தென் கொரியாவில் 5 ராணுவ வீரர்கள் சுட்டுக்கொலை

541

தென் கொரியாவில் கோசியாங் நகரம் வட கொரியா எல்லையில் உள்ளது. இங்கு இரு நாட்டு ராணுவ வீரர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளளர். இந்த நிலையில் அங்கு பணியில் இருந்த தென்கொரிய ராணுவ வீரர் ஒருவர் உடன் பணிபுரியும் மற்ற வீரர்கள் மீது சரமாரியாக துப்பாக்கியால் சுட்டார்.

இதில் 5 ராணுவ வீரர்கள் துப்பாக்கி குண்டு பாய்ந்து அதே இடத்தில் பலியாகினர்.

5 பேர் காயம் அடைந்தனர். எதற்காக அவர் மற்ற வீரர்களை துப்பாக்கியால் சுட்டார் என்ற விவரம் தெரிய வில்லை.

SHARE