தேசிய தடகளம்: தமிழக வீரருக்கு தங்க பதக்கம்

567

மாநிலங்களுக்கு இடையிலான தேசிய சீனியர் தடகள போட்டி உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் நடந்து வருகிறது. இதன் 2–வது நாளான நேற்று நடந்த ஆண்களுக்கான நீளம் தாண்டுதலில் தமிழக வீரர் விக்னேஸ்வரன் 7.90 மீட்டர் தூரம் தாண்டி தங்கப்பதக்கம் வென்றார்.

விக்னேஸ்வரன் சென்னை பிராட்வேயில் உள்ள செயின்ட் ஜோசப்ஸ் ஸ்போர்ட்ஸ் அகாடமியில், பயிற்சியாளரும், மத்திய கலால் வரி சூப்பிரண்டுமான பி.நாகராஜனிடம் பயிற்சி பெற்று வருகிறார்.

SHARE