தேயிலையில் தங்கத்தூளை கலந்து கொண்டு சென்றவர் சென்னை விமானத்தளத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து சென்ற ஒருவரே நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். இவர் வழமையாக இலங்கைக்கு சென்று திரும்பும் பயணியாவார்.
இந்தநிலையில் இவர் தேயிலை தூள் பக்கட்டுக்கள் பலவற்றை தம்முடன் எடுத்து வந்துள்ளார்.
எனினும் 500 கிராம்களை கொண்ட 6 பக்கட்டுக்களில் தேயிலை தூளுடன் தங்க தூளும் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த தங்கத்தூளின் நிறை 1.4 கிலோகிராம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.