தேசியம் சுயநிர்ணய உரிமையை சிதைக்க படையெடுத்துள்ள அரச புலனாய்வு ஊடகங்கள்

661

30 வருட கால அகிம்சை போராட்டம், 30 வருட கால ஆயுத போராட்டம் தற்பொழுது சொல்லி நிற்கும் செய்தி என்ன என்பது பற்றி நன்கு அறிந்திருக்க வேண்டும். தமிழ் மக்களுடைய அபிலாசைகளைச் சிதைக்கும் நோக்கில் பல ஊடக நிறுவனங்கள் செயற்பட்டு வருகின்றமை கவலையளிக்கின்றது. கூலிக்கு மாறடிக்கும் ஊடகவியலாளர்கள் பலர் தற்பொழுது ஊடக நிறுவனங்களுக்கு மாறடிக்க தொடங்கி விட்டார்கள். பிறப்பில் தமிழர்களாக இருந்தும் தங்கள் வறுமையின் நிமித்தம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற நோக்கில் தேசியத்தையும் சுயநிர்ணய உரிமையையும் மலுங்கடிக்கும் நோக்கில் இவர்கள் களம் இறக்கப்பட்டிருக்கிறார்கள். பணம் சம்பாதித்தால் போதும் என்பதே இவர்களின் நோக்கம்.
முகநூல்களிலும் இணையத்தளங்களிலும் தமிழினத்தை தமிழரசியலை இளிவுபடுத்தி தமிழினத்தின் போராட்ட விழுமியங்களை கொச்சைப்படுத்தி செய்திகளையும் இவர்கள் வெளியிட்டு வருகிறார்கள்.

விடுதலைப்புலிகளின் அஞ்சலி நிகழ்வுகளை படம் போட்டுக் காட்டி தாங்களும் தேசியம் சார்ந்தவர்கள் என்று மக்கள் நம்புவதற்காக நாடகம் ஆடி ஊடகம் என்ற போர்வையில் நிவாரணங்கள் கொடுத்து மக்களை ஏமாற்றும் ஒரு புதிய பாணி தற்பொழுது யுத்தத்தின் பின்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னரே இவ்வாறான ஊடகங்கள் முளைத்து வந்திருக்கின்றது. வடக்கிலும், கிழக்கிலும் இவ்வாறு முளைத்து வந்த 150 ஊடகவியலாளர்களின் பெயர் பட்டியல் எம்மிடம் இருக்கிறது.

இவர்கள் இராணுவ இரகசிய புலனாய்வுகளுடன் தொடர்புகளை ஏற்படத்தி தமது ஊடக பணிகளை மேற்கொண்டு வருகிறார்கள். இது போன்று தென்னிலங்கையிலும் 50 க்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் தேசியத்தை சிதைக்கும் நோக்கில் செயற்பட்டு வருகின்றார்கள். அவர்களின் நோக்கம் என்னவென்றால் தமிழீழ விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட த.தே.கூட்டமைப்பை இல்லாதொழித்து வடகிழக்கிணைந்த தமிழர் தாயகம் என்ற கோரிக்கைக்கு இடமில்லாத வகையில் செயற்படுத்துவது ஒரு நோக்கமாகும். இன்னும் பல விடயங்களை கூறுவதற்கு முன் மேற்குறிப்பிட்ட ஊடகவியலாளர்களிடம் கேட்க வேண்டிய கேள்விகள் சில உள்ளன.

1. வடகிழக்கு இணைந்த தமிழர் தாயகத்தை மாறி மாறி வந்த அரசாங்கங்கள் ஏன் நிராகரித்து வருகின்றன, ஏன் தர மறுக்கின்றன? என்று சிங்கள அரசியல் தலைவர்கள் எவரிடமாவது குறித்த ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியிருக்கிறார்களா?

2. கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் அதற்கான சரியான தீர்வை இதுவரையில் அரசாங்கம் ஏன் பெற்றுத்தரவில்லை? என்ற கேள்வியை அரச தரப்பு அதிகாரிகளிடம் கேட்டிருக்கிறார்களா?

3. போராட்டம் முற்றுப்பெற்று விட்டது. ஆனாலும் 11 வருடங்களை கடந்துள்ள நிலையில் விடுதலைப்புலிகள் மீது பயங்கரவாத சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது. ஏனைய ஆயுத இயக்கங்கள் மீது அந்த சட்டம் பாய்ச்சப்படவில்லை. ஆகவே விடுதலைப்புலிகள் சுதந்திரமாக இந்த நாட்டில் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ள அது தடையாக இருக்கிறது. குறித்த ஊடகவியலாளர்கள் ஒரு தமிழ் தாய்க்கு பிறந்திருந்தால் ஏன் பயங்கரவாத சட்டத்தை எடுக்க கூடாது அதை எடுதால் என்ன எடுக்கா விட்டால் நாம் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொள்வோம் என்று கட்டுரைகளோ விமர்சனங்களோ அரசாங்கங்களுக்கு வாக்காளத்து வாங்குகின்ற ஊடகங்கள் ஊடகவியலாளர்கள் இது பற்றி கேட்டதுண்டா?

4. 1 இலட்டத்து 40 ஆயிரம் பேர் ஈழப்போரின் இறுதிக்கட்டத்தில் கொலை செய்யப்பட்டிருக்கிறார்கள் என்ற முழுமையான ஆதாரங்கள் தமிழ் ஊடகவியலாளர்களின் கையில் இருக்கிறது இவற்றை தினந்தோறும் பிரபல்யம் வாய்;ந்த ஊடகங்களில் போட்டுக்காட்டுவதனூடாக தவறிழைத்த இராணுவ உயர் அதிகாரிகள் மற்றும் குறித்த அக்காலகட்டத்தில் கடைமையாற்றிய இராணுவ கட்டளை அதிகாரிகள் சர்வதேசத்தில் கண்டிக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கும் அல்லவா?

5. இலங்கை நாட்டு தேசிய கொடியை ஏற்கின்றீர்களா என்று தமிழின அரசியல்வாதிகளிடம் கேட்கின்ற சிங்கள தமிழ் ஊடகவியலாளர்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். சிங்களவர்கள் இந்த கேள்வியை கேட்பதில் நியாயம் உண்டு. ஒரு தமிழனாய் பிறந்த ஊடகவியலாளராய் பிறந்த நீங்கள் தேசியக் கொடியில் குறிப்பிடப்படும் சின்னங்கள் அதன் நிறங்கள் தமிழினத்தை ஒரு சிறுபான்மை இனமாக சித்தரித்து அடிமையான வாழ்வை வாழ்வதையே எடுத்துக்காட்டும் விதமாக அமைகிறது. இதனை தட்டிக்கேட்டு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிடமாவது அல்லது பிரதமர் மகிந்த ராஜபக்சவிடமாவது நேரடி நேர்காணலை நடத்தியிருக்கிறீர்களா? இது தொடர்பில் பௌத்த துறவிகள் இன துவேசத்தை கக்குகின்றார்களே இவர்களை எச்சரிக்கும் வகையில் தமிழ் ஊடகங்கள் நடந்திருக்கின்றனவா?

6. குறித்த தமிழ் ஊடகங்கள் ஊடகவியலாளர்கள் பணி புரிவது தமிழ் பேசும் மக்கள் மத்தியில் இதுவரையில் எமது இன விடுதலைக்காக பேனா முனைகளில் போராடிய 35 ஊடகவியலாளர்கள் ஊடக அடக்கு முறையினால் மரணத்தை தழுவிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சேதியம் சுயநிர்ணய உரிமையை நேசித்தவர்கள். ஊடக தணிக்கையை அரசாங்கம் ஏற்படுத்திவிட்டே இந்த போரை முடிவிற்கு கொண்டு வந்தது. குறித்த ஊடகவியலாளர்களுக்கு வேண்டிய நியாயத்தை கூட உங்களால் பெற்றுக்கொடுக்கமுடியவில்லை.

ஆனால் இது பற்றி குரல் கொடுக்கின்ற ஊடகவியலாளர்களையும் ஊடக பணிப்பாளர்களையும் 4 ஆம் மாடிக்கு அழைத்து விசாரணை செய்த பொழுதும் குறித்த ஊடகங்கள் மௌனம் காத்து வந்தன. தொடர்ந்தும் இது தொடர்பான அழுத்தங்களை கொடுப்பதில்லை ஆனால் த.தே.கூ பாராளுமன்ற உறுப்பினர்களைத் தான் துருவி துருவி அரசாங்கத்துடன் மோத வைக்கின்ற கேள்விகளை தொடுத்து இனவாத்தை தூண்டுகின்ற கேள்விகளை தொடுத்து மீண்டுமொரு ஆயுத போராட்டத்தை இந்த நாட்டில் உருவாக்க குறித்த ஊடகவியலாளர்கள் முற்படுகின்றார்களா என்ற சந்தேகத்தை தோற்றுவிக்கின்றது. போர் உச்சகட்டம் இடம் பெறுகின்ற காலப்பகுதியில் வெறிட்டாஸ் வானொலியை தவிர எந்தவொரு ஊடகத்தையும் கேட்டு அதனை உண்மை என நம்பியது இல்லை.

ஒரு தமிழினத்தை பார்த்து ஆயுத போராட்டத்தை ஏற்றுக்கொள்கின்றீர்களா என்று ஒரு சிங்களவன் கேட்கலாம் அது தவறில்லை ஆனால் ஒரு தமிழனே இதைப் பற்றி கேட்கும் பொழுது இந்த போராட்டத்தின் தன்மை அறியாத ஒருவராக இருக்கின்றார் என்று பொருளல்ல. தெரிந்தும் கொழுவி விட்டு கூத்துப்பார்ப்பதற்காக அதனை கேட்கின்றார்.

7. மாற்றுத் தலைமை என்ற ஒன்று தேவையென்றால் அகிம்சை ரீதியில் உருவாக்கப்பட்ட தமிழரசுக் கட்சி ஒரு அணியாகவும் ஆயுத போரட்டத்தினூடாக வந்த மற்றுமொரு ஆயுத போராட்ட வீரர்கள் தனியாகவும் ஒரு மாற்று அணியை உருவாக்கலாம். அல்லது மாற்று அணியை பற்றி பேசலாம் தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து பிரிந்து சென்றவர்களும் இராணுவ அரச புலனாய்வுகளுடன் சேர்ந்து கூட்டமைப்பை பிளவுபடுத்துபவர்களும் மாற்று அணி வேண்டும் என்று கூறி நிற்பது ஏற்றுக்கொள்ள முடியாதது. இதனை மக்கள் அறிவார்கள். தற்பொழுது மகிந்த அவர்கள் ஈழக்கோரிக்கை சாத்தியம் அற்றது, தனி நாட்டு கோரிக்கை சாத்தியமற்றது என்று கூறியிருக்கிறார். இதற்காக பிரபல்யம் வாய்ந்த ஊடகவியலாளர்களே அரசாங்கத்துடன் மோதி செய்திகளை எழுதுவதற்கு நீங்கள் தயாரா?

8. தேசியம் சுயநிர்ணய உரிமையை குழப்புகின்ற நடவடிக்கைகளில் ஏன் நீங்கள் களமிறங்கியிருக்கின்றீர்கள் என்ற சந்தேகம் தற்பொழுது வலுப்பெற்றுள்ளது. காலத்துக்கு காலம் அல்லது 10 வருடங்களுக்கு ஒரு முறை ஆட்சிகளில் மாற்றம் ஏற்படுவது வழக்கம். ஆகவே தமிழ் மக்கள் ஆகிய நாம் தமிழினமாகிய நாம் சிந்தித்து செயற்பட வேண்டிய தேவை எமக்கிருக்கிறது. குறித்த பிரபல்யம் வாய்ந்த கொழும்பு ஊடகம் ஒன்று த.தே.கூ தலைவர் இரா. சம்மந்தன் அவர்களை சுமந்திரனை மடக்கியது போன்று மடக்கலாம் என்று கேள்விகளை சரமாறியாக தொடுத்தது.

அரசியலில் சிறந்த சானக்கியன் என்று கூறப்படும் சம்மந்தன் அவர்கள் சிறந்த பதலளித்தார். போராட்டம் பற்றி என்ன நினைக்கின்றீர்கள்? என்ற கேள்வியும் கேட்கப்பட்டது. ஆயுத போராட்டம் பற்றி தெளிவில்லாத ஒருவரா அந்த கேள்வி கேட்ட அனுப்;பப்பட்டார் தேசிய கொடி பற்றி கேள்வி கேட்டதிலும் தமிழ் மக்களுக்கான தீர்வுக்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது? தேசியக் கொடி பிரச்சனை மூன்று சதாப்தங்களுக்கு மேல் எழுப்பப்பட்ட பிரச்சனை.

குறிப்பாக தேசியம் சுயநிர்ணய உரிமை பொலிஸ் காணி அதிகாரம், காணி விடுவிப்பு, இனப்படுகொலைக்கான நீதி, அதிகார பரவலாக்கல், வடகிழக்கிணைந்த தமிழர் தாயகம் போன்ற பிரச்சனைகளில் தமிழ் மக்களுக்கான தீர்வை பெற்றுத்தர மாறி மாறி வந்த எந்த அரசாங்கங்களும் சம்மதிக்கவில்லை. இவர்கள் போர் சமாதானம் என்று காலத்தை இழுத்தடித்து ஆயுதம் ஏந்தி போராடியவர்களின் போராட்டங்களை மலுங்கடித்து தற்பொழுது அரசியலில் எந்த தீர்வும் இல்லையென்று தமிழினத்தை கொண்டு வந்து விட்டிருக்கிறார்கள்.

அகிம்சை ரீதியாக பேசுகின்ற தமிழ் தேசிய கூட்டமைப்பே அதற்கு சரிவரவில்லை என்றால் அடுத்த நகர்வு என்ன என்பது பற்றியும் குறித்த ஊடகவியலாளர்களுக்கு தெரிய வேண்டும். பேனா முனை என்பது மிக கூர்மையானது அதனூடாக பல சாதனைகளை சாதிக்க முடியும். ஆகவே தமிழ் பேசுகின்ற ஊடகவியலாளர்களாகிய நாம் தமிழ் பற்றுள்ளவர்களாக தமிழ் தேசியத்தை சுயநிர்ணய உரிமையை குழிதோண்டி புதைக்காத வகையில் எமக்கு தீர்வை பெற்றுத்தர விருப்பமில்லாத சிங்கள இனவாதிகள் பலர் இருக்கின்றார்கள். சிங்கள சமூதாயத்தில் நல்லவர்களும் இருக்கிறார்கள் அவர்களிடத்தில் சென்று தமிழ் மக்களின் போராட்டம் பற்றிய விளிப்புணர்வுகளை குறித்த ஊடகவியலாளர்கள் மேற்கொள்வது அத்தியாவசியம். எமக்கான உரிமையை நாங்களே பெற்றுக்கொள்ள வேண்டும். அதில் ஒரு விடயத்தை கூற விரும்புகின்றோம். என்னவென்றால் விடுதலைப் புலிகளால் உருவாக்கப்பட்ட த.தே.கூட்டமைப்பின் பேச்சாளராக இருக்கும் சுமந்திரன் அவர்கள் தொடர்ந்தும் பேச்சாளராக இருப்பதற்கு தகுதியற்றவர். அவர் தமிழரசு கட்சியில் பேச்சாளராக இருப்பதற்கு தகுதியுடையவராக இருக்கலாம். ஆயுதம் ஏந்தி போராடியவர்களை இழிவுபடுத்துகின்ற ஒரு நேர்காணலாகவே குறித்த நேர்காணல் பார்க்கப்படுகிறது.

ஆகவே தமிழ் பேசும் ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் குழம்பிக்கொள்ள வேண்டிய தேவையில்லை. காலப்போக்கில் அரசாங்கம் ஒட்டுமொத்த தமிழினத்தையே அடிமை வழிக்கு இட்டுச்செல்லும் விளிப்புணர்வுடன் செயற்பட வேண்டியது அவசியம் என்பதையே நான் கூற விரும்புகின்றேன்.

SHARE