தேசிய அரசாங்கம் தமிழினத்திற்கு ஆபத்தானது

401

இலங்கை சுதந்திரமடைந்த காலந்தொட்டு இற்றைவரைக்கும் தமிழினம் தமது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்யவோ அல்லது தமது அடையாளங்களைக் காப்பாற்றிக் கொள்ளவோ தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமையை பேணிப்பாதுகாப்பதற்கான வழி வகைகளை இலங்கை அரசாங்கம் ஒருபோதும் அனு மதித்ததில்லை. குறிப்பாகத் தென் னிலங்கையின் அரசியலைப் பார்க்கின்றபொழுது, மாறிமாறி வந்த அரசாங்கங்களெல்லாம் தமிழினத்தின் துரோகிகளாகவே செயற்பட்டுவந்தனர். சிறிமாவோ பண்டாரநாயக்கா தொடக்கம் மஹிந்த ராஜபக்ஷ வரையான ஆட்சியாளர்களை எடுத்துக்கொண்டால் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான நிகழ்ச்சிநிரலை நீண்ட காலமாக மேற்கொள்ளாதிருந்தனர். தற்போது மாத்திரம் தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான அரசின் தேவை என்ன?

எனப்பார்க்கின்றபொழுது, சர்வதேச ரீதியாக தமிழினம் இன்று ஒரு அந்தஸ்தைப்பெற்றுக்கொண்ட பிரஜைகளாக வாழ்ந்துவருகின்றனர்.
தமிழினத்தை அழித்தொழிக்கும் நடவடிக்கையில் கடந்த 50 வருடகாலங்களாக இனவாதக்கட்சிகளும், அரசுகளும் செயற்பட்டுவந்த விதமானது இனப்படுகொலைகள் என்ற ரீதியில் முடிவடைந்துள்ளது. தற்பொழுது இந்த இனப்படுகொலையினை மூடிமறைப்பதற்காக முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் போரா ளிகள் தொடர்பில் ஐ.நா சபைக்கு பதில் வழங்கவேண்டும் என்ற காரணத்தினாலும், தமது நாட்டின் தேசி யப் பிரச்சினை பாதுகாக்கப்படவேண்டும் என்ற காரணத்தினாலும் தற்போது தமிழ்த்தரப்பின் தலைவர்களை அழைத்து தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான நிலைப்பாட்டிற்கு மைத்திரிபால சிறி சேனவும், ரணில் அவர்களும் இணக்கப்பாட்டினை எட்டியுள்ளனர்.

இதில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் தலைமை தீர்க்கமான முடிவினை எடுக்காவிட்டால் தமிழினம் பேராபத்தை சந்திக்கும் நிலைமைகள் உருவாகும். அறவழிப்போராட்டங்களை நடாத்திய மூத்த அரசியல்வாதிகள் இதனை நன்கு சிந்திக்கவேண்டும். தமிழினத்திற்குத் தீர்வுகள் கிட்டப்படுகின்றவேளையில் அதனை சீர்குலைக்கும் நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டனர். உதாரணமாக திம்பு தொடக்கம் டோக்கியோ வரையான பேச்சுக்கள் மிக வும் முக்கியத்துவம் வாய்ந்ததாகவே இருந்தது. ஆனால் அதில் ஏதாவது நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கின்றதா? என்றால் இல்லை.

ranil maithri    TNA-Leader
இணக்கப்பாட்டு அரசியலை முதலில் மாகாணசபைகளுக்கிடையில் இந்த அரசாங்கம் கொண்டுவந்ததன் நோக்கம் என்னவெனில், தமிழ்த் தலைமைகளை உடைப்பதேயாகும். அதற்கான முன்நகர்வுகள் நகர்த்தப்பட்டு வருகின்றன. வடகிழக்கு மாகாண சபைகளில் அமைச்சுப்பதவிகளை வகிப்பதன் ஊடாக இந்தத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அபி விருத்திகள் என்ற போர்வையில் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு உடைக் கப்படுகின்றது. தாயகக்கோட்பாடு சிதறடிக்கப்படுகின்றது. தமிழினம் தனித்துவமானது என்கின்ற அடை யாளம் அழிக்கப்படுகின்றது. சிங்களக் குடியேற்றங்கள், பௌத்த ஆலயங்கள் தமிழர் பகுதிகளில் உருவாக்கப்படுகின்றது. அமைச்சர்களின் ஊடாக அபிவிருத்திகளைக்காட்டி அரசு இவர்களை செயற்படவைக்கிறது. காலங்காலமாக தமிழ் மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படுமென சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளுடன் கலந்துரையாடி இலங்கையரசு விடுதலைப்புலிகளுடனான யுத்தத்தினை முடிவிற்குக்கொண்டுவந்துள்ளது.
ஆனால் இன்று அரசாங்கத்தின் தேசியப்பிரச்சினைக்குக் குந்தகம் ஏற்படும் என்கின்ற காரணத்தினால் தமிழ் இனத்தை பகடைக்காய்களாகப் பயன்படுத்தி வருகின்றது. அந்தப்பயன்பாட்டிற்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் ஒருசில அரசியல்வாதிகள் விலைபோயுள்ளனர். அதாவது உள்ளே மிருகம் வெளியே கடவுள் என்கின்றதான செயற்பாடுகளை இந்த அரசியல்வாதிகள் செயற்படுத்துகின்றனர். தேசியத்தலைவரினால் உருவாக்கப்பட்ட இந்த தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அதன் நோக்கம், இலக்கு என்பன திசைமாறிப் பயணிக்கும் வகையில் இவர்களின் செயற்பாடுகள் அமையப்பெற்றுள்ளது.
சர்வதேச நாடுகளின் பார்வைக்கு இங்கு வாழ்கின்ற தமிழினம் சுதந்திரமாக வாழ்கின்றது என்பதை எடுத்துக்காட்ட தேசிய அரசாங்கத்தினை அமைப்பதன் ஊடாக செயற்படுத்த முயல்கிறது. அரசாங்கத்தின் தேசிய சபையில் சம்பந்தன் அவர்கள் ஒரு பிரதிநிதியாக இருக்கின்றார். இந்த தேசிய அரசில் அவருக்கான பிரதிநிதித்துவத்;தினை வழங்கியதன் நோக்கத்தினை அறியாமல் அவர் செயற்படுகின்றார். இதனை இராஜதந்திரம் எனக்கூறி அரசுடன் ஒட்டிக்கொண்டிருக்கும் சம்பந்தன் அவர்கள் ஆழமாகச் சிந்தித்துச்செயற்படுவது சிறந்தது. தேசிய சபையில் மேற்கொள்ளப்படும் தீர்மானங்கள் அதிலுள்ளவர்களின் அனுமதிபெற்று செய்யப்படுகின்றது. அதில் தமிழ் பிரதிநிதித்துவமும் இருக்கின்றது என்பதை இலகுவில் காண்பிக்க இந்த அரசிற்கு முடியும். தமி ழீழ விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் இருந்த காலத்தில் எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும், செயற்பாட்டிற்கும் இணங்கிவராத அரசாங்கம் இன்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்புடன் நட் புறவை ஏற்படுத்தியிருக்கிறது.
குறிப்பாக சுமந்திரன் அவர்களை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வரவேண்டும் என ரணில் விக்கிரமசிங்க அவர்கள் விரும்பினார். அதனது நோக்கம் இவரைக்கொண்டு பாராளுமன்றத்தில் பல்வேறு விடயங்களை தனக்குச்சாதகமாக காய்நகர்த்தலாம் என்பதேயாகும். போராட்டத்தின் வலி யினை உணர்ந்தவர்கள் தமிழினத்தின் பிரதிநிதிகளாக இருக்கவேண்டும் அல்லாது போனால் தேசியப்பற்று என்பது அவர்களுக்கு இல்லாதுபோகும். இதனைச் சீர்குலைக்கும் நோக்கிலேயே மைத்திரி அரசு ரணிலுடன் இணைந்து தமிழ்த்தேசியக்கூட்டமைப்பை துண் டங்களாக உடைப்பதற்கான வழிவகை களை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சுப்பதவிகளை ஏற்கமாட்டோம் எனக்கூறிக்கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு நிச்சயமாக பதவிகளை ஏற்கத்தான்போகின்றது. இறுதியில் ஊடகவியலாளர் மாநாட்டை ஒழுங்குபடுத்தி நாம் ஏன் அமைச்சுப்பதவிகளை ஏற்கின்றோம் என தெளிவுபடுத்துவார்கள். அமைச்சுப்பதவிகளைப் பெறுவதன் மூலம் அது தமிழர் பிரதேசங்களில் அபிவிருத்திகளை மேற்கொள்ள சாதகமாக அமையும் என்பதால், பதவி களை ஏற்கிறோம் எனவும் மறுபக்கத்தில் தமிழ்த்தேசியம், சுயநிர்ணய உரிமைக்கான போராட்டத்தினையும் முன்னெடுப்போம். அதில் மாற்றுக்கருத்தில்லை எனக்கூறிக்கொண்டு அரசுடன் இணைந்து அமைச்சுப்பதவிகளைப் பெற்றுக்கொள்வார்கள். அவ்வாறு பதவிகளை ஏற்றுக்கொண்டதன் பின்னர் குறிப்பாக ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எப் போன்ற கட்சிகளில் உள்ளவர்களுக்கு அமைச்சுப்பதவிகளை வழங்கினால் அடுத்த 06 வருடங்களில் தமது அபிவிருத்தி வேலைகளைக்காட்டி மக்களை சம்பாதித்துக்கொள்வார்கள்.
அதன்பின்னர் பாராளுமன்றத் தேர்தல் வருகின்றபொழுது தனித்துப் போட்டியிடுவோம் என்கின்ற யோசனை இவர்களுக்குத் தோன்றும். தமிழரசுக் கட்சியிடம் எங்களுக்கு 3 அல்லது 4 ஆசனங்களை ஒதுக்கவேண்டும் என இக்கட்சிகளில் உள்ளவர்கள் பேரம்பேசுவார்கள். அப்பொழுது கட்சியில் உங்களுக்கான ஆசனங்கள் இல்லை. நீங்கள் சுயேட்சையாக தேர்தலில் நின்று வாருங்கள் என தமிழரசுக்கட்சியினால் கூறப்படும். இவ்வாறான சதித்திட்டங்களுக்கே ரணில் விக்கிரமசிங்க அவர்கள் தற்போதிருந்தே திட்டம் தீட்டிவருகின்றார். நடைமுறையிலுள்ள அரசியலை விட்டுவிட்டு அதற்கப்பால் சென்று செயற்படுவதென்பது ஒரு சுயநல அரசியல் செயற்பாட்டினையே தோற்றுவிக்கிறது.
தேசிய அரசாங்கம் என்பதனது பொருள் நாட்டிலுள்ள அனைத்து மக்களும் இன மத மொழி வேறுபாடின்றி சமத்துவமாக வாழ்வதேயாகும். அவ்வாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றபொழுது தமிழினத்தின் விடிவுக்காகப்போராடிய போராளிகளுடைய போராட்டம் வீணடிக்கப்படுகின்றது. அது மட்டுமல்லாது ஆயுதமற்ற கலாசாரமொன்றினை உருவாக்கி அரசாங்கத்திற்கு எதிராக ஒருவரும் இல்லை என்கின்றதான நிலைப்பாட்டினைக் கொண்டுவரப் போகின்றது. தேசிய அரசில் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அவர்கள் அங்கம் வகிப்பது சிறந்தது. அப்படியாயின் தமிழர் பிரதேசங்களில் சுவீகரிக்கப்பட்ட காணி கள் மற்றும் அத்துமீறிய குடியேற்றங்கள் இராணுவ பிரசன்னங்கள், பொலிஸ் மற்றும் காணி அதிகாரங்கள் என்பவற்றை ஏன் நடைமுறைப்படுத்த இயலாது. தேசிய அரசிலும் இருக்கவேண்டும். இவ்வாறான விடயங்களை நடைமுறைப்படுத்துவதிலும் சிக்கல் எனில் அவ்வரசில் ஒட்டிக்கொண்டிருப்பதன் அவசியம் என்ன? வெறுமனே பதவிக்காக மாத்திரம் அவர்களுடன் இருப்பதில் பயனில்லை.

அதிகாரங்கள் வழங்கப் படுகின்றபொழுது அவற்றை சிறந்த முறையில் பயன்படுத்தவேண்டும். அதுவே பெறுமதியாக அமையும். தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படாததொன்றல்ல. எத்தனையோ நாடுகளில் வரலாற்று சரித்திர ரீதியாக ஒடுக்கப்பட்ட இனங்கள் இன்று நிம்மதியாக வாழ்கின்றன. மாநிலத்தில் சுயாட்சி என்கின்றபொழுது அங்கு ஒரு சிறந்த அரசியல் நடைபெறுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றது. அதனையே இந்தியா இன்று நடைமுறைப்படுத்தி வருகின்றது. அவ்வாறு தமிழினத்திற்கு வழங்கினால் அதனை விடவும் மேலாகக் கேட்டுவிடுவார்கள். தம்முடைய அரசிற்கே அது பாதகமாக அமையும். சிங்களப் பிரதேசங்களை விட தமிழ்ப்பிரதேசங்களில் அபிவிருத்திகள் அதிகரிக்கும். இதனால் தமிழ் மக்கள் வளர்ந்துவிடுவார்கள். தேசிய அரசாங்கத்தில் இருக்கும் பொழுது அதனை நாம் மட்டுப்படுத்த இயலும் என்கின்ற உள்நோக்கத்துடனும் இந்த அரசாங்கம் தேசிய அரசாங்கத்தினை நிறுவுவதற்கான அனைத்துத்திட்டங்களையும் நடை முறைப்படுத்தியுள்ளது.
தற்பொழுது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியும், ஐக்கிய தேசியக்கட்சியும் தேசிய அரசாங்கம் அமைப்பதற்கான ஒப்பந்தங்களில் கைச்சாத்திட்டுள்ளன. இந்நிலையில் பாராளுமன்றில் அடுத்த நிலையில் இருக்கக்கூடிய தமிழ்த்தேசியக்கூட்டமைப்புக்கும் இவர் களுக்கான ஆதரவினை வழங்கவேண்டிய நிலை தோன்றியுள்ளது. சிங்கள பேரின வாதிகளுடைய பிரச்சினை அதுவல்ல. அவர்கள் தேசிய இனப்பிரச்சினையில் அக்கறைகொண்டு அதனை எவ்வாறு தீர்த்துவைப்பது. உள்ளூர் பிரச்சினையில் தமிழினத்தை எவ்வாறு தமது கட்டுப்பாட்டின் கீழ் வைத்திருப்பது என்பதன் அடிப்படையில் அவர்களின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றது.
போராட்டம் முடிவுக்குக்கொண்டு வரப்பட்டால் தமிழ் மக்களுடைய பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்படும் என்றே முன்பிருந்த அரசு கூறியிருந்தது. ஆனால் தற்போது யுத்தம் முடிவுற்றுள்ளது. தற்போதைய அரசாங்கம் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வினை வழங்கியிருக்கின்றதா? மீண்டும் சிங்கள இனத்தின் அடக்குமுறைகளுக்குள் தமி ழினம் செல்லுமாகவிருந்தால் அது பாரிய அழிவினைத் தோற்றுவிக்கும். அவ்வாறு அடிமைப்படுத்துவதற்கான முயற்சிகளை சிங்கள அரசு மேற்கொள்ளும். இலங்கையில் சீனாவின் தலையீட்டின் காரணமாக அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகள் முட்டுக்கட்டையாக இருந்ததன் விளைவே மஹிந்த ராஜபக்ஷவின் அரசு ஓரங்கட்டப்பட்டது. இன்று இனப்படுகொலைகள் தொடர்பான பேச்சுக்கள் எங்கே? அதற்கான தீர்வுகள் என்ன? ஐ.நா சபையில் பேச்சுக்கள், மனித உரிமைப்பேரவைகளில் மகாநாடுகள், அமெரிக்காவின் தலையீடு, இந்தியாவின் பிரச்சினைகள் எனத் தமிழினத்தின் பிரச்சினைகளைக்கொண்டு தமது அரசியலை இந்த நாடுகள் நிவர்த்தி செய்துகொண்டார்களே தவிர, தமிழ் மக்களது பிரச்சினையில் இவர்கள் அக்கறைகொள்ளவில்லை.
முள்ளிவாய்க்கால் வரை நீண்டுசென்றது யுத்தம். தமி ழினத்தின் அழிவுகளுக்கு அன்றே முற்றுப்புள்ளியினை வைக்க சர்வதேச சமூகத்திற்கு முடிந்திருக்கும். ஆனால் அவர்கள் தயக்கம்காட்டி காலத்தை வீணடித்தார்கள். விடுதலைப்புலிகளின் போராட்டம் சர்வதேசத்தினையே நெருக்கடிக்குள்ளாக்கும் போராட் டமாக மாறியிருந்ததன் காரணமாக விடுதலைப்புலிகள் சர்வதேசத்தினால ;ஓரங்கட்டப்படுவதற்கு காரண மாகவும் அமைந்தது. மீண்டும் விடுதலைப்புலிகளைக்கொண்டு பிழைப்பு நடத்தும் அரசியல்வாதிகளைப்பார்க்கின்ற பொழுது மிகவும் வேதனையாக விருக்கின்றது.
இவ்வாறு தேசிய அரசாங்கத்திற்கு தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு ஆதரவு வழங்குவதன் ஊடாக அடுத்துவரும் தலை முறையும் பாதிக்கப்படும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. தமிழர் பிரச்சினை எங்கு ஆரம்பித்ததோ அங்கேயே மீண்டும் தொடங்கப்போகின்றது என்பதுதான் உண்மை. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் செயற்பாடுகள் அண்மைக்காலமாக அரசின் நிகழ்ச்சிநிரலுக்கேற்ப நடைமுறைப்படுத்தப்படுகின்றது என் கின்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ள அதேநேரம் தேசிய அரசாங்கம் அமைப்பதற்குத் த.தே.கூட்டமைப்பினர் துணைபோவார்களாகவிருந்தால் அது தமிழ்மக்கள் மத்தியில் பாரிய பின்னடைவினைத் தோற்றுவிக்கும். இதுவரை வீராவேசம் பேசியதற்கான பயன் அற்றுப்போய்விடும்.

குறிப்பாக தமிழரசுக்கட்சி இதனை நடைமுறைப்படுத்தினாலும் பங் காளிக் கட்சிகளான ரெலோ, புளொட், ஈ.ஆர்.எல்.எப் போன்ற கட்சிகளில் உள்ளவர்களும் இதற்குத் துணைபோவார்கள் எனில் அவர்கள் தமிழினத்தின் விடிவிற்காகப் போராடியவர்களா? என்கின்ற சந்தேகம் தோற்றுவிக்கப்படும். அது மட்டுமல்லாது தேசிய அரசாங்கம் அமைப்பதற்காகவா இதுவரை காலமும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது என்கின்றதான கேள்வியும் எழுப்பப்படும்.தேசிய அரசாங்கம் அமைப்பது ஆபத்து எனத்தெரிந்திருந்தும் அதில்தான் கால்வைப்போம் என த.தே.கூட்டமைப்பினர் அடம்பிடித்தால் மீண்டும் ஆயுதமேந்திப்போராடும் நிலை மைகள் தோற்றம்பெறும்.

நெற்றிப்பொறியன்

SHARE