நவீன தொழில்நுட்ப வளர்ச்சியில் அனைவரது கைகளிலும் ஸ்மார்ட் கைப்பேசிகளே தவழ்கின்றன.
அதற்கு முன்னர் வந்த கைப்பேசிகள் அனைத்தும் முற்றுமுழுதாக கைவிடப்பட்டுள்ளன.
இதேவேளை எந்தவொரு கைப்பேசியாயினும் சம காலத்தில் அவற்றினை பாவிக்கும் காலம் சராசரியாக 2 ஆண்டுகளாகவே காணப்படுகின்றது.
அதன் பின்னர் அவற்றினை வீசிவிட்டு புதிய கைப்பேசிக்கு மாறுகின்றனர். ஆனால் கைப்பேசிகளில் காணப்படும் லிதியம் அயன் மின்கலமானது 5 ஆண்டுகள் வரை பாவனைக் காலம் கொண்டதாகும்.
எனவே 2 ஆண்டுகளில் கைப்பேசிகள் கைவிடப்படுவதனால் குறித்த மின்கலங்கள் பயனற்றுப்போகின்றன.
ஆனால் அந்த மின்கலங்களைக் கொண்டு பலரது வாழ்க்கையில் வெளிச்சம் ஏற்ற முடியும் என புதிய ஆய்வு ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதாவது இந்த மின்கலங்களைக் கொண்டு LED சோலார் மின்கலங்களை 3 ஆண்டுகள் வரை ஒளிர வைக்க முடியும் என Kyung Hee பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
இதன் மூலம் பின்தங்கிய நாடுகள், கிராமங்களில் உள்ள மக்களுக்கு மின் வழங்க முடியும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.