராகுவோடு இணைந்து ராசியைப் பார்ப்பதால் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு சென்றுவிடும். 5ம் அதிபதி சனியின் பார்வை பெறுவதால் புகழ் மிக்கவர்களைக் கொண்டு முக்கிய காரியங்களை சாதிப்பீர்கள்.

தொழிலில் உன்னத நிலையை அடைய முடியும். தொழிலில் சாதனை செய்யக் கூடிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். வருமான வரி கட்டக் கூடிய அளவிற்கு தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். திறமைகளின் மூலம் பணியில் பொறுப்புகள் உயரும். வேலையின்றி இருந்தவர்களுக்கு புதிய வேலை வாய்ப்பு, உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள், பதவி உயர்வு சம்பள உயர்வு என்று அனைத்து வித நன்மைகளும் தேடிவரும். சமூகச்சேவை புரிபவர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். நடக்கும், எனினும் யாருக்கும் வாக்கு கொடுக்க வேண்டாம்.

பிள்ளைகளால் ஏற்பட்ட மனக்கவலை அகலும். குழந்தை இல்லாதவர்களுக்கு வாரிசு உண்டாகும். கடன் வாங்குவதை தவிர்த்தல் நலம். வாகன வசதிகள் மேம்படும். புதிய பொருட்சேர்க்கை மகிழ்ச்சி தரும். உறவினர்களின் மூலம் ஆதரவான சூழல் ஏற்படும். சிலர் குறைந்த ஊதியத்திற்கு அதிகம் உழைக்கும் சூழ்நிலை ஏற்படும் .மறுமண முயற்சி தடைபடும். எதிர்பாராத மாமனாரின் உதவி ஆச்சரியமூட்டும்.சத்ருக்கள் தொல்லை அதிகரிக்கும். எதிரிகளின் பலம் கூடுவதால் அமைதியாக இருப்பது தொழிலையும், தொழில் கூட்டாளிகளையும் காக்கும் .

சனியின் சஞ்சார பலன்கள்: துலாம் ராசிக்கு 4, 5ம் அதிபதியான சனிபகவான் ஜனவரி 17, 2023 முதல் 5ம் இடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ஆட்சி பலம் பெறுவதால் அதிர்ஷ்டம் அரவணைக்கும். தொழிலில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

தொழிலில் சாதனை செய்யக் கூடிய புதிய வாய்ப்புகள் தேடி வரும். வருமான வரி கட்டக் கூடிய அளவிற்கு தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். வாழ்க்கையே போராட்டமாக இருந்தவர்களுக்கு சீரான தொழில் வளர்ச்சியால் மன நிம்மதியான வாழ்க்கை அமையும். அன்றாடம் கூலி வேலை செய்து சம்பாதித்தவர்கள் சொந்த தொழில் செய்து பெரும் வருமானம் ஈட்டும் நேரம்.

வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களின் வாழ்க்கை தரம் உயரும். தன வரவு சிறக்கும். பணம் கொடுக்கல் வாங்கல் சீராக இருக்கும்.குடும்பம் மகிழ்சியாக இருக்கும். முடங்கி கிடந்த, தடைபட்ட அனைத்து முயற்சிகளும் உங்களுக்கு சிறு முயற்சியில் வெற்றி வாய்ப்பை தேடித்தரும். வெளிநாட்டு வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு விரும்பிய வேலை கிடைக்கும். ஒரு சிலர் வெளிநாடு, வெளி மாநிலத்திற்கு சுற்றுப்பயணம் செய்து மகிழ்வீர்கள். போட்டி பொறாமைகள் இருந்தாலும் சமாளித்து வெற்றி போடுவீர்கள்.

கூட்டுத் தொழில் செய்யும் சகோதரர்களில் அண்ணன் தம்பிகள் ஒருவரை ஒருவர் ஏமாற்ற முயற்சிப்பார்கள். பாகப் பிரிவினைச் சொத்து குடும்ப உறுப்பினர்களால் ஏமாற்றப்படலாம்.

ராகு/கேதுவின் சஞ்சார பலன்கள்: கோட்சார ராகு அக்டோபர் 30, 2023 வரை 7ம் இடத்திலும் கேது ராசியிலும் சஞ்சரிக்கிறார்கள். அதன் பிறகு ராகு 6ம் இடத்திலும் கேது 12ம் இடமும் செல்கிறார்கள். உங்களின் முயற்சிகள் சிறு மன சஞ்சலத்திற்கு பிறகு காரிய சித்தியை ஏற்படுத்தி தரும். இது வரை நடக்காமல் இருந்த நல்ல விஷயங்கள் நடக்கும்.உடலிலும் மனதிலும் புதிய தெம்பு பிறக்கும். எதிர்மறை எண்ணங்கள் நீங்கி மனதில் தன்னம்பிக்கை ஏற்படும். எந்த செயலையும் நினைத்தவுடன் அவசரமாக செய்யாமல் ஒரு முறைக்கு இரு முறை சிந்தித்து செயல்பட வேண்டும்.வரவுக்கு மேல் செலவு ஏற்பட்டாலும் ஏதேனும் ஒருவகையில் செலவைச் சரி செய்ய தேவையான பணம் வந்து சேரும்.

ஏற்றுமதி, இறக்குமதி தொடர்பான தொழில் செய்பவர்களுக்கு வாய்ப்புகள் அதிகரிக்கும். உங்களுடைய வீண் பிடிவாதம், முன் கோபத்தை தவிர்த்து தர்ம சிந்தனையுடன் பிறருக்கு மனக்குறையோ, பாதகமோ இல்லாத நல்ல முடிவை எடுத்தால் வருடத்தின் எல்லா நாட்களும் ஆசிர்வதிக்கப்பட்ட நாளாகவே இருக்கும்.

திருமணம்: கோட்சார குரு 7ல் நின்று ராசியைப் பார்ப்பதால் சுய ஜாதகத்தில் ஏழாமிடத்தில் எந்த பாதிப்பும் இல்லாவிடில் உரிய வயதில் திருமணம் நடந்து முடியும். அதே நேரத்தில் சனி பார்வையும் 7ம் இடத்திற்கு இருப்பதால் வாழ்க்கைத் துணை பற்றிய மிகைப்படுத்தலான எதிர்பார்ப்பு உண்டாகும். தேடி வந்த வரனை குறை கூறி தாமே திருமணத் தடையை ஏற்படுத்திக் கொள்வார்கள். எனவே விரும்பி வரும் வரனை திருமணம் செய்து கொண்டால் திருமண வாழ்க்கை மிகச் சிறப்பாக இருக்கும்.

பெண்கள்: பெண்களுக்கு மன சஞ்சலம் நீங்கி நிம்மதி பிறக்கும். சுயமாக சிந்திக்கும் திறனும், முடிவெடுக்கும் திறனும் அதிகரிக்கும். பிறந்த வீட்டுச் சீதனம் மகிழ்சியைத் தரும். குடும்பத்தில் இழந்த சந்தோஷம் மீண்டும் துளிர்விடும். புதிய தொழில் முயற்சிக்கு தேவையான நிதியுதவி கிடைக்கும்.தொழில் உத்தியோகம் நிமித்தமாக பிரிந்த தம்பதிகள் மீண்டும் இணைவார்கள். கணவன், மனைவி ஒற்றுமை அதிகரிக்கும்.

மாணவர்கள்: உடல் நிலை மேம்படும்.படிப்பில் மந்தமாக உள்ள பிள்ளைகள் கல்லூரிப் படிப்பைத் தவிர்த்து தொழிற்கல்வியில் சேர முயற்சிப்பார்கள். போட்டித் தேர்வில் வெற்றி பெற பெற்றோர்கள், ஆசிரியர்கள் உதவியாக இருப்பார்கள்.

சித்திரை 3, 4: விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டிய காலம. தொழில் வியாபார ரகசியங்கள் கசியும். தொழில் போட்டிகள் உருவாகும். வியாபரத்திற்கு நம்பகமான வேலையாட்கள் தேடுவீர்கள். மேல் அதிகாரி உங்களை நம்பி சில முக்கிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். உயர் அதிகாரிகள் பாராட்டினாலும் சக ஊழியர்களால் டென்ஷன் உண்டாகும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை.

நெடுந்தூர பயணம் செய்யும் வாய்ப்பு கிட்டும். பண்டிகைகள் விழாக்களில் கலந்து கொண்டு ஆனந்தமடைவீர்கள். புதிய முயற்சிகள் வெற்றி தரும் வாய்ப்பு குறைவு. யாரையும் நம்பி வாக்கு கொடுக்க வேண்டாம். பிறருக்கு ஆலோசனை வழங்குவதால் மனக்கசப்பு உண்டாகும். ஆரோக்கியத்தில் படிப்படியான முன்னேற்றம் உண்டாகும். உடல் அசதி, கை கால் உளைச்சல் மருத்துவத்தில் கட்டுப்படும். வயோதிகர்களுக்கு பிள்ளைகளால் ஏற்பட்ட அசெளகரியங்கள் குறையும்.

பரிகாரம்: தினமும் துர்க்கா அஷ்டோத்திரம் கூறவும். சுவாதி: குரு சாதகமற்ற நிலையில் இருப்பதால் உழைப்பது நீங்கள் நல்ல பெயர் வாங்குவது உங்களை விரட்ட நினைக்கும் சக ஊழியராக இருப்பார். காதலிப்பவர்கள் பெற்றோர் மற்றும் உடன் பிறந்தவர்கள் மற்றும் உங்களின் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு தவறான முடிவு எடுக்காமல் இருப்பது நல்லது. உங்கள் குல அல்லது இஷ்ட தெய்வத்தை மனம் தளராது வழிபட அனைத்தும் சுபமாகவே இருக்கும். திருமண சுப காரியங்க ளுக்காக செய்யும் முயற்சிகளில் வெற்றியுண்டு. புதிய முயற்சிகளில் தடை, தாமதங்கள் ஏற்படலாம்.

மனக்குழப்பம், பதட்டம் அதிகரிக்கும் என்பதால் எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அதிக பேச்சு வேண்டாம் வீட்டுக்கொடுத்து செல்லவும். உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரும். உணவு விசயத்தில் கவனமாக இருக்க வேண்டும். மறு திருமண முயற்சி சாதகமாகும்.

பரிகாரம்: செவ்வாய் கிழமை காலை11-12 மணி வரையிலான சனி ஓரையில் விநாயகரை ஒன்பது முறை வலம் வர வேண்டும்.

விசாகம் 1,2,3: நினைத்ததை நடத்தி முடிக்க அதிக முயற்சி செய்ய நேரும். அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். சகோதர வகையில் சில சாதகங்களும் பல பாதகங்களும் உண்டாகும். ஆரோக்கியத்தில் சிறிய பதிப்பு தோன்றினாலும் சமாளித்து விடுவீர்கள். கடன் பிரச்சனைகள் படிப்படியாக குறையத் துவங்கும்.

மார்க்கெட்டிங் துறையில் இருப்பவர்கள், சாலையோர நடைபாதை வியாபாரிகளின் லாப விகிதம் அதிகமாக இருக்கும். தொழில் வியாபாரம் சம்பந்தமாக எடுக்கும் முயற்சியில் அவசரம் காட்டாமல் யோசித்து செயல்படவும். போட்டி, பொறாமையால் கண் திருஷ்டி உண்டாகும். மைத்துனரிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு மறையும்.

ஒரு சிலருக்கு இன்சூரன்ஸ், பாலிசி முதிர்வு தொகை , உயில் சொத்து கிடைக்கும்.தந்தையின் ஆரோக்யத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். கணவன் மனைவிக்கிடையே இருந்த கருத்து மோதல்கள் குறையும்.

பரிகாரம்: அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு இயன்ற மருத்துவ உதவி செய்ய வேண்டும்.

maalaimalar

SHARE