தென்னிலங்கையில் தேசியத் தலைவர் பிரபாகரனின் உருவப்பொம்மையினை  எரித்தவர்களை தூக்கில் இடவேண்டும் இவர்களே இனவாதிகள் 

316

வன்முறைகளைக் கைவிடவேண்டுமென்றே நல்லாட்சி அரசாங்கம் கூறுகிறது. ஆனால் சிங்களப் பேரினவாத அரசு போர் முடிவடைந்து 10 ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் மீண்டும் வன்முறைகளைத் தூண்டுவதில் குறியாக இருக்கிறது. தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் தமிழ் மக்கள் மனதில் இடம்பிடித்த ஒரு தலைவர். அடக்குமுறைகள் தமிழினத்திற்கு எதிராக வெளிப்படுத்தப்படும் போது அதனை எதிர்த்து ஆயுதம் ஏந்திப்போராடியவர் பிரபாகரன்.

இவருடைய கொடும்பாவியை தென்னிலங்கையின் சில அரசியல்வாதிகள் எரித்ததன் ஊடாக தமிழினத்தின் மீது மீண்டும் ஒரு வன்முறையினைத் தோற்றுவிப்பதாகவே காணமுடிகிறது. விடுதலைப்புலிகளின் மீள்உருவாக்கம் தொடர்பாக மாத்திரமே இராஜாங்க அமைச்சர் விஜயகலா அவர்கள் கருத்துத் தெரிவித்திருந்தார். இதனை சிங்கள ஊடகங்கள் பூதாகரமாக்கி மீண்டும் ஒரு யுத்தத்தை இந்த நாட்டில் உருவாக்க முயற்சிக்கின்றனர். மனதில் இடம்பிடித்த ஒரு தலைவனின் பெயரை உச்சரிப்பதில் என்ன தவறு.

மானத் தமிழினமே இன்னும் ஈனத்தமாய் வாழாதே இங்கு இந்த சிங்கள கூட்டம் எரிப்பது வெறும் ஒரு படத்தை அல்ல உன்முகத்தை உன் முகவரியை உன் அடயாழத்தை தமிழரின் உயிர் மூச்சை எங்கள் ஈழதயாகத்தின் வீர அத்தியாயத்தை ஏன் இந்த பூமிப்பந்தில் வாழும் தமிழர்களின் அடயாழம் முகவரிதான் எரிக்கப் பட்டிருக்கிறது அட பாவப்பட்ட தமிழா உன் முகவரியையே தெற்கில் சிங்களம் எரித்து வேடிக்கை காட்டுகிறான் மானம் இழந்துபோய் ஈழ தாயகத்தில் அந்த சிங்களத்துக்கே மாலையிட்டு உறவாடி மகிழ்கிறாய் இதை பார்கும் உனக்கு உணர்சி பொங்குதோ இல்லயோ ஆனால் அவர்கள் வைக்கும் நெருப்பு அட்டை படத்தில் அல்ல என் முகத்தில் என்று என்மனம் விம்மி வெடிக்கிறது மானம் ஈழந்து வாழ்வதா போராடி வீழ்வதா என்பதை மானத்தமிழினம் சிந்திக்கவேண்டும் ஏய் பகயே காத்திரு உன்காலம் நிரந்தரமாது காட்டு வெள்ளத்தை யாரும் அணைகட்டி தடுத்து நிறுத்திட முடியாது அதே போலதான் விடுதலை புலிகளையும் விடுதலைப்போராட்டத்தையும் நீ அளித்திட முடியாது காலங்கள் மாறும் தமிழதேசம் நோக்கி காற்று வீசும் அன்று மீண்டெளுந்து வரும் தமிழர் சேனை அப்போது புரியும் புலியின் வன்மம் ஆயிம் வலிகளை தாங்கி நிற்கிறோம் அத்தனைக்கும் வஞ்சம் வச்சி பளி தீர்கும் காலம் மாறும் அப்போது உங்களின் ஆட்டங்கள் அடங்கி வீழும் புலிகளை நேராக எதிர்கவே துணிவில்லாத சிங்களமே எங்கள் தாய் புலியின் அட்டை படத்துக்கு தீயிட நடு நடுங்கியல்லவா வைத்திருப்பாய் நீ தீயை

Posted by தலைவனின் பாதை தலைவனின் பாதை on Khamis, 5 Julai 2018

விடுதலைப்புலிகள் பயங்கரவாதிகள் என இலங்கையரசு கூறுமாகவிருந்தால் இதுவரை விடுதலைப்புலிகளுடன் 14 பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றிருக்கிறது. இதில் சர்வதேச பேச்சுக்கள் 07 இடம்பெற்றது. விடுதலைப்புலிகளை அல்லது தமிழ் மக்களை இலங்கையரசு ஒருபோதும் வெல்லமுடியாது என்ற நிலைக்குத் தள்ளப்பட்டது. அதன் காரணமாகவே இந்தியா, சீனா, பாகிஸ்தான், அமெரிக்கா உட்பட பல நாடுகளை இலங்கையரசு தன்வசம் ஆக்கிக்கொண்டு விடுதலைப்புலிகளைப் பயங்கரவாதிகள் என குறித்த நாடுகளில் தடை செய்தது.

தமிழினத்துடன் போராடி வெல்லமுடியாத சிங்கள பேரினவாத அரசு கையாண்ட போர் தந்திரோபாயங்களில் ஒன்றுதான் அது. இந்திய பிரதமர் ராஜீவ்காந்தியை கொல்வதற்கும் விடுதலைப்புலிகளுக்கு ஆயுதங்கள் ஏனைய வளங்களைக் கொடுத்துத் தயார்ப்படுத்தியதும் இந்தியாவிற்கும் விடுதலைப்புலிகளுக்கும் ஏனைய ஆயுதக்குழுக்களுக்கும் இடையில் பகைமைகளை உருவாக்கியதும் பிரேமதாச அரசாங்கம் தான். இதனை யாரும் மறுக்க முடியாது.

தமது அரசியல் தேவைகளுக்காக தமிழ் அரசியல்வாதிகள் பலரை கைக்கூலிகளாகப் பயன்படுத்தி விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என வேறுபடுத்தி தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற கோட்பாட்டுடன் போராடிய விடுதலைப்புலிகளையும், தமிழ் மக்களையும் வன்முறையாளர்கள் எனச் சித்தரித்து, சர்வதேச உதவிகளுடன் போரை முற்றுகைக்குள் கொண்டுவந்தது. சிங்களவர்கள் முன் தமிழர்கள் கைகட்டி பதில் சொல்லவேண்டும் என்று அமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க கூறியிருக்கின்ற கருத்தானது, விடுதலைப்போராட்டம் இன்று இருக்குமாகவிருந்தால் நேரடியாக அவரை இவ்வுலகினைவிட்டு அனுப்பியிருப்பார்கள். தேசியத் தலைவரின் கொடும்பாவியை எரித்தவர்களின் வீடுகளில் கரும்புலிகள் தேசியத் தலைவருக்காகவும், நாட்டுக்காகவும் வெடித்திருப்பார்கள். உலக வரலாற்றில் ஒரு போராட்ட வீரனுக்கு கிடைக்கக்;கூடிய அதிகூடிய கௌரவமாக போராளிகள் தமது உயிரையே தியாகம் செய்து தமிழீழம் மலரவேண்டும் என்ற கனவோடு போர்க்களத்தில் வித்தாகி விடுகிறான்.
பிரபாகரனின் போராட்ட வரலாறு என்பது பயங்கரவாதமாக சித்தரிக்கப்பட்டது. ஒரு அடக்குமுறைக்கு எதிராகப் படையெடுப்பவர்களை பயங்கரவாதிகள் என முத்திரை குத்தியது அரசாங்கத்தின் தவறு. போர் முடிந்து பல ஆண்டுகளைக் கடந்துள்ள நிலையில் தமிழ் மக்களுக்கான தீர்வுகளை அரசாங்கம் வழங்க முன்வராதிருப்பது என்பதும், பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இதுவரை நீக்காமல் இருப்பது என்பதும் மீண்டும் அடக்குமுறைகளுக்கு எதிராக தமிழ் மக்கள் ஆயுதம் ஏந்திப் போராடினால் தங்களது அரசியல் வங்குரோத்து நிலைமைகள் அனைத்தும் வெளியில் வரும் என்ற காரணத்தினாலேயே. இருக்கக்கூடிய பல அரசியல்வாதிகளும் பயந்துவிடுகிறார்கள். விடுதலைப்புலிகளின் மீள்வருகை என்ற கருத்தானது தென்னிலங்கையில் மட்டுமல்ல, சர்வதேச நாடுகளிலும் பெரும் அதிர்வலைகளைத் தோற்றி நிற்கும் என்பதில் சந்தேகமில்லை. சிங்கள அரசியல் தலைவர்கள் சிங்கள மக்களையும், தமிழ் மக்களையும் தூண்டிவிட்;டு மீண்டும் ஒரு யுத்தத்தின் ஊடாக குளிர்காய்வதற்கு முயற்சிகளைத் மேற்கொண்டு வருகின்றானர். மற்றுமொரு போர் ஆரம்பிக்கப்படுமாகவிருந்தால் வடகிழக்கில் அல்ல, தென்னிலங்கையில் தான் இரத்த ஆறு ஓடும் என்பது உறுதியாக்கப்படும்.

நல்லாட்சி அரசாங்கத்தின் மீது தமிழ் மக்களும், தமிழ் அரசியல் தலைவர்களும் வைத்திருக்கக்கூடிய நம்பிக்கை அவநம்பிக்கை ஆகிவிடக்கூடாது. ஆயுத பலத்தை உள்நாட்டிலும், சர்வதேசத்திலும் நிரூபித்த விடுதலைப்புலிகள், அவர்களது அரசியல் கட்டமைப்பு இன்னமும் உறுதியான நடவடிக்கைகளில் தான் இருக்கிறது. பயங்கரவாத தடைச்சட்டம் இந்நாட்டில் நீக்கப்படுமாகவிருந்தால் நிச்சயம் விடுதலைப்புலிகளது கட்டமைப்பு நேர்த்தியாக இயங்கக்கூடிய சூழ்நிலை உருவாகும். எனினும் இதனை தற்போதைய தமிழ் அரசியல் தலைமைகள் விரும்புவதாகவில்லை. தேசியத் தலைவரது பெயரை உச்சரிப்பதற்கு இந்த ஜனநாயக நாட்டில், ஜனநாயக பாராளுமன்ற அவையில் உரிமை இல்லையென்றால், அவர்களுடன் பேச்சுவார்த்தைகளை நடத்தியதும், நடத்தியவர்களும் தூக்கிலிடப்படவேண்டியவர்களாகவே கருதப்படுவர். பேச்சுக்களைக் குழப்பியடித்தது யார்? விடுதலைப்புலிகளா? இல்லை. இராணுவப் புலனாய்வினரின் ஊடுருவல் திட்டமிட்ட முறையில் சமாதான காலகட்டத்தில் விடுதலைப்புலிகளது போராட்டத்தை வலுவிழக்கச்செய்து சின்னாபின்னமாக்குவது. அதனுடன் இந்திய அரசாங்கத்தின் ரோ இணைந்து செயற்பட்டது என்பதுதான் உண்மை.

 

 

 

 

 

இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் அவர்கள் அரச தரப்பு அமைச்சராகவிருந்தும் விடுதலைப்புலிகளின் மீள்வருகை தொடர்பில் கூறிவிட்டு, தற்பொழுது மக்களுக்காக தனது பதவியைத் துறக்கின்றேன் என்று கூறியுள்ளார். இது அவரது அரசியல் காய்நகர்த்தல்களின் பின்புலத்தில் UNP அரசு செயற்படுகிறது என்று கூறமுடியும். குறிப்பாக ரணில் அவர்களின் வாக்குவங்கி வட-கிழக்கில் சரிவு நிலையினைக் கண்டிருக்கும் நிலையில் தேசியத் தலைவர் பிரபாகரனை வைத்து வாக்குவங்கியை நிரப்பமுடியும் என்பது பிரதமர் குள்ளநரி ரணில் அவர்களின் திட்டமிடலாகும். தலைவர் பிரபாகரனையும் கருணாவையும் இரண்டாக உடைத்த பெருமை அவரையே சாரும். அதுபோன்று தமிழ் மக்கள் மத்தியில் நல்லாட்சி அரசாங்கம் ஒரு இடத்தைப் பிடிக்கவேண்டும் என்பதற்காக, அதனுடன் அரசியலைச் செய்வதற்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் தமது நடவடிக்கைகளை வடகிழக்கில் மட்டுமன்றி உலக நாடுகளிலும் செயற்படுத்தி வருகின்றது.

இதனைத் தமிழ் மக்களாகிய நாம் நன்கு விளங்கிக்கொள்ளவேண்டும். ஆயுதப்போராட்டத்தை சூழ்ச்சியின் ஊடாக மழுங்கடித்த சிங்கள பேரினவாத அரசு, அரசியல் ரீதியாகவும் விடுதலைப்புலிகளது நாமம் உச்சரிக்கப்படக்கூடாது என்பதற்காகவும் விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலைக்கப்பட்டு, துண்டு துண்டுகளாக உடைக்கப்பட்டு, பதவிகளை வழங்கி இந்த இலங்கைத் தீவில் தமிழினம் போராடிய வரலாறு இருக்கக்கூடாது என்பதிலும் குறியாக நிற்கிறார்கள். புனர்வாழ்வு வழங்கப்பட்ட போராளிகளாகவிருந்தாலும், வழங்கப்படாத போராளிகளாகவிருந்தாலும் சரி அரசாங்கம் எச்சரித்தே அவர்களை விடுதலை செய்துள்ளது. அது என்னவென்றால் விடுதலைப்புலிகள் மீள் உருவாக்கம், ஆயுதப்போராட்டம் என்று எவர் முன் வருகிறார்களோ அவர்களது சந்ததியே அழிக்கப்படும். இவற்றைவிடுத்து நீங்கள் இந்த நாட்டில் என்னவேண்டும் என்றாலும் செய்யலாம் என்பதே. தியாகி திலீபன் கூறியதைப்போன்று இனிவரும் காலங்களில் ‘மக்கள் புரட்சி வெடிக்கும், சுதந்திரத் தமிழீழம் மலரும்’ என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

– இரணியன்

தென்னிலங்கையில் தேசியத் தலைவர் பிரபாகரனின் உருவப்பொம்மையினை  எரித்தவர்களை தூக்கில் இடவேண்டும் இவர்களே இனவாதிகள்

SHARE