இலங்கையின் தேசிய மலர் பெயர் மாற்றம்..!

395

பொதுமக்களின் ஆலோசனைகளை கருத்திற் கொண்டு அறிஞர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவொன்றின் மூலம் நாட்டின் தேசிய மலர் “நீல அல்லி” என 1986ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. இந்நிலையில் குறித்த பெயரை “நீலோத்பலம்” என பெயர் மாற்ற அமைச்சரவையில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று கொழும்பில் இன்று இடம்பெற்றது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது பெறப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு,

01. இலங்கையின் தேசிய மலர்

பொதுமக்களின் ஆலோசனைகளை கருத்திற் கொண்டு அறிஞர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அடங்கிய விசேட குழுவொன்றின் மூலம் எமது நாட்டின் தேசிய மலர் “நீல அல்லி” என 1986ஆம் ஆண்டு பிரகடனப்படுத்தப்பட்டது. குறித்த மலர் கடந்த காலங்களில் சரியான முறையில் பயன்படுத்தப்படாமையினால் ஏற்பட்டுள்ள நெருக்கடியினை அடிப்படையாக வைத்து இலங்கையின் தேசிய மலர் சிங்கள மொழியில் “மானெல்” எனவும் தமிழ் மொழியில் “நீலோத்பலம்” எனவும் ஆங்கிலத்தில் “Blue Water Lily” எனவும் அழைப்பதற்கும், தேசிய மலர் காட்சிப்படுத்தப்படும் போது அதன் சரியான உருவமும், அதன் விஞ்ஞான பெயரும் காட்சிப்படுத்துவதற்கும், தேசிய மலரின் சரியான பெயர், அதன் சரியான உருவம் ஆகியவை தொடர்பில் போதுமான அளவு பிரசாரம் ஒன்றை மேற்கொள்வதற்கும் மஹாவெலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சர் எனும் ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மூலம் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

02. சர்வதேச ஓப்பந்தங்களில் மின்னணு தொடர்பாடல்களில் பயன்படுத்துகை மீதான ஐக்கிய நாடுகள் அமைப்பின் சமவாயத்தை வலுவாக்குதல்

மேற் கூறப்பட்ட சமவாயமானது சர்வதேச வியாபார சட்டம் தொடர்பான ஐக்கிய நாடுகள் ஆணைக்குழு (UNCITRAL) மூலம் வரையப்பட்டு, 2005 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்சபையின் அங்கீகாரத்தை பெற்றது.

இச் சமவாயத்தின்; நோக்கம் சர்வதேச ஒப்பந்தங்களின் போது அதனுடன் தொடர்புபடும் தொடர்பாடல் சந்தர்ப்பங்களின் போது இலத்திரனியல் உபகரணங்களை பாவிப்பது தொடர்பில் ஏற்படும் பிரச்சினைகளுக்காக பிரயோக தீர்வொன்றை பெற்றுக் கொடுப்பதாகும். இலங்கை 2006 ஆம் ஆண்டு குறித்த சமவாயத்தில் கையொப்பமிட்டதோடு, 2006 ஆம் ஆண்டு 19 இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் தொடர்பான சட்டமூலத்தை தயாரிக்கும் போது மேற் கூறப்பட்ட சமவாயத்தில் உள்ளடங்கியுள்ள சில அடிப்படை அம்சங்களையும் இணைத்துக் கொண்டது.

இதனடிப்படையில் மேற் கூறப்பட்ட சமவாயத்தின் அம்சங்களை செயற்படுத்துவதற்கான அதிகாரத்தை வெளி விவகார அமைச்சுக்கு வழங்குவதற்கும், 2006 ஆம் ஆண்டு 19 ஆம் இலக்க இலத்திரனியல் கொடுக்கல் வாங்கல் சட்ட மூலத்தை பலப்படுத்தி, குறித்த ஒப்பந்தத்துடனான உறவை பலப்படுத்துவதற்கு தேவையான திருத்தங்களை முன்வைப்பதற்கு ICTA நிர்வனத்திற்கு அதிகாரத்தை வழங்கவும் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

03.இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் கீழ் இயங்கும் தேங்காய் ஆராய்ச்சி நிலையம் மற்றும் மக்கள் சீன குடியரசின் தேங்காய் ஆராய்ச்சி நிலையத்தின் அயன மண்டல விவசாய ஆராய்ச்சி கற்பித்தல் நிலையத்திற்கும் இடையில் கைச்சாதிடப்பட உள்ள புரிந்துணர்வு உடன்படிக்கை

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் கடந்த மார்ச் மாதம் சீனாவுக்கு சுற்றுப்பயணம் மேற் கொண்டிருந்த போது மேற் கூறப்பட்ட ஒப்பந்தம் தொடர்பில் இணக்கப்பாட்டுக்கு வந்தமை தொடர்பான பூரண அனுமதியை பெற்றுக் கொள்வதுடன், அதிலிருந்து எதிர்வரும் 03 ஆண்டுகளுக்கு குறித்த ஒப்பந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள அம்சங்களை நடைமுறைப்படுத்துவதற்கும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் லக்ஸ்மன் கிரியெல்லவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

04. பொல்ஹாவெல, பொதுஹர, அலவ்வ ஒன்றிணைந்த நீர் வழங்கல் திட்டம், குண்டலசாலை – ஹாரகம நிர்வழங்கல் திட்டம், மதுகம, தொடங்கொட, அஹலவத்தை மற்றும் நேபட ஒன்றிணைந்த நீரவழங்கல் திட்டம் 
மேற்படி வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச் செல்வதற்கும், அதன் மிகுதி வேலைகளை செய்து முடிப்பதற்கும், அவ்வேலைத்திட்டத்தை செய்து முடிப்பதற்கு தேவையான நிதியினை பெற்றுக் கொள்வதற்கும் குறித்த நிர்வனங்களுடன் ஒப்பந்தங்களில் ஈடுபட தேவையான நடைமுறைகளை மேற் கொள்ளும்படி வெளிநாடு வளங்கள் திணைக்களத்திடம் கேட்டுக் கொள்வதற்கு நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் நீர்ப்பாசன அமைச்சர் ரவ+ப் ஹக்கீமினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

05. 2015 செப்டம்பர் மாதம் 25ஆம் திகதி கொண்டாடப்படுகின்ற உலக சமுத்திர தினத்தை முன்னிட்டு 2015 செப்டெம்பர் 21 முதல் 27 வரை இலங்கை சமுத்திர அலுவல்கள் பற்றிய வாரமாக பிரகடனப்படுத்தல் 
ஐக்கிய நாடுகள் அமைப்பின் முழு ஆதரவுடன் சர்வதேச சமுத்திர அமைப்பினால் கப்பல் துறை மற்றும் சமுத்திர பணிகளின் முன்னேற்றம் உலகப் பொருளாதார அபிவிருத்தியை நோக்காகக் கொண்டு இலங்கையிலும் 2015 செப்டெம்பர் மாதம் 25 ஆம் திகதியை உலக சமுத்திர தினமாகக் கொண்டு அதனைக் கொண்டாடுவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இம்முறை உலக சமுத்திர தினத்தின் தொனிப்பொருள் “சமுத்திரக் கல்வியும் பயிற்சியும்” என்பதாகும். இதனடிப்படையில் 2015 செப்டெம்பர் மாதம் 21 முதல் 27 வரையிலான காலப் பகுதியை இலங்கை சமுத்திர அலுவல்கள் பற்றிய வாரமாக பிரகடனப் படுத்துவதற்கும், அக்காலப் பகுதியினுள் உத்தேச நிகழ்ச்சித் திட்டங்களை அமுல்படுத்துவதற்கும் துறைமுகங்கள் மற்றும் கப்பல் துறை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

06. சமூகமயமாக்கப்பட்ட பயிலுநர்களுக்கான சுயதொழில் நிவாரணக் கடன் வழங்கும் திட்டம்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் பல்வேறு நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்டிருந்தது.

மனித நேய நடவடிக்கைகளின் இறுதியில் பாதுகாப்புப் படையினரிடம் சரணடைந்த மற்றும் கைது செய்யப்பட்டதன் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயமாக்கப்பட்ட பயிலுநர்களுக்கான சுயதொழில் நிவாரணக் கடன் திட்டத்தினை நடைமுறைப் படுத்துவதற்காக 2012 ஆம் ஆண்டு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டது. இந்த சுயதொழில் கடன் திட்டத்தின் கீழ் 2014.12.31 திகதி வரை 302 மில்லியன் ரூபா வழங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்தின் மூலம் மேலும் கடனைப் பெறுவதற்கான நோக்கில் 5,754 விண்ணப்பங்கள் விண்ணப்பிக்கப்பட்டுள்ளன.

ஆகவே மேற்படி நிவாரணக் கடன் திட்டத்தின் நடைமுறைகளில் அவசியமான மாற்றங்களுடன் இலங்கை வங்கி, மக்கள் வங்கி, லங்கா புத்ர வங்கி மற்றும் இலங்கை சேமிப்பு வங்கியின் மூலம் மேலும் தொடர்ந்து நடைமுறைப் படுத்துவதற்காக மீள் குடியேற்றம், புனர்நிர்மானம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி.எம். சுவாமிநாதனிhல் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

07. இலங்கை தபால் திணைக்களம் அரசஃ அரச சார்பானஃ தனியார் நிறுவனங்களுடன் இணைந்து நடைமுறைப் படுத்தப்படுகின்ற சேவைகளுக்காக உத்தேச செயன்முறைகளுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுக் கொள்ளல 
200 வருடங்களுக்கு மேலான வரலாற்றுக்கு உரிமை கோருகின்ற இலங்கை தபால் திணைக்களம் இதுவரை நவீன தொழில்நுட்பம் மற்றும் நவீன சந்தைப்படுத்தல் போன்ற கருத்துக்களை பயன்படுத்தி மாறுபடுகின்ற நுகர்வோர் துறைகளுக்கு பொருத்தமானவாறான வினைத்திறன் மற்றும் பண்புசார் சேவைகளை வழங்கும் நிகழ்ச்சித் திட்டங்கள் செயற்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இங்கு தபால் திணைக்கள கூட பல்வேறு அரச, அரச சார்பான மற்றும் தனியார் துறைகளுக்காக முகவர் சேவைகளைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும்.

இங்கு தபால் திணைக்களத்திற்கு 653 தபாவகங்களும் 3410 உப தபாலகங்களும் உரித்தாக இருப்பதோடு, அதில் 653 தபாலகஙடகளுக்கு நவீன தொழில்நுட்பத்தினை வழங்கி வலையமைப்பு செய்யும் நடவடிக்கைகள் வெற்றியரமாக பூர்தி செய்து அதன் மூலம் பல்வேறு சேவைகளை வழங்குதல் இதுவரையிலும் இடம் பெற்று வருகின்றது.

அரசிற்கு செலவுச் சுமைகள் ஏற்படாத வண்ணம் நிறுவனத்தை நடாத்திக் கொண்டு செல்வதை நோக்காகக் கொண்டு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்காக நவீன சந்தைப்படுத்தல் எண்ணக்கரு மற்றும் தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பல்வேறு வேலைத்திட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கு முஸ்லிம் சமய அலுவல்கள் மற்றும் தபால் அமைச்சர் எம்.எச்.ஏ. ஹலீமினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

08. பொலன்னறுவை மாவட்டச் செயலகத்திற்கான நான்கு மாடி கட்டிடமொன்றை நிர்மாணித்தல்

வட மத்திய மாகாணத்திற்குரிய மாவட்டமொன்றான பொலன்னறுவை மாவட்டமானது 07 பிரதேச செயலகங்களையும் 295 கிராம சேவை பிரிவுகளையும் தன்னகத்தே கொண்ட 3337.9 கிலோ மீற்றர் பரப்பளவுடைய ஓர் பிரதேசமாகும். பொலன்னறுவை மாவட்டச் செயலக கட்டிடம் 53 ஆண்டுகள் பழைமை வாய்ந்ததாகும். அத்துடன் அக்கட்டிடத் தொகுதியினுள் ஏனைய திணைக்களங்கள் மற்றும் அமைச்சுக்குரிய 25 இற்கு அதிகமான நிறுவனங்கள் இயங்குகின்றன. இதன் பராமரிப்பு பணிகள் மிகவும் கடினமாக உள்ளது.

ஆதலால் மக்களுக்கு வினைத்திறன் வாய்ந்ததும், பயனுறுதி வாய்ந்ததுமான சேவையொன்றினை வழங்கக் கூடிய வகையில் இடவசதியுடன் கூடிய சிறந்த கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கும் அது தொடர்பான ஏனைய விடயங்களை செய்வதற்கும் உள்நாட்டலுவல்கள் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேராவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

09. விதவைகள் மற்றும் வீட்டுத் தலைவிகளாக உள்ள பெண்களைவ லுவூட்டுவதற்கான கருத்திட்டப் பிரேரணைகளை சமர்ப்பித்தல் 
ஒட்டுமொத்த சனத்தொகையில் 51 சதவீதத்திற்கும் மேற்பட்டதாக உள்ள இலங்கைப் பெண்களின் சனத்தொகையில் 23 சதவீத மானோர் யுத்தத்தினால் விதவையாக்கப்பட்டவர்கள் என இனங் காணப்பட்டுள்ளனர். நாட்டின் அபிவிருத்தி செயற்பாட்டின் போது பொருளாதார, சமூக, சூழல் ரீதியாக மிகவும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ள இப்பிரிவினருக்கு முன்னுரிமைகள் வழங்கி செயற்படுவது அத்தியவசியமானதாகும். இவ்வாறான வேலைத்திட்டமொன்றை வட மாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், வவுனியா, முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்களிலும், கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு ஆகிய மாவட்டங்களிலும், வட மத்திய மாகாணத்தின் அநுராதபுரம், பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களிலும் நடைமுறைப்படுத்த மகளிர் அலுவல்கள் அமைச்சர் கே.டி.எம். சந்திராணி பண்டாரவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

10.இலங்கையின் பங்கேட்பு வீடமைப்பு அபிவிருத்தியை அடையாளப்படுத்துகின்ற “தேசிய வீடமைப்புத் தினத்தை” பிரகடனம் செய்தல் 
இலங்கை வாழ் அனைத்து பிரஜைகளுக்கும் வீடு ஒன்றை பெற்றுக் கொடுக்கும் அரச கொள்கையின் அடிப்படையில் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்ற தேசிய வீடமைப்பு அபிவிருத்தி வேலைத்திட்டத்தினை பயன்மிக்கதாக செயற்படுத்தும் பொருட்டு இத்திட்டம் முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்ட திகதியான ஜுன் மாதம் 23 ஆம் திகதி “தேசிய வீடமைப்பு தினம்” என பிரகடனப்படுத்தவதற்கும், அத்தினத்திற்கு சமாந்தரமாக ஜுன் மாதம் 23ஆம் திகதி ஆரம்பிக்கும் வாரம் “வீடமைப்பு வாரம்” என பிரகடனப்படுத்துவதற்கும், அவ்வாரத்தில் வீடமைப்பு பணிகள் சிலவற்றை நடைமுறைப்படுத்துவதற்கும் வீடமைப்பு மற்றும் சமூர்த்தி அமைச்சர் சஜீத் பிரேமதாசவினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.

11. காலி புதிய பெண்களுக்கான மகப்பேற்று வைத்தியசாலை நிர்மானிப்பதற்கான திட்டம்

2004 ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமி அனர்த்தத்தின் பின் ஜேர்மனியின் கெல்மட் கோல் அடிப்படையின் மூலம் இலங்கையில் காலி நகருக்கு அண்மையில் புதிய மகப்பேற்று வைத்தியசாலை ஒன்றை அமைப்பதற்கு Senok Trade Combine (Pvt) Ltd உடன் இணைந்து ஆரம்பிக்கப்பட்டதுடன் பின்னர் ஏற்பட்ட மூலதனம் மற்றும் நிதி ஒதுக்கீடு பற்றாக்குறை காரணத்தினாலும் நிரமாணப்பணிகள் 2008 ஆம் ஆண்டில் இடைநிறுத்தப்பட்டது. இதன் தேவையை கவனத்திற் கொண்டு அமைச்சரவையினால் நியமிக்கட்ட நிலையான கொள்ளல் குழுவின் சிபார்சின் அடிப்படையில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள சுகாதாரம் மற்றும் சுதேச வைத்திய அமைச்சர் ராஜித சேனாரத்ன வினால் முன்வைக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளது.national-flower

SHARE