“தேசிய தெளஹீத் ஜமாத்தை பாதுகாத்தது யார் என்பதை நேரம் வரும்போது வெளிப்படுத்துவோம்” – அமைச்சர் தலாதா அத்துகோரள

225

தடைசெய்யப்பட்ட தேசிய தெளஹீத் ஜமாத்தை வளர்த்து பாதுகாத்தது யார் என்பதை நேரம் வரும்போது வெளிப்படுத்துவோம் என நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் தலாதா அத்துகோரள தெரிவித்தார்.

அத்துடன் யுத்தத்தின் உச்சகட்டத்திலும் அதுதொடர்பான தகவல்களை வெளியிட ஊடகங்கள் மீது கை வைக்கவில்லை  என எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.அவர் ஊடகங்களுக்கு கைவைக்கவில்லை, மாறாக ஊடகவியலாளர்களை கடத்தினார். அதனால் ஊடகங்கள் மீது கைவைக்க தேவை இருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

இரத்தினபுரி பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

SHARE