இலங்கை அரசியலை தற்பொழுது உற்றுநோக்குவோமாக இருந்தால் யுத்தத்திற்கு முன்னர் யுத்தத்திற்கு பின்னர் என்று ,ரண்டாக வகைப்படுத்திப் பார்க்கலாம். தமிழினத்தின் விடுதலைக்காகப் போராடிய அனைத்து ஆயுதக் கட்சிகளையும் மழுங்கடிக்கின்ற அல்லது முற்றாக அழித்தொழிக்கின்ற நடவடிக்கைகளிலேயே மாறி மாறி வந்த அரசாங்கம் அன்றிலிருந்து இன்று வரை செயற்பட்டது. ,தனை தமிழ் குழுக்களை வைத்தே தமிழ் அரசியல் தலைமைகளை வைத்தே சிதைவடையச் செய்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அல்பிரட் துரையப்பா தொடக்கம் லக்ஸ்மன் கதிர்காமர் வரை நூற்று ஐம்பத்திரண்டு தமிழ் புத்தி ஜீவிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். இவ் அரசியல் தலைவர்களுடைய வளர்ச்சி என்பது அல்லது அரசியல் பார்வை என்பது ஒரு சிலரைத் தவிர தேசியம், சுயநிர்ணய உரிமை என்ற அடிப்படையில் தான் தமிழ் மக்களுக்கான தீர்வு வழங்கப்படவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்கள். அதனால் தான் ,ந்த புத்திஜீவிகள் பலர் படுகொலை செய்யப்பட்டனர்.
யுத்தத்திற்கு முன்னர் இடம்பெற்ற ஒவ்வொரு படுகொலைகளும், நடந்து முடிந்த இனப்படுகொலை என்பதும் திட்டமிட்டு ஒரு இனத்தை அழிப்பதற்கான நடவடிக்கையாகவே அமையப்பெற்றது. மீண்டும் அதே நிலைமை தமிழினத்திற்கு ஏற்பட்டு இருக்கின்றது என்பதை நினைக்கும் பொழுது வேதனைப்படுவதா? அல்லது கிளர்ந்தெழுவதா?
• தேசியம், சுயநிர்ணய உரிமையை வழங்க முடியாது என்பது அரசாங்கத்தின் முடிந்த முடிவு.
• பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படாமை
• காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம்
• இனப்படுகொலை
• தமிழ் அரசியல் கைதிகள் விடுவிக்கப்படாமை
• பொலிஸ் காணி அதிகாரம் வழங்கப்படாமை
• ஒற்றை ஆட்சி
• பூகோள அரசியல்
தேசியம், சுயநிர்ணய உரிமை என்கின்ற அடிப்படையின் கீழ் குறிப்பிடப்பட்டிருக்கின்ற விடயங்களை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சரி, தமிழரசுக் கட்சியும் சரி கைவிட்டு விட்டார்கள் என்பதேயாகும். இது தொடர்பாக அரசாங்கத்திடம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் விவாதிக்கவோ? அல்லது வழக்குத் தொடரவோ? முன் வரவில்லை. ஆனால் தமது பாராளுமன்ற இருப்பை தக்க வைத்துக் கொள்ள பாராளுமன்ற உறுப்பினரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளருமான திரு.சுமந்திரன் அவர்கள் நாட்டில் ஜனநாயகத்தை நிலைநாட்ட வேண்டும் என்ற நிலைப்பாட்டோடு பாராளுமன்றம் கலைக்கப்படாது மீண்டும் ,யக்குவதற்கு கடந்த ஆண்டு 12ம் மாதம் எமது தினப்புயல் பத்திரிகையில் ‘சல்வாரைக் காப்பாற்றப் போய் தாவணியை இழந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு” என்று தலைப்பிட்டு கட்டுரை வெளிவந்தது. அதுவே தற்பொழுது நடந்து முடிந்திருக்கின்றது.
நடுநிலைமை வகித்திருந்தால் ஒருவேளை எதிர்க்கட்சி பதவியை காப்பாற்றியிருக்க முடியும். 1983ம் ஆண்டு யூலைப் படுகொலையிலிருந்து 2009ம் ஆண்டு வரையிலான அரசாங்கத்தினது நிலைப்பாட்டை எடுத்துக் கொண்டால் என்ன விலை கொடுத்தும் இப் போராட்டத்தை மழுங்கடிக்கச் செய்து தமிழ் மக்களுக்கான தீர்வுத் திட்டத்தை வழங்கக் கூடாது என்பதில் மாறி மாறி வந்த அரசாங்கங்கள் உறுதியாக இருந்தன.
தென்னிலங்கையில் தமது அரசியல் இருப்பை நிலைகொள்ள வைப்பதற்காக தமிழினத்தை தமிழ் அரசியல் தலைமைகளை பகடைக்காய்களாக பயன்படுத்தி வருகின்றார்களே தவிர, நடந்தது வேறொன்றும் இல்லை. இதனை ஏன் தற்பொழுது இருக்கக் கூடிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அதன் தலைமைகளும் புரிந்து கொள்ளவில்லை. தமிழினம் ஒவ்வொரு காலகட்டத்திலும் பல்வேறு விட்டுக் கொடுப்புக்களைச் செய்து வந்தது. சர்வதேச ரீதியாக தமிழீழ விடுதலைப்புலிகளுடன் ஏழு பேச்சு வார்த்தைகளும், உள்ளுர் பேச்சு வார்த்தைகளாக 14 பேச்சு வார்த்தைகளும் இடம்பெற்றிருந்து. அது மட்டுமன்றி உலக வங்கி உட்பட 27 அமைப்புக்களும் ஆதரவு வழங்கினர். ஏ9 பாதை திறப்பு முதல் கொண்டு இடைக்கால நிர்வாகம் வரை தமிழீழ விடுதலைப்புலிகள் 118 கட்டமைப்புக்களுடன் நீதி நிர்வாகம் முதல் அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கினார். கடல், வான், தரை என்று உலக நாடுகள் தரத்தில் விடுதலைப்புலிகளுடைய செயற்பாடுகள் வியாபித்து வந்தது.
தமிழீழ விடுதலைப்புலிகள் இலங்கையில் தமிழீழத்தைக் கேட்பார்களாக இருந்தால் அல்லது சண்டை இட்டு கைப்பற்றுவார்களாக இருந்தால் இந்தியாவிலும் தமிழ் நாடு தனி நாடாக்கப்படும். இதனுடைய பின்விளைவை அறிந்து கொண்ட இந்தியா தமிழ் ஈழ விடுதலைப்புலிகளை முற்றாக அழித்தொழிக்க வேண்டும் என திடசங்கற்பம் பூண்டது. ஆசிய, பசுபிக், ஐரோப்பியக் கண்டத்தில் தமிழீழ விடுதலைப்புலிகள் பாரிய சக்தியாக மாறுவார்கள் என்ற காரணத்தினால் சீனா, இந்தியா போன்ற நாடுகளும் விடுதலைப்புலிகள் இயக்கத்தை தடைசெய்து பயங்கரவாதிகள் என்று முத்திரை குத்தினர்.
சர்வதேச ரீதியாக நோர்வேயின் மத்தியஸ்தத்துடன் தமிழீழ விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தை நடத்தியிருந்த போதிலும் அதனை அவர்கள் ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை. மாறாக மாவிலாறில் இருந்து ஆரம்பித்த போர் முள்ளிவாய்க்காலில் முடிவடைந்தது. போர் முடிவடைந்து பத்து ஆண்டுகள் முடிவடைந்த நிலையில் ரெலோ, புளொட், ஈபிஆர்எல்எப், ஈபிடிபி போன்ற ,யங்கங்கள் அரசியல் ரீதியாக இன்னமும் தமது நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் அரசியல் அரங்கில் தற்பொழுது தமிழீழ விடுதலைப்புலிகள் இல்லை. அவர்களை இவ் அரசாங்கமோ ஏனைய ஆயுதக் கட்சிகளோ அரசியல் செய்ய விடவும் இல்லை. பயங்கரவாதத் தடைச்சட்டத்தை இன்னமும் இவ் அரசாங்கம் நீக்காமல் இருக்கின்றது. காரணம் என்னவென்றால் தமிழீழ விடுதலைப்புலிகள் மீண்டும் அரசியல் ரீதியாக புத்துயிர் பெற்றுவிடுவார்கள் என்பதேயாகும். அரசியல் ரீதியாக தமிழீழ விடுதலைப்புலிகள் இலங்கையில் கால் பதித்தால் ஏற்கனவே இருக்கக் கூடிய ஆயுதக் கட்சிகள், தமிழரசுக் கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி, தமிழர் விடுதலைக் கூட்டணி இவர்களின் இருப்புக் கேள்விக் குறியாகிவிடும் என்ற பயமே இவர்களுக்கு. இப்படியாக இருக்கின்ற பொழுது காலப்போக்கில் இலங்கையில் வாழக் கூடிய ஐந்தாவது தலைமுறை தமிழினம் போராட்ட வரலாற்றை மறந்து அரசாங்கத்தினுடைய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்பவே செயற்பட ஆரம்பிப்பார்கள்.
ஆயுதப் போராட்டங்கள் மழுங்கடிக்கப்பட்ட நிலையில் மீண்டுமொரு ஆயுதப் போராட்டத்தை கட்டியெழுப்புவது எவ்வாறு என்று பலர் சிந்திக்கலாம். ஒரு இனத்தின் மீது பாய்ச்சப்படுகின்ற அடக்கு முறை என்பதே ஆயுதப் போராட்டமாக மாறியதென்பது வரலாறு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் மத்தியில் தேசியம், சுயநிர்ணய உரிமை பற்றியதான விளக்கங்களைக் கொண்டு செல்வதில்லை.
இதிலே பெரும்பாலும் ஆயுதக் கட்சிகள் இணைந்திருப்பதனால் கடந்த காலத்தில் ஆயுதக்கட்சிகள் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டதன் காரணமாக என்னவோ தமிழ் மக்கள் பிரதேசங்களுக்குச் சென்று இவ்வாறான பரப்புரைகளை செய்வதை விட்டு விட்டு தமது அரசியல் இருப்பை தக்கவைத்துக் கொள்வதற்காக இவர்களுடைய செயற்பாடுகள் இடம்பெறுகின்றது. விடுதலைப்புலிகள் ஆயுதப் போராட்டத்தில் பலமாக இருக்கின்ற பொழுது தான் இலங்கை அரசாங்கம் பேச்சுவார்த்தைக்கு வேறு வழியின்றி வந்தது. ஆகவே விடுதலைப்புலிகளுடைய ஆயுதப் பலத்தை குறைப்பதன் ஊடாக அல்லது இல்லாதொழிப்பதன் மூலமாக வெற்றி காணமுடியும் என்பதை உணர்ந்து கொண்ட இலங்கை அரசு சர்வதேச நாடுகளின் உதவியோடு பேச்சுவார்த்தை என்ற போர்வையில் குறிப்பாக நோர்வே நாட்டுடன் இணைந்து ஒரு இனத்தின் விடுதலைக்காக இறுதிவரை போராடிய தமிழீழ விடுதலைப்புலிகள் மீது தாக்குதலை மேற்கொண்டது. இன்று இப்போராட்டம் மழுங்கடிக்கச் செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை பொறுத்தவரையில் இவ்விடயம் நன்கு தெரியும். அதனை ஏன் இழுத்தடிப்புச் செய்கின்றார்கள் என்று பார்க்கும் பொருட்டு பதவி மோகம் என்றே குறிப்பிடலாம். ஆனாலும் தமிழீழ விடுதலைப்புலிகளுடைய போராட்டமானது சம நேரம் ஒரு பேச்சுவார்த்தை மேசைக்கு அழைத்துச் சென்றது. தற்பொழுது தமிழரசுக் கட்சியானது தமிழினத்தின் காவலன் என்று தன்னைக் காட்டிக் கொண்டு தேசியம், சுயநிர்ணய உரிமைகளுக்கு மாறாக ஒற்றை ஆட்சியின் கீழ் தீர்வு என்ற நிலைப்பாட்டையும் கொண்டுள்ளது என்பது பெரும்பாலான விமர்சனங்கள். தமிழினம் தன்மானத்துடன் தலை நிமிர்ந்து வாழ, சிந்திக்கவேண்டிய காலத்திற்குள் தள்ளப்பட்டிருக்கின்றது என்பதே உண்மை.