தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொறுப்பதிகாரிகள் 80 பேருக்கு இடமாற்றம்

95

 

பொறுப்பதிகாரிகள் 80 பேருக்கு இடமாற்றம் வழங்க பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் பொலிஸ் மா அதிபர் இந்த இடமாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதாக கூறப்படுகின்றது.

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் நியமனம் தொடர்பிலான நேர்முகத் தேர்வு இரண்டு மாதங்களுக்கு முன்னதாக நடைபெற்றுள்ளது.

புள்ளிகள் மற்றும் திறமைகளின் அடிப்படையில் இடமாற்றம்
இதற்கமைய, அதிகாரிகள் பெற்றுக்கொண்ட புள்ளிகள் மற்றும் திறமைகளின் அடிப்படையில் இடமாற்றம் செய்யப்படவுள்ளது.

குறிப்பாக மூன்றாண்டுகளுக்கு மேல் ஒரே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய பொறுப்பதிகாரிகள் பெரும்பாலும் இடமாற்றம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

SHARE