தேசிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் குறித்து மாவட்டச் செயலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு ஒன்று ஜனாதிபதி தலைமையில்

325

 

அரசாங்கத்தின் செயற்திட்டங்கள் குறித்து மாவட்டச் செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்
gas-002

தேசிய அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் செயற்திட்டங்கள் குறித்து மாவட்டச் செயலாளர்களுக்கு விளக்கமளிக்கும் மாநாடு ஒன்று ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.

ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இந்த மாநாட்டில், அமைச்சர்களான வஜிர யாப்பா அபேவர்த்தன, துமிந்த திசாநாயக, ஜனாதிபதியின் செயலாளர் அபேகோன் மற்றும் அனைத்து மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்களும் கலந்து கொண்டனர்.

இதன்போது அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் விவசாயத்துறை செயற்திட்டங்கள், சிறுநீரகப் பாதுகாப்புக்கான தேசிய செயற்திட்டம், தேசிய உணவு உற்பத்தி செயற்திட்டம், தேசிய போதை ஒழிப்புத் திட்டம் போன்ற செயற்திட்டங்கள் குறித்து மாவட்டச் செயலாளர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

குறித்த செயற்திட்டங்களை முன்னெடுப்பதில் மாவட்டச் செயலாளர்கள் முன்னுரிமை அளித்துச் செயற்பட்டு அரசாங்கத்தின் இலக்குகளை அடைந்து கொள்ள உறுதுணையாக செயற்பட வேண்டும் என்று இதன்போது ஜனாதிபதி கோரிக்கை விடுத்துள்ளார்.

SHARE