தேசியத் தலைவரின் சிந்தனையிலிருந்து த.தே.கூட்டமைப்பு விலகிச்செல்கின்றதா?

413

நடைபெற்றுமுடிந்திருக்கும் பாராளு மன்றத்தேர்தல் முடிவுகளின் படி தமிழ்மக்களின் ஆதரவோடு வடகிழக்குப்பகுதிகளில் த.தே. கூட்டமைப்பு அமோக வெற்றியினைப் பெற்றுக்கொண்டது. இவர்களின் பரி ணாம வளர்ச்சியின் காரணமாக இன்று எதிர்க்கட்சியின் ஆசனத்தில் த.தே.கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் பாராளு மன்றத்தில் அமர்ந்திருக்கின்றார். பெரும்பாலான தமிழ்மக்கள் மற்றும் ஆய்வாளர்களின் கருத்தின்படி, த.தே.கூட்டமைப்பு புதிய அரசாங்கத்திற்கு விலைபோய்விட்டது என்பதாகும். அதற்கான காரணமாக இனப்படுகொலை தொடர்பில் த.தே.கூட்டமைப்பு பின்வாங்கியுள்ளது என்கிறார்கள். இதேவேளை எதிர்வரும் ஐ.நா அமர்வில் த.தே.கூட்டமைப்பினர் கலந்து கொள்ளப்போவதில்லை எனவும் தெரிவித்திருக்கின்றார்கள். ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தனது இராஜதந்திரத்தினால் அமெரிக்காவுடன் கலந்துரையாடி தமது தேசிய பாதுகாப்பினை உறுதிப்படுத்த தீவிரம் காட்டிவரும் அதேநேரம் தமிழ் மக்களுக்கான தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதுபோன்றதொரு மாயை யைக் காட்டிவருகின்றார்.

அஹிம்சை வழியிலான போராட்டங்களின் மூலம் சிங்கள தேசத்திலிருந்து தமிழ் மக்களுக்கான விடுதலையைப் பெற்றுக்கொடுக்க தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலை வர்கள் முயற்சி செய்கின்றார்கள். ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் இணைந்து தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமையை குழிதோண்டிப்புதைக்க முயற்சிகளை மேற்கொள்கின்றார்கள். சம்பந்தன், சுமந்திரன் போன்றோர் பொதுத்தேர்தலுக்கு முன்பதாகவே அரசுடன் இணைந்து செயற்பட ஆரம்பித்துவிட்டார்கள். எதிர்க்கட்சிப் பதவியின் மூலம் தமது ஆசன இருப்பினை தக்கவைத்துக்கொள்ளலாம் என த.தே.கூட்டமைப்பினர் நினைத் திருக்கக்கூடும். சிங்கள தேசத்திற்கு மீண்டும் அடிவருடிகளாக செயற் படுவதே இவர்களது நோக்கமாகக் கருதப்படுகின்றது.

இன்று உள்ளக விசார ணைகள் என்ற போர்வையில் தமிழ் மக்களை ஏமாற்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றதா? என உரியவர்களிடம் கேள்வியும் எழுப்பப்படுகின்றது. போராட்டத்தை குழிதோண்டிப்புதைக்கும் நிலைக்கு தமிழ் மக்கள் தள்ளப்பட்டிருக்கின்றார்கள். காரணம் என்னவென்றால் 30வருட காலப்போராட்டத்தில் தமிழ்மக்கள் பல்வேறான இன்னல்களை அனுபவித்துவந்தார்கள். கைக்கெட்டியது வாய்க்கெட்டாது போனமைக்கான காரணமும் த.தே.கூட்டமைப்பினரே எனக்கூறப்படுகின்றது. ஒரு நாடாளுமன்ற உறுப்பினர்களாவது உன்னாநோன்பிருந்து தமிழ் மக்களுடைய இனப்படுகொலையை தடுத்து நிறுத்த முன்வரவில்லை. தமது உயிரைப்பாதுகாப்பதற்காக உயர்பாதுகாப்பு வலயங்களிலும், வெளி நாடுகளிலும் வசித்துவந்த வரலாறுகளே இருக்கின்றன.

இதைப்போன்று பல்வேறான விமர்சனங்கள் தற்போது த.தே. கூட்டமைப்புக்கு எதிராக முன் வைக்கப்படுகின்றது. இதில் குறிப்பாக தேசியத்தலைவரின் போராட்டத்திற்கு மதிப்பு வழங்கப்படுகிறதா? அல்லது அவரது போராட்டம் பயங்கரவாதப் போராட்டம் என த.தே.கூட்டமைப்பே அடையாளப்படுத்துகின்றதா? இனப் படுகொலைக்கு எதிராக தேசியத்தலைவர் பிரபாகரன் போரிடவில்லை என்பதை எடுத்துக்காட்டவே சர்வதேச விசார ணைகளில் இருந்து த.தே.கூட்டமைப்பு பின்வாங்குகிறது எனவும் கூறப்படுகின்றது. அதுமட்டுமல்லாது வடமாகாணசபையில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் அவர்களால் தமிழர் பிரதேசங்களில் இனப்படுகொலையே இடம்பெற்றது என்பதை உறுதிப்படுத்தும் விதமாக நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களுக்கான முடிவு என்ன? இன்று இவ்வினப்படுகொலைகள் தொடர்பில் த.தே.கூட்டமைப்புக்கும், வடமாகாணசபைக்கும் இடையில் முறுகல் நிலை தோன்றியுள்ளது. கூட்டமைப்புடன் இணைந்து செயற்படுவதே வடமாகாண சபையாகும். எனினும் தற்போது இருவருக்கும் இடையில் முரண்பாடுகள் உருவாகியிருக்கின்றபோது அதனை சிங்கள தேசம் வேறுகண்ணோட்டங்களில் நோக்குகிறது. இதனை அவர்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு முறுகல் நிலையை வலுப்படுத்துவதற்கான வழிகளை திட்டமிட்டு செயற்படுத்தி வருகின்றார்கள். இதற்கான அடித்தளங்களை த.தே.கூட்டமைப்பே உருவாக்கி வருகின்றது என்பதும் குற்றச்சாட்டாகும்.

சம்பந்தன் அவர்களுக்கு விடுதலைப் புலிகளுடைய போராட்டத்தில் குறைந்த பட்சமேனும் நம்பிக்கை இருக்கவில்லை. அதனையே அவர் பல்வேறு அரச இராஜதந்திரிகளைச் சந்திக்கும்போதும் கூறியிருக்கின்றார். மாவை சேனாதிராஜா அவர்கள் கூட பல்வேறான மேடைகளில் உரையாற்றும்போது தேசியத்தலைவரின் போராட்டத்தை தேர்தல் காலங்களில் மாத்திரம் பயன்படுத்தினாரே தவிர வேறு எந்த இடத்திலும் போராட்டத்தை அவர் ஏற்றுக்கொண்டதாக இல்லை என்பதும் குற்றச்சாட்டுக்களில் ஒன்று.

இவ்வாறாகவிருக்கின்றபொழுது த.தே. கூட்டமைப்பினுடைய முக்கிய உறுப்பினர்கள் இனப்படுகொலை, தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமை, 30 வருட காலப்போராட்டம் என்ப வற்றையும் நிராகரிக்கின்றார்களா? என்று சந்தேகம் கொள்ளவைக்கின்றது. இனப்படுகொலைக்காக சர்வதேச மட்டத்தில் குரல்கொடுத்துவந்த பல்வேறான மதத்தலைவர்கள், மனித உரிமை ஆணைக்குழுக்கள், சமூக ஆர்வலர்கள், இலங்கைப் புலனாய்வுத்துறையின் அச்சுறுத் தல்களுக்கு உள்ளாகியிருந்ததுடன் பலர் 04ஆம் மாடியிலும் தடுத்து வைக்கப்பட்டிருந்தனர். இவர்களின் விடுதலை தொடர்பாகவும் த.தே.கூட்டமைப்பு அக்கறை கொள்ளவில்லை.

ஜனாதிபதித்தேர்தலுக்கு முன்பதாக சுமந்திரன் அவர்களுடைய வெளிநாட்டு விஜயங்களின்போது விடுதலைப்புலிகளுடைய போராட் டத்திற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்திருந்தமை பதிவாகியுள்ளது. சுமந்திரன் அவர்கள் ஒருவிடயத்தினை புரிந்துகொள்ளவேண்டும். த.தே. கூட்டமைப்புக்கு இன்றுவரை மக்கள் ஆதரவு வழங்குகின்றார்கள் எனில் அதற்கான காரணம் தேசியத்தலைவர் பிரபாகரனின் போராட்டத்திற்கும், அவரால் உருவாகியதே இந்த த.தே.கூட்டமைப்பு என்பதற்காகவுமேயாகும். இதனை மனதில் கொள்ளவேண்டும். இன்று சர்வதேசம் வரை தமிழ்மக்களுடைய பிரச்சினைகள் கொண்டுசெல்லப்பட்டிருக்கின்றது. தமிழ் மக்களுடைய பிரச்சினையில் எவ்வளவு தூரம் த.தே.கூட்டமைப்பு தீவிரம் காட்டுகின்றது என்பதற்கு அவர்களது கடந்தகால செயற்பாடுகளைப் பார்க்கமுடியும்.

தமிழ் மக்களது பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் உன்னா நோன்பிருக்கப் போவதாகக்கூறிய ரெலோவின் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் இன்று பகிரங்கமாகவே நடமாடுகின்றார். சூடு சுரணை என்ற ஒன்று இவருக்கு இருக்கின்றதா? என மக்களால் சந்தேகிக்கப்படுகின்றது. பேச்சளவில் மாத்;திரமே. செயலளவில் இவர்கள் அதனை செயற்படுத்த தவறியமையால் மக்கள் அவநம்பிக்கை கொள்ளவேண்டிய சூழ்நிலைகள் உருவாகியுள்ளது. கூட்டமைப்பு என்ற போர்வையைப்போர்த்திக்கொள்ளும் இவர் கள் உள்ளே மிருகம் வெளியே கடவுள் எனச் செயற்படுவது தமிழினத்திற்கு மிக வும் ஆபத்தானது.
இவர்களின் செயற்பாட்டிற்கு எதிராக த.தே.கூட்டமைப்பின் அங்கத்தவர்கள், வடமாகாண சபையின் உறுப்பினர்கள் என பலரும் போர்க்கொடியினைத் தூக்கி வருகிறார்கள். நிலைமைகள் இவ்வாறு தொடருமாகவிருந்தால் தமிழ் மக்களுடைய நிலவரம் எங்கு செல்லும் என்பது கேள்விக்குறியாக மாறும். இதற்கிடையில் எங்கு சென்றும் எதிலும் வெல்வோம் என கூட்டமைப்பின் தலை வர் இரா.சம்பந்தன் மற்றும் சுமந்திரன் போன்றோர் கூறிவருகின்றார்கள். த.தே.கூட்டமைப்பு ஒருகுடையின் கீழ் செயற்படுவது என்பதே தமிழ் மக்களுக்கு மகத்தானதொரு வெற்றியினைக் கொடுக்கும். போராட்டத்தின் முடிவிற்கு விடைகிடைக்கவேண்டுமாகவிருந்தால் ஐ.நா சபையினை வலியுறுத்துவதனுடைய தேவை இருக்கின்றது. மனித உரி மையை மீறுகின்ற செயற்பாடுகளை இலங்கையரசு மேற்கொண்டது என்பதற்கு பல ஆதாரங்கள் இருக்கின்றன. இவற்றை மூடிமறைக்கும் திட்டமாக த.தே.கூட்டமைப்பு செயற்படுமாகவிருந்தால் நிச்சயமாக மக்கள் இவர்களுக்கெதிராக கடும்போக்கினை கையாளவேண்டிய சூழ்நிலை உருவாகும்.

இந்த தமிழ்க் கூட்டணிக்குள் கட்சியின் தலைவர்கள் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்கள் வாய்திறந்து பேச இயலாத அளவிற்கு தமிழரசுக்கட்சியின் ஆளுமை காணப்படுகின்றது. தமிழீழ விடுதலைப்புலிகளின் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்டதன் பின்னர் அரசுக ளுடன் இணைந்து செயற்பட்டு வந்த விடயங்களில் தமிழ் மக்கள் அடைந்த நன்மைகள் என்ன? ஒரு இலட்சத்து நாற்பதாயிரத்திற்கும் அதிகமானோர் இறுதி நேர யுத்தத்தின்போது கொலைசெய்யப்பட்டார்கள். இவர் களுக்கான தீர்வுகள் என்ன? இந்த அரசினைக் காப்பாற்ற த.தே.கூட்டமைப்பு முனைகின்றதா?

2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளின் வெளியேற்றத்தின் பின்னர் முதல் தடவையாக யாழ்ப்பாணத்தில் அரசியலில் ஈடுபட்டுள்ள மிதவாதிகளுக்கும், கடும்போக்காளர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளமையை அவதானிக்க முடிகிறது என்று இந்திய நாளிதழ் ஒன்று எழுதியுள்ளது. இந்த மோதல் வடமா காண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன், தமிழ்தேசியக்கூட்டமைப்புக்கு எதிராக மேற்கொண்ட நடவடிக்கையை அடுத்தே வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

கடந்த ஓகஸ்ட் 17ஆம் திகதியன்று இடம்பெற்ற பொதுத்தேர்தலின்போது விக்னேஸ்வரன் தமது கட்சியான தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பதிலாக தமிழ்த்தேசிய மக்கள் முன்னணிக்கு ஆதரவளிக்குமாறு தமிழ் மக்களிடம் கோரிக்கை விடுத்தார். இந்தநிலையில் கட்சிக்கூட்டத்தின்போது இந்த விடயம் தொடர்பில் விவாதிக்கப்படும் என்று கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்திருந்தார்.எனினும் இந்த சவாலுக்கு மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள 7 ஆசனங்களில் 5 ஆசனங்களை வெற்றிப்பெற்றமை குறித்து அரசியல் நோக்குநர்கள் ஆச்சரியம் வெளியிட்டுள்ளனர்.
இந்த நிலையில் விக்னேஸ்வரனுடன் தேர்தலில் தோல்வியடைந்த முன்னாள் கடும்போக்காளர்கள் உள்ளக சவால்களில் ஈடுபட்டார்கள். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி, தமிழ் சிவில் சமூகம், விடுத லைப் புலிகளின் ஆதரவு புலம்பெயர்ந்தோர் மற்றும் தமிழ் ஊடகங்கள் வெளியக சவால் விடுப்போராக இருந்தார்கள். இதில் கடும்போக்காளர்கள் போர்க்குற்றத்துக்கு சர்வதேச விசாரணை மற்றும் சர்வதேச தீர்ப்பாயத்தை கோருகின்றனர். எனினும் மிதவாதிகள் சர்வதேச விசாரணை ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் சர்வதேச நீதிமன்றம் ஒன்று அமைக்கப்படவேண்டும் என்று கோரியுள்ளனர்.

எதிர்க்கட்சியாக அங்கீகாரம் கிடைத்தமையானது தமிழர் விடயத்தில் உதவும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தெரிவிக்கிறது. அத்துடன் அமரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகளை நாடாமல் தமிழர் பிரச்சினையை தீர்க்கமுடியாது என்றும் அவர்கள் கருதுகின்றனர். எனி னும் பதவிகளை கடும்போக்காளர்கள் எதிர்க்கின்றனர். இந்தியா உட்பட்ட மேற்கத்தைய நாடுகளை நம்புவது தமிழ் மக்களுக்கு உதவாது என்றும் அவர்கள் குறிப்பிடுவதாக இந்திய நாளிதழ் கூறியுள்ளது. இதில் எது உண்மை என்பது தமிழ் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. எவ்வாறிருப்பினும் த.தே.கூட்டமைப்பை இன்னமும் தமிழ் மக்கள் நம்பியிருக்கின்றார்கள். இந்த நம்பிக்கைக்கு பாத்திரமாக த.தே.கூட்டமைப்பு இனப்படுகொலையினை முன்னி றுத்தி சர்வதேச விசாரணையை நிராகரித்து உள்ளூர் பிரச்சினை எனக்கூறி உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்ளப்போகின்றதா? அல் லது இனப்படுகொலைதான் என்பதை நிரூபித்து மஹிந்த ராஜபக்ஷ சார்ந்த இராணுவ சகாக்களையும் தூக்கி லிடப்போகின்றார்களா? தமிழ் மக்கள் வாக்களித்திருப்பதன் காரணம் பிரச்சினைகளுக்குத் தீர்வினைக் காண்பார்கள் என்கின்ற நம்பிக்கைக்காகவே. இதனை மிக விரைவாக செயற்படுத்துவது த.தே.கூட்டமைப்பின் தலையாய கடமையாகும். சோரம்போகாதளவிற்கு த.தே.கூட்டமைப்பின் நடவடிக்கைகள் அமைந்தால் அது தொடர்ந்தும் தமிழ்மக்கள் மத்தியில் நிலை பெறும். இல்லையேல் தமிழினத்தை மீண்டும் ஒரு போர்ச்சூழலுக்குள் இந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இட்டுச்செல்லும் என்பதில் சந்தேகமில்லை.

இரணியன்

SHARE