தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு உள்ளிட்ட மூன்று அமைப்புக்களை தடை செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு, ஜமாதே மில்லாதே ஈப்ராஹிம் எனும் ஜே.எம்.ஐ மற்றும் விலயாத் அஸ் செய்லானி ஆகிய 3 அமைப்புக்களே இவ்வாறு தடை செய்யப்பட்ட அமைப்புக்களாக வர்த்தமானியில் பெயரிடப்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதல் மற்றும் பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்பில் தேசிய தௌஹீத் ஜமாத் அமைப்பு மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, பாராளுமன்றில் குறித்த அமைப்பினை தடை செய்யும் யோசனை நிறைவேற்றப்படுவதற்கு முன், தாக்குதலையடுத்து அவசர நடவடிக்கையாக குறித்த அமைப்பை தடை செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்திருந்தார்.
இந்நிலையில், தேசிய தௌஹீத் ஜமாத் உள்ளிட்ட 3 அமைப்புக்களை தடைசெய்ய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கையொழுத்துடன் அதி விசேட வர்த்தமானி பொது பாதுகாப்பு கட்டளைச்சட்டத்தின் அவசர ஒழுங்குவிதிகள் 75 – 1 பிரிவின் கீழ் வெளிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.