தேடுதல் வேட்டையில் இலங்கைப் புலனாய்வாளர்கள்!- புலிகளின் 300று வரையான முப்படைகளின் தளபதிகள்..!

859

 

தேடுதல் வேட்டையில் இலங்கைப் புலனாய்வாளர்கள்!

தமிழர் ஒருங்கிணைப்பு குழு (TCC) புலத்தில் பல குழுக்களாகி சிதறிவிட்டது!

அனைத்துலகத் தொடர்பகம் அனைத்து நாடுகளுக்கும் ஒவ்வொரு தொடர்பகங்களாக மாறிவிட்டன!

தலைமைச் செயலகம் தலைவரின் அழைப்பை ஏற்று அமைதியாகிவிட்டது!

காரணம் என்ன..?
அதாவது புலம்பெயர் தேசத்திற்குள் கடந்த 2009ம் ஆண்டிற்கு பின்னர் சிங்கள புலனாய்வாளர்களின் ஆதிக்கம் மிகவும் கடுமையாக இயங்க ஆரம்பித்ததே இதற்கான முதன்மைக் காரணம் எனலாம்.

புலிகளின் முக்கிய கடல்,தரை,வான் தாக்குதல் படையணிகளை வழிநடத்திய இடைநிலைத் தளபதிகளில் சுமார் 300று பேர்வரை போர் முடிந்த ஒருமாதகால இடைவெளிக்குள் இராணுவத்தின் ஆரம்பகட்ட வதைமுகாம்களில் இருந்து தப்பிவட்டார்கள் என்பதை இலங்கை இராணுவம் கடந்த 2010ம் ஆண்டு அதன் சர்வதேச புலனாய்வாளர்கள் ஊடாக உறுதிசெய்துவிட்டார்கள்.

எப்படி இவர்கள் தமது இரும்புப் பிடியிலிருந்து தப்பினார்கள் என்பதை அவர்கள் அறிந்திராவிட்டாலும், தப்பிய அனைவரும் விடுதலைப் புலிகளின் பாரிய தாக்குதல்களை முன்நின்று நடத்திய இடை நிலைத் தளபதிகள் என்பதுமட்டும் உண்மை.

மேலும் புலிகளின் இந்த இடைநிலைத் தளபதிகளில் யார் யார் இறுதிப் போரின்போது தப்பினார்கள் என்பதை அடையாளப்படுத்தி கூறக்கூடிய தகவல்கள் எதுவும் இராணுவத்தினரிடம் இல்லை என்பதே உண்மை.

இதையும்விட புலத்துக்குள் வருகைதந்த ஒவ்வொரு தளபதிகளும் தத்தமது குடும்பங்களுடன் தொடர்புகொண்டு தமது இருப்பை உறுதிசெய்து மிகவும் அமைதியாக வாழ்ந்துவருகிறார்கள்.

மேலும் இவர்களின் வெளியேற்றம் ஊடாக உலகம் பூராகவும் இயங்கிவந்த விடுதலைப் புலிகளின் ஆதரவுத் தளத்திற்கு பாரிய உற்சாகம் ஏற்படப்போவதை உணர்ந்த இலங்கை சிங்கள புலனாய்வாளர்கள் முதல்கட்டமாக தமது முறியடிப்பு புலனாய்வு நடவடிக்கையை மேற்கொள்வதற்காக புலம்பெயர் தேசங்களை இலக்குவைத்து வேக வேகமாக நகர்ந்தார்கள்.

இந்த முறியடிப்பு புலனாய்வின் பணியானது புலம்பெயர் தேசங்களில் மக்களோடு மக்களாக இருந்து புலம்பெயர்ந்த புலிகளில் யார் யார் எந்த எந்த நாடுகளில் இருக்கிறார்கள் என்பதை அறிவதும், புதிதாக புலத்திற்கு வருகைதந்தவர்களில் மிகவும் முக்கிமான தளபதிகள் எங்கெங்கு இருக்கிறார்கள் என்பதை அறிவதிலும் மட்டுமே தமது அடிப்படை கவனத்தை செலுத்திவந்தார்கள்.

ஆனால் புலம்நோக்கிவந்த மேற்குறிப்பிட்ட தளபதிகள் அனைவரும் இலங்கை புலனாய்வாளர்களின் ஊடுருவலை ஏற்கனவே தாம் எதிர்பார்த்திருந்ததன் காரணமாக அவர்கள் தாம் தஞ்சம்புகுந்த நாடுகளுக்குள் தமது பெயர்களை அநேகம் இறந்த தமது போராளி நண்பர்களது பெயரை புனைபெயராக தாம் அறிமுகம்செய்து தமக்கான சுயமான பாதுகாப்பினை உறுதிசெய்தார்கள்.

இதன்காரணமாக இலங்கையின் சர்வதேச புலனாய்வாளர்களுக்கு புலிகளின் இந்த இடைநிலைத் தளபதிகளை இனங்காண்பதில் பாரிய சிக்கல்நிலை ஏற்பட்டது. இதனை உணர்ந்த அவர்கள் ஏற்கனவே புலம்பெயர் தேசங்களில் இயங்கிவந்த புலிகளின் ஆதரவுத் தளங்களை இலக்குவைக்க ஆரம்பித்தார்கள்.

ஆனாலும் புலம்பெயர் தளத்திலிருந்த எவருக்கும் இந்த இடைநிலைத் தளபதிகளை முன்னர் தெரிந்திருக்க வாய்ப்புக்கள் இல்லாததன் காரணத்தினால் அவர்கள் ஊடாகவும் இலங்கை புலனாய்வாளர்களால் பெரிதாக எதையும் அறியமுடியாமல் போய்விட்டது.

மேலும் புலத்திலிருந்த புலிகளின் செயற்பாட்டாளர்கள் எவரும் தாம் தாயகத்தில் இருந்தபோதுகூட முன்னரோ,பின்னரோ அவர்கள் புலிகளின் எந்தவொரு துறைகளிலும் இருக்காததன் காரணமாக அவர்களுக்கு புலம்நோக்கிவந்த தமது உறவுசார்ந்த போராளிகளையும், பொதுவாக எல்லோரும் அறிந்திருந்த எமது உயர்மட்ட தளபதிகள் சிலரையும் மட்டுமே தாமும் அறிந்துவைத்திருந்தார்கள்.

மேலும் அனைத்துலக தொடர்பகத்தில் பணிபுரிந்த போராளிகள்கூட இந்த இடைநிலைத் தளபதிகளை தாமும் அறிந்திருக்கவில்லை.

இதில் புலத்திலிருந்து பகிரங்கமாக மக்கள்மத்தியில் செயற்பட்டுவந்த முன்னாள் போராளிகளான நெடியவன், நந்தகோபன், இரும்பொறை ஆகியவர்களால்கூட இந்த இடைநிலைத் தளபதிகளை இனங்காணமுடியாதென்பதே உண்மை நிலவரம்.

மேலும் புலத்திலிருந்து செயற்பட்டுவந்த புலிகளின் நிதிக்கட்டமைப்பை இலங்கை புலனாய்வாளர்கள் தமது வலைக்குள் வீழ்த்தி அவர்களில் அநேகமானவர்களை தமது தேவைகளுக்காக இன்று புலத்தில் மாற்றிவிட்டுள்ளார்கள் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

இவர்களில் ஒருவரான நெடியவன் என்பவர் நோர்வேயில் நோர்வேயின் பொலிசாரினால் கைதுசெய்யப்பட்டு தற்போதுவரை அவர் பொலிசாரின் கண்காணிப்பினில் இருந்துவருகின்றார்.

மற்றும் நந்தகோபன் என்பவர் தற்போதுவரை கொழும்பில் உள்ள இலங்கை புலனாய்வாளர்களின் பிரத்தியேகமான மறைவிடமொன்றில் தங்கியுள்ளார்.

இதில் மற்றைய நபரான இரும்பொறை என்பவர் கொழும்பிலிருக்கும் நந்தகோபனின் உதவியுடன் பெல்ஜியத்தில் இருந்துகொண்டு இலங்கை புலனாய்வாளர்களின் மறைமுக வேலைத்திட்டங்களை புலத்தினில் அரங்கேற்றி வருகின்றார்.

இதைவிட புலத்தில் தற்போதுவரை புலிகளால் முன்பு இயக்கப்பட்ட எந்தவொரு கட்டமைப்புக்குள்ளும் புலிகளென்று கூறுவதற்கு எவருமே இல்லை என்பதே உண்மை நிலவரம்.

ஆனால் புலிகளால் வழிநடத்தப்பட்ட சில ஆதரவாளர்கள் மட்டும் தாம் இருக்கும் நாடுகளில் இருந்து புலிகளின் மாவீரர் நாள் நிகழ்வுகளையும், மாவீரர்களுக்கான பொதுவான வணக்க நிகழ்வுகளையும், இனவழிப்பு படுகொலை நினைவு நாட்களையும் ஆங்காங்கே தமக்கு தெரிந்திருந்த முன்னைய அனுபவத்தோடு தற்போதுவரை நடத்திவருகின்றார்கள்.

மேலும் கொழும்பிலிருக்கும் நந்தகோபன் ஊடாக இலங்கை புலனாய்வாளர்கள் புலத்திலிருக்கும் இரும்பொறையை பயன்படுத்தி பழையமாதிரியான பாணியில் அதாவது முன்னைய புலிகளின் ஆதரவுத் தளமான “தமிழர் ஒருங்கிணைப்பு குழுவை” தமக்கு சாதகமானவர்களை வைத்து இயக்க முற்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.

மேலும் தற்போதுவரை இயங்கிவரும் தமிழர் ஒருங்கிணைப்பு குழுவை நூறு வீதமும் புலிகள் இயக்கவில்லை என்பதற்கு உறுதியான பலமான ஆதாரமாக கொழும்பில் இருக்கும் நந்தகோபனை எடுத்துக்கொள்ளலாம்.

ஏனென்றால் நந்தகோபன் ஒரு போராளியாக இருந்துகொண்டு எப்படி அவர் கொழும்புக்கு புலத்திலிருந்து சென்றார்? என்பதும், இதே நந்தகோபன்தான் முன்பு தாயகத்திலிருந்தும், பின்னர் புலத்திலிருந்தும் மேற்குறிப்பிட்ட “தமிழர் ஒருங்கிணைப்பு குழுவை” இயக்கிவந்தார் என்பதும் உண்மை.

உண்மையில் புலிகளின் நிதிப்பிரிவில் குறிப்பாக வெளிநாடுகளுக்கான நிதி நடவடிக்கைகளுக்காக பொறுப்புவகித்த எந்தவொரு பொறுப்புவாய்ந்த போராளிகளுக்கும் புலிகளின் இடைநிலைத் தளபதிகளை தாம் தாயகத்தில் இருந்த காலத்தில்கூட தெரியாதிருந்ததன் காரணமாகவே தற்போதுவரை அவர்களால்கூட இலங்கை புலனாய்வாளர்களுக்கு புலம்நோக்கிவந்த எமது எந்தவொரு தளபதிகளையும் தாம் இனங்காட்டி கொடுக்கமுடியாமல் இருப்பதற்கும் உண்மை காரணம்.

மேலும் இலங்கை புலனாய்வாளர்கள் தாம் தேடிவந்த புலிகளின் தளபதிகளை புலம்பெயர் கட்டமைப்புக்குள் ஊடுருவியும் அவர்களை தம்மால் இனங்காண முடியாத ஏமாற்றத்தின் காரணமாகவே அவர்கள் தமது முறியடிப்பு தந்திரத்தை புலத்தில் பயன்படுத்த முடிவுசெய்தார்கள்.

இலங்கை புலனாய்வாளர்களின் இந்த முறியடிப்பு தந்திரத்தின் செயற்பாடுகளை புலம்பெயர் மக்கள் ஏற்கனவே தாம் அறிந்திருப்பதற்கும், அன்றி அனுபவமாக கண்டிருப்பதற்கும்கூட பெரிதாக சந்தர்ப்பம் இருந்திருக்க வாய்ப்பில்லை.

ஆனால் தாயகத்திலிருந்த எமது மக்களுக்கு இலங்கை புலனாய்வாளர்களின் முறியடிப்பு தந்திரங்களின் வடிவங்கள் அனைத்தும் எப்படி இருக்கும் என்பதை அவர்கள் மிகவும் அனுபவரீதியாக அறிந்துவைத்துள்ளார்கள்.

அப்படி என்னதான் இலங்கை புலனாய்வாளர்களின் முறியடிப்பு நடவடிக்கைகள் புலத்தில் நடந்துவிட்டன என்பதற்கான பதில் இதோ….

இதன் விரிவான உண்மைத் தகவல்களை அடுத்துவரும் பதிவினில் எதிர்பாருங்கள்….!

SHARE