யுத்தம் முடிவடைந்து ஐந்து ஆண்டுகள் கடந்துள்ள போதிலும் கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் ஆகிய பகுதிகளில் உள்ள மக்கள் இன்றுவரை மீள் குடியேற்றப்படவில்லை.
இவர்கள் பல ஆண்டுகளாக நண்பர்கள்,உறவினர்கள், வீடுகளில் அகதிகளாக தங்கிவாழ்கின்றனர்.
இவர்களுடைய வீடுகள் மற்றும், பொது நிலையங்கள் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே மாதம் 28 ஆம் திகதி இம்மக்களின் மீள் குடியேற்றத்தை வழியுறுத்தி கவனஈர்ப்பு போராட்டம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினால் மேற்கொள்ளப்பட்டது.எனினும் இம்மக்களின் மீள்குடியேற்றம் பற்றிய ஆக்கப்பூர்வமான எந்த ஓரு நடவடிக்கையும் இதுவரை உரிய அதிகாரிகளால் மேற்கொள்ளகப்படவில்லை.
பரவிப்பாஞ்சான் பகுதிகள் உட்பட இடம்பெயர்ந்து வாழும் மக்களுக்குச் சொந்தமான காணிகள், வீடுகளில் ஆக்கிரமித்து நிலை கொண்டுள்ள இராணுவத்தினர் அங்கிருந்து உடனடியாக வெளியேறுவதுடன்,அந்த மக்களின் வீடுகளையும், நிலங்களையும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கோரியும்,இது தொடர்பில் சர்வதேச சமூகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தியும் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.